தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டிய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கைது!!! விடுவிக்கக் கோரி காவல்நிலையம் முற்றுகை!!!

கடையநல்லூரில் 01.08.2011 திங்கள் அதிகாலை 1:00 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பில் கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் ஜெயலலிதாவை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பொழுது காவல் துறையினரால் நகர டவுண்கிளை செயலாளர் ஹாஜா மைதீன் மற்றும் மாணவர் அணி செயலாளர் ரமீஸ் ஹஸன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதனை கேள்விப்பட்ட நிர்வாகிகள் நள்ளிரவில் காவல் நிலையத்தை சகோதரர்களுடன் முற்றுகையிட்டனர்.அப்பொழுது கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜ்மீம் அவர்களிடம் ஜனநாயக முறைப்படி தமிழகம் முழுவதும் இது போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.ஆகவே கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவல் செயலாளர் சகோ.சுலைமான் வலியுறுத்தினார்.அதற்கு அதிகாலை 5:00 மணிக்கு விடுவிப்பதாக கூறிய துணைக் கண்காணிப்பாளர் அவர்களை விடுதலை செய்யாமல் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.இதனைக் கேள்விப்பட்ட கடையநல்லூரைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.( நன்றி கடையநல்லூர் TNTJ)




கடையநல்லூர்: முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டிய கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை இன்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் ஜெயலலிதாவி்ன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆர்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நகர செயலாளர் காஜாமூகைதீன், மாணவர் அணி செயலாளர் ரமீத் ஹாசன் உள்பட ஏராளமானோர் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டினர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த புளியங்குடி டிஎஸ்பி சமீம் மற்றும் போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

நேற்று ரமலான் நோன்பு துவக்க நாள் என்பதால் முஸ்லீம்கள் அனைவரும் நோன்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 2 பேர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்ததும் நகராட்சி பகுதி முஸ்லீம்கள் பெரும்பாலானோர் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை விட்டுவிடுவதாகக் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.

ஆனால் போலீசார் உறுதியளித்தபடி அவர்களை விடுவிக்காததால் மீண்டும் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர். போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டும் யாரும் கலைந்துபோகவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. தட்ஸ்தமிழ்