தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

இத்தாலியில் பர்தா அணிவதற்கு தடை


முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்பதாக சட்டம் நிறைவேற்றியுள்ளது  பிரான்ஸ் . அந்த வரிசையில் இத்தாலியும் தற்போது இடம்பெறுகிறது.

முகத்தை மூடும் பர்தா ஆடைகளால் பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது என தடைவிதிக்கும் நாடுகள் கூறுகின்றன. கோடைகால விடுமுறைக்கு பின்னர் பர்தாவுக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என இத்தாலி நாடாளுமன்றம் இன்று தெரிவித்தது.

இத்தாலியின் மத்திய வலது கூட்டணியான பிரதமர் பெர்லுஸ்கோனி அரசு இந்த பர்தா தடைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி அரசியலமைப்பு விவகார கமிட்டி கூறுகையில், "இந்த பர்தா தடை மசோதா கருத்தை முதலில் குடியேற்றத்திற்கு எதிரான வடக்கு லீக் அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்த தடைச்சட்டம் குறித்து செப்டம்பர் மாதம் விவாதிக்கப்படும்" என தெரிவித்தது.

பெர்லுஸ்கோனிக்கு இத்தாலி நாடாளுமன்றத்தின் மேல் மற்றும் கீழ் சபைகளில் பெரும்பான்மை உள்ளது. எனவே முஸ்லிம் பெண்கள் இத்தாலியில் பர்தா அணிய தடைவிதிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

பிரான்சில் இந்த ஆண்டு துவக்கத்தில் பர்தா ஆடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
                                                      Read More  

முகத்திரை சட்டத்தின் நெறிமுறைகள்

எந்த வகையான முகத்திரையை பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது?