தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

அஸ்ஸாம் முதல்வரை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்:

கைது செய்ய வசதி இல்லாமல் கலைந்து செல்லுங்கள் எனக் கூறிய காவல்துறை! அல்ஹம்துலில்லாஹ்!!
லவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, அகதி முகாம்களில் நிவாரணப் பணிகளில் மெத்தனம் காட்டி, முஸ்லிம்களின் மக்கட்தொகைப் பெருக்கமே கலவரத்திற்குக் காரணம் என்று கூறிய அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகையைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்திபவன் அருகில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தருண் கோகையை முதல்வர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது முற்றுகைப் போராட்டம் என்பதால் காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்ய வேண்டும் ஆனால் மாறாக காவல்துறையே கூட்டம் ”அதிகமாக உள்ளது இவர்களை கைது செய்யும் அளவிற்கு எங்களிடம் வசதி இல்லை எனவே அனைவரும் போராட்டம் முடிந்ததும் கலைந்து செல்லுங்கள்” எனக் கூறினர். அல்ஹம்துலில்லாஹ்!
காரணம், ஓரிரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் என கூட்டத்தை பார்த்த யாரும் நம்ப முடியாத அளவிற்கு ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்.
புகைப்படங்கள்.

120920121149580121120920121149580165120920121149580193
120920121149580219120920121149580245120920121149580273
120920121149580373120920121149580340120920121149580315
120920121149580452120920121152160978120920121152170065
120920121152170092120920121152170113120920121152170202
120920121152170176120920121152170226120920121152170247
120920121152170275120920121152170325120920121152170386
120920121152170412120920121152170437120920121152170465
120920121152170493120920121152170560120920121152170596
120920121152170645IMG_0104120920121152170621
IMG_0116IMG_0105IMG_0115
IMG_0117IMG_0118IMG_0119
20120912_17180320120912_171918IMG_0121
விரிவான செய்தி பின்னர் வெளியிடுப்படும்.

புதன்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெருநாள் திடல் தொழுகை.2012




தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின்  சார்பாக பெருநாள் திடல் தொழுகை கடந்த 20.08.12 அன்று அத்தர் ஜமாஅத் பள்ளிகூடத்தில் வைத்து மாவட்ட பேச்சாளர்  A.W.நாசர் அவர்கள் பெருநாள் உரையுடன் நடைபெற்றது. இதில் ஆண்கள்,பெண்கள், என ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்

ஆசாத்நகர் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம் 2012

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம் 19.08.12 செய்ப்பபட்டது.  மொத்தம் 56,000 க்கு 566 நபர்களுக்கு பொன்னிஅரிசி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு,  மொத்த பொருள்களும் பேக் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

வெள்ளி

தர்ஹாக்களில் நடப்பது என்ன.ஓர் புலனாய்வு ரிப்போட் !!!!!


                    தர்ஹாக்களில் நடப்பது என்ன 01.



                                           தர்ஹாக்களில் நடப்பது என்ன 02.


                                           தர்ஹாக்களில் நடப்பது என்ன 03.



                                           தர்ஹாக்களில் நடப்பது என்ன 04.



                                           தர்ஹாக்களில் நடப்பது என்ன 05.



                                           தர்ஹாக்களில் நடப்பது என்ன 06.


                                           தர்ஹாக்களில் நடப்பது என்ன 07.



                                           தர்ஹாக்களில் நடப்பது என்ன 08.



                                           தர்ஹாக்களில் நடப்பது என்ன 09.


மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு. 2012 ரமலான் தொடர் பயான்



மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.1
 
 
மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.2
 


மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.3
 
 


மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.4
 
 
 

மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.5




மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.6




மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.7




மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.8




மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.9




மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.10



மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.11



மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.12




மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.13



மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் தீர்வு.14

ஜும்மா தொழுகைக்கு தடை போட்ட காவல் துறை, புரட்சியுடன் நடந்த புதிய ஜும்மா

S 
கோவை மாவட்டம் ஜீ.எம் நகர் (கௌஸ் முஹைதீன் நகர்) கிளை தொடங்கி பல ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த மாதம் மாநில புள்ளி பட்டியலில் கோவை ஆறாவது இடத்தில் (கிளைகளின் தரவரிசையில் ஜீ.எம் நகர் பதினோராவது இடம்) வந்தமைக்கு காரணம் இந்த கிளைதான், பல கிளைகளுக்கு முன்னுதாரணமாக தாவா பணிகள் செய்த காரணத்தினால் வல்ல ரஹ்மான் கருணையினால்  குறைந்த விலையில் இடமும் முன்பணம் கொடுத்தவுடன் இடத்தின் உரிமையாளர் இடத்தை பயன்படுத்திகொள்ளவும் அனுமதி தந்துவிட்டார்.

ஜமாத்தின் அலுவலகம் அமைக்கும் பணியை கிளை நிர்வாகிகள் செய்துவந்தனர், இந்த வாரம் ஜும்மா துவங்கலாம் என்ற முடிவோடு பணிகள் துரிதமாக நடைபெற்றன. வியாழன் அன்று தாசில்தார் அவர்கள் நம்முடைய இடத்திற்கே வந்து முறையாக கடிதம் கொடுங்கள், நாங்கள் அனுமதி தருகிறோம் என்றார், கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ள மாநில நிர்வாக ஆலோசனையுடன் கீழ்க்கண்ட கடிதம் கொடுக்கப்பட்டது

இக்கடிதம் பூரண உடல்நலதுடனும் ஏக இறைசிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக, சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக,
கோவை மாவட்டம் ஜீ.எம் நகர்(கௌஸ் முகைதீன் நகர்) பகுதியில் எங்களுடைய ஜமாத்தின் கிளைக்கான  அலுவலகம்  அமைத்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்,
மாநில மாவட்ட நிர்வாகம் செயல்படுத்திவரும் பணிகளான முதியோர் இல்லம், ஆதரவற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் இல்லம், கல்விப்பணிகள், ஏழைகளுக்கான கல்வி உதவிகள், இலவச ட்யூஷன் வகுப்புகள், மாணவர்களுக்கான கோடைகால வகுப்புகள், இலவச கணினி வகுப்புகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், இஸ்லாம் கூறும் ஏழைகளுக்கான ரமளான்-பக்ரீத் உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள்  போன்ற இன்னும் சிறப்பான பணிகளை செய்ய உள்ளோம், தாங்களும் தங்கள் நிர்வாகமும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கடிதம் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் கிளை அலுவலகத்திற்கு நேரில் வந்து தொழுகை உட்பட எந்த பணிகளும் தற்போது செய்யக்கூடாது, ஆர்.டீ.ஓ விசாரணைக்கு பின்புதான் அனுமதிப்போம் என்று காவல்துறை துணையுடன் தடை செய்தனர், மீறினால் கைது செய்வோம் என்றும் எச்சரிக்கை செய்தனர், கிளை நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர் கிளைக்கு சென்ற மாவட்ட இந்நாள் மற்றும் முன்னால் நிர்வாகிகள் அதிகாரிகளின் மிரட்டலுக்கு அஞ்சவேண்டாம் என முடிவு செய்து தடை மீறி தொழுவோம் காவல்துறை கைதுசெய்துகொள்ளட்டும் என்று கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அதன் அடிப்படையில் புரட்சியுடன்  புதிய ஜும்மா தொடங்கியது.

மாவட்ட செயலாளர் சகோ.நவ்சாத் அவர்கள் ஜும்மா உரையாற்றினார், அப்பகுதி மக்களும்-கொள்கை சகோதரர்களும் பெண்களும் பெரும்திரளாக கலந்துகொண்டனர், ஜும்மா உரையில் காவல்துறை கைது செய்தாலும் தயாராக இருப்போம் என்று குறிப்பிட்டதால்  தொழுகை முடிந்தவுடன் கைதுக்கு  தயாராகவே மக்கள் வெளியே வர அரசு இயந்திரம்  சலசலப்பு இல்லாமல் சென்றுவிட்டது…

பொது இடங்களில், தங்களின் வழிபாட்டிற்க்காக, அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் சக்திகளை எதிர்க்க ஆண்மையற்ற இந்த அரசு இயந்திரம், முஸ்லிம்கள் மக்களிடமிருந்து வசூலித்த பணத்தில் சொந்தமாக இடம் வாங்கி அதில் தொழுகை நடத்த முயன்றால் அதை தடுக்க ஓடோடி வருகிறது சூடு சொரணையற்ற இந்த கருங்காலி கூட்டம்… 

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும்   அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.  திருமறை:47:31
ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக்கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்த பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனைவிட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும். திர்மிதி-2322

செவ்வாய்

இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்?

 

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1340
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
“ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என்
கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1138,183 முஸ்லிம் 1400,1402,
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341
4+5 ரக்அத்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து ”சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள் நூல் : புகாரி (117)
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1341)
9 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
7 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139 5,3,
1 ரக்அத்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி), நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

திங்கள்

ஆசாத்நகர் கிளையின் சார்பாக சிறுவர்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  11-07-12  அன்று சிறுவர்களுக்கான தர்பியா நடைப்பெற்றது இதில் சகோ. அன்சர் அவர்கள் “நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் பயிற்சி செய்தார்கள்....

ஆசாத்நகர்கிளையின் சார்பாக மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்கிளையின் சார்பாக கடந்த  10.07-2012 அன்று   மருத்துவ உதவியாக ரூபாய் 2000  வழங்கப்பட்டது.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக 10.07.12 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  10.07.12 பெண்கள் பயான்   நடைபெற்றது. இதில் சகோதரர் காஜா அவர்கள் “யார் அவுலியாக்கள்  ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமான  பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக11-07-12 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  11-07-12 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்  உமர் பாரூக்“ அவர்கள்  ”பித்அத் எனும் வழிகேடு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக கணிப்பொறி மூலமாக தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  07-07-12 ஆண்களுக்குகான  தர்பியா  நிகழ்ச்சியில் சகோதரர்  காஜா அவர்கள் கணிப்பொறி மூலமாக விளக்கங்கள் கொடுத்து  தர்பியா நடைபெற்ற்து.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 07.07.12 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  07.07.12 பெண்கள் பயான்   நடைபெற்றது. “வேண்டாமே பித்அத்கள்  ” என்ற தலைப்பில் உரையாற்றிப்படட்து. இதில் அதிகமான  பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத்நகர்கிளையின் சார்பாக காது கேளாத சிறுவனுக்கு காது மிஷின் வாங்குவதற்கு ரூ.10,000/- பத்தாயிரம் உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்கிளையின் சார்பாக கடந்த  07.07-2012 அன்று 10 வயது காது கேளாத சிறுவனுக்கு  காது மிஷின் வாங்குவதற்கு ரூ.10,000/- பத்தாயிரம்  உதவியாக அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 05-07-12 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  05-07-12 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்  சல்மான அவர்கள் “பாராத் இரவு ஓர் வழி கேடு  ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

ஆசாத்நகர் கிளை சார்பாக ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் 06.07.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 06- 07 – 2012 அன்று  ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டதன் விளைவாக தாயத்து கயிறை தானே  கழற்றி ஏரியப்பட்ட காட்சி....

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  06-07-12 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டு தர்ஹா வழிபாடு சம்பந்தமான   சி.டி வழங்கப்பட்டடது.

புதன்

ஆசாத்நகர் கிளையின் சார்பாக நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  03-07-12 யார் இவர் என்ற தலைப்பில் நோட்டீஸ் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.

ஆசாத்நகர் கிளையின் சார்பாக தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  02-07-12 அன்று தனிநபர் தாவா செய்யப்பட்டு ஏகத்துவம் சம்மந்தமான சி.டி வழங்கப்பட்டடது.

ஆசாத்நகர் கிளை சார்பாக மாணவர்களுக்கான தர்பியா

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 01 07 – 2012 அன்று  மாணவர்களுக்கான தர்பியா மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது

ஆசாத்நகர் கிளை சார்பாக ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 01 07 – 2012 அன்று  ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி ஏரியப்பட்டது....

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 01-07-12 தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக  01-07-12 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோதரர்  அப்துல் அஜீஸ்“இணைந்து வாழ்வோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

ஞாயிறு

கொட்டும் மழையில் நடைபெற்ற கோவை கல்வி விழிப்புணர்வு பொது கூட்டம்


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவர் அணியின் சார்பாக இஸ்லாமிய கல்வி விழிப்புணர்வு பொது கூட்டம் 30.06.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொது கூட்டம், 7:15  மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. ஆனால், இரவு 7  மணியிலிருந்தே மழை பெய்த வண்ணம் இருந்தது.மழை பெய்து கொண்டு இருந்தாலும், சரியாக 7:30 மணியளவில் பொதுக் கூட்டம் ஆரம்பமானது. பொது கூட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன், சிறு பிள்ளைகள் ஓடி வந்து மழையையும் பொருட்படுத்தாமல்  இருக்கைகளில் வந்து அமர்ந்தது ஒரு கணம் ஆடித்தான் போனோம். குழந்தைகளின் ஆவலை தொடர்ந்து பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் கொட்டும் மழையில் இருக்கைகளில் வந்து அமர்ந்து கொண்டனர். மாநில மாணவர் அணி செயலாளர் அல் அமீன் அவர்கள், கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார், மாநில துணை தலைவர் MI சுலைமான் அவர்கள், அனுமதியா? கட்டளையா? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இறுதியாக மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் பொது கூட்ட தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் நவ்சாத் அவர்களின் நன்றி உரையுடன் வல்ல ரஹ்மானின் அருளால் இப்பொதுக் கூட்டம் நிறைவுற்றது. இதில் மாவட்ட தலைவர் ஜலால், பொருளாளர் சஹாப்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



 


 

 

  

வெள்ளி

ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகள்? ஏமாளிகள் நாங்கள் இல்லை!


முஸ்லிம்களை வஞ்சிப்பதற்கு மோடியோ அத்வானியோ தேவையில்லை என்கிற அளவிற்கு தமிழக முஸ்லிம் கட்சிகளின் சமுதாய துரோகத்திற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டதது சென்ற திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு வழங்கிய 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகாரிகள் சரியாக வழங்காமல் வஞ்சித்து வந்தனர் அதை பல்வேறு வழிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அப்போதைய ஆளும் அரசுக்கு கொண்டு சென்றது .
அதே நேரத்தில் சமுதாயத்தை முன்னேற்ற போகிறோம் என்று கியம்பிய ஒரு கூட்டம் முஸ்லிம்களுக்கு அரசு அதிகாரிகள் துரோகம் இளைத்தது சரிதான் என்கிற அளவிற்கு முஸ்லிம்களின் முதுகில் குத்தினார்கள் ஆளும் அரசுக்கு சாதகமாக ஜால்ரா தட்டினார்கள் அப்படிப்பட்ட இவர்களின் சமுதாய துரோகத்தையும் தவ்ஹீத் ஜமாஅத் மக்களின் முன் கொண்டு சென்றது .
தவ்ஹீத் ஜமாஅத் பாடுபட்டு பலபோராட்டங்களையும் அதற்காக சமுதாய மக்களின் பொருளாதரத்தையும் சிலவு செய்து மேலும் பல சகோதர சகோதரிகளின் கண்ணீர் துஆக்களாலும் அல்லாஹ்வின் பேரருளால் இடஒதுக்கீடு என்னும் எட்டாக்கனியை அடைந்தோம் சுதந்திரத்திற்கு பிறகு தமிழக முஸ்லிம்கள் அடைந்த மிகப்பெரிய மகிழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும் என்கிற அளவிற்கு இந்த சமுதய மக்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர் அப்படி நாம் பாடுபட்டு பெற்ற அந்த இடஒதுக்கீட்டை சில சமுதாய தலைவர்களும் சமுதாய கட்சிகளும் தங்களின் சுயலாபத்திற்காக முஸ்லிம்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கனவை குழி தோண்டி புதைக்கும் வேளையில் ஈடுபட்டனர்.

தாங்கள் நடத்தும் பத்திரிக்கையிலும் தங்களின் இணையதளத்திலும் அவர்களின் தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் மாறி மாறி தவ்ஹீத் ஜாமத்தின் போராட்டங்களை முடக்குவதிலேயே குறியாய் இருந்தனர் இந்த தவ்ஹீத் ஜமாத்தினர் உலக அறிவு அற்றவர்கள் அரசாங்க விவகாரம் இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள்தான் மெத்தப்படித்த மேதாவிகள் அதிபுத்திசாலிகள் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பதில் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள் என்கிற அளவிற்கு முஸ்லிம்களின் காதில் பூ சுற்றினார்.

ரோஸ்டர் (சுழற்சி) என்று ஒன்றை சொல்லி மக்களை மட்டுமல்ல ஆளும் அரசையே குழப்பி குழம்பிய குட்டையில் தங்களுக்கு மட்டுமே தேவையானதை பெற்றுக்கொண்டனர் வாரியம் என்றும் உள்ளாட்சி என்றும் அரசு அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வதிலாகட்டும் தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர். 

இதற்கிடையில் தவ்ஹீத் ஜாமத்தின் போராட்ட வீரியத்தை கண்டு அஞ்சிய அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் ஒரு அறிக்கையை வாசித்தார் அதில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதஇடஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவில்லை அதை கூடிய விரைவில் சரி செய்கிறேன் என்று அறிவித்தார் அப்படி அறிவித்ததோடு நில்லாமல் தவ்ஹீத் ஜாமத்தின் தொடர் வலியுறுத்தலின் பேரில் இடஒதுக்கீடு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஆணையம் ஒன்றையும் அமைத்தார் அது மட்டுமல்லாமல் தான் மீண்டும் தமிழக முதல்வரானால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என்று தங்களின் தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டார் அதன் அடிப்படையில் முஸ்லிம் சமுதாய நன்மையை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் திமுகவிற்கு சென்ற சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளித்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி எடுத்து தங்களது தேர்தல் அறிக்கையாக வெளிட்ட அதிமுக ஒன்றைமட்டும் வகையாக மறந்துபோனது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு என்ற வார்த்தையை மட்டும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் காண முடியவில்லை இந்த தேர்தல் அறிக்கை பார்த்த தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் கொண்டு சென்றது மேலும் அதிமுகவிற்கு ஆதரவான உளவுத்துறை அதிகாரிகள் மூலம் இந்த அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் முஸ்லிம்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லை மாறாக கோபமே அதிகம் உள்ளது என்று பரவலாக அறிந்த காரணத்தால் அதுவரை இடஒதுக்கீடு அதிகபடுத்தி வழங்கும் விசயத்தில் மவுனம் சாதித்த ஜெயலலிதா முதன் முதலாக திருச்சி மேற்கு தொகுதில் போட்டியிட்ட மரியம் பிச்சையை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றவர் அங்கே தான் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என்றும் உறுதி அளித்தார் அதை அவர்களின் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர்.

ஜெயலிதாவின் அந்த அறிவிப்பை நம்பிய பெருவாரியான முஸ்லிம்கள் தங்களின் முழு ஆதரவையும் அளித்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை வழங்கினர் ஆனால் தான் முதல்வராகி ஓராண்டுகளில் நூறாண்டு சாதனையை செய்து முடித்துள்ளதாக தொடர்ந்து அதிமுக அமைச்சர்களும் முதல்வரும் அவர்களின் தற்போதைய சிறுபான்மை பிரிவான மமகவின் தலைவரும் கூறிக்கொண்டுள்ளனர் அப்படி நூறாண்டு சாதனையை ஓராண்டு செய்து முடித்த பிறகும் முஸ்லிம்களின் வாழ்வாதார கோரிக்கையான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித்தர சிறிதும் மனம் இல்லை இதுவரை ஒரு முறைகூட ஜெயலலிதாவோ மற்ற அமைச்சர்களோ வாய் திறக்கவில்லை என்பதுதான் வேதனை. 
அவற்றையெல்லாம் விட மிகவும் வேதனை சென்ற ஆட்சியல் திமுக அரசால் வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிக்கபடுதித் தருவதற்கு பதிலாக அதை குறைத்து ஒன்றுமே இல்லாமல் பூஜ்யதிர்க்கே கொண்டு வந்து தங்களின் வெறுப்பை முஸ்லிம்களிடம் காட்டியுள்ளார்கள் சென்ற மார்ச் மாதம் பயிற்சி மருத்துவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் தேர்வு செய்தது அதில் 1349 பயிற்சி மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை இதை அறிந்துகொண்ட முஸ்லிம்களின் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடனடியாக டிஎன்பிஎஸ்சி (Tamilnadu Public Service Commission)அலுவலகம் முற்றுகை என்று அறிவித்தது பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்த தமுமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் அப்துல்சமது ஒரு அறிக்கையை தங்களின் இணையதளத்தில் வெளியிட்டார் அதில் மருத்துவர் பணியாளர்கள் தேர்வில் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் இதை கண்டிக்கின்றோம் என்றும் கூறப்பட்டிருந்தது. 
ஆனால் சில நாட்கள் மட்டுமே அந்த அறிக்கைக்கு அவர்களின் இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்தது அறிக்கை வெளியிட்ட அந்த சில நாட்கள் ஜவாஹிருல்லா இந்தியாவில் இல்லை வெளிநாட்டில் இருந்தார் அவர் திரும்பி வந்த சில நாட்களிலேயே அந்த கண்டன அறிக்கை தமுமுகவின் இணையதளதிலிருந்து அகற்றப்பட்டு விட்டது அதன் காரணம் என்ன ஏன் அதை அகற்றினார்கள் என்பதற்க்கான விடை சில மணி நேரத்திலேயே அவர்களின் இனையதளதிலேயே கிடைத்தும் விட்டது அந்த கண்டன அறிக்கைக்கு பதிலாக வேறொரு அறிவிப்பை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சியின் துரோகத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதுபோல் முஸ்லிம்களுக்கு எந்த அநியாயமும் நடக்கவில்லை எல்லாம் சரியாகத்தான் நடந்துள்ளது என்று தங்களின் வழக்கமான விசுவாசத்தை! காட்டியுள்ளனர் அப்படியானால் முன்பு வெளியிட்ட கண்டன அறிக்கை தவறா அல்லது தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் அறிவித்து விட்டது அதை நாம் எப்படியாவது முறியடிக்கவேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் வெளியிட்ட அறிக்கையா அதனால் தானோ தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தி முடித்த உடனேயே இவர்களின் கண்டன அறிக்கை நீக்கப்பட்டதோ உண்மை எதுவாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு இந்த சிறுபான்மைப்பிரிவினரால் ஒரு மறைமுக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது நிஜம்.

அப்படி டிஎன்பிஎஸ்சி எந்த தவறும் நடைபெறவில்லை என்பது உண்மையானால் 2011 மே மாதம் முதல் 2012 ஜூன் வரை அரசுத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பட்டன அதில் எத்தனை பேர் முஸ்லிம்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் அதற்காக இந்த மமகவினர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசவேண்டும் அப்படி அரசு வெளியிட மறுத்தால் இந்த மமகவினர் முஸ்லிம்களுக்கு இந்த அரசு பச்சைத் துரோகம்தான் செய்கிறது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும் ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது ஆளும் அரசுக்கு தங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் வழக்கமான இவர்களின் சித்து வேலையை விட்டுவிட்டு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவையும் அவரது அரசையும் வானளவில் புகழ்ந்து பேசிவிட்டு வெளியில் மேடைபோட்டு விலைவாசி உயர்ந்துவிட்டது மின்சாரக்கட்டணம் அதிகரித்துவிட்டது என்று இரெட்டை வேடம் போடக்கூடாது தங்களின் கண்டனத்தை பத்திரிக்கை வாயிலாகவும் காட்சி ஊடகங்கள் வாயிலாகவும் அது முதல்வரின் கவனத்திற்கு செல்லும் அளவிற்கு இருக்கவேண்டும். 
சரி இந்த மமகவினர்தான் இவ்வாறென்றால் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்காகவே பாடுபடும் அரசியல் கட்சி என்று தங்களுக்கு தாங்களே சான்றிதழ் வழங்கக்கொள்ளும் முஸ்லிம்லீக் இத்தனை ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு என்ன செய்தது முஸ்லிம் சமுதாய நலனுக்காக ஒரு துரும்பையாவது கிளிப்போட்டுள்ளதா முஸ்லிம்களை அரசியல் கட்சிகளிடம் அடகுவைத்ததை தவிர.
சமீபகாலமாக நாடெங்கிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடக்கிறது அதில் முஸ்லிம்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகிறது மற்ற மதத்தினரிடமும் கேட்கப்படுகிறது முஸ்லிம்களிடம் கேட்க்கும் கேள்வியில் முக்கியமான ஒன்று என்ன ஜாதி என்பது உடனே இந்த சமுதாய முஸ்லிம்லீக்கர்கள் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்கள் முஸ்லிகள் யாரும் என்ன சாதியென்று கேட்டால் ராவுத்தர் லெப்பை தக்னி மரைக்காயர் என்று கூறாதீர்கள் முஸ்லிம் என்றே சொல்லுங்கள் என்று ஒரு பெரிய சமூக ஏற்றத்தாழ்வை நீக்குறோம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் 
இவர்களுக்கு அரசியலும் தகராறு என்றால் மார்க்மும் தகராறு என்கிற அளவிற்கு மார்க்கத்தில் சாதியில்லை என்று ஒன்றை பெரிய கண்டுபிடிப்பாக சொல்லியுள்ளனர் இஸ்லாத்தில் சாதிகள் இல்லை என்பது இந்த மார்க்கத்தை புதிதாக தழுவிய ஒரு முஸ்லிமுக்குக்கூட தெரியும் அதை விளங்கித்தான் இஸ்லாத்தின் மேல் காதல் கொள்கிறான் அதில் ஈர்க்கப்படுகிறான் இஸ்லாத்தை தழுவுகின்றான். 
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும்கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்நன்கறிபவன்.அல்குர்ஆன்49:13
அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான் ஒருவரை அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாக கோத்திரங்களாகவும் படைத்தோம் என்கிறான் மேற்கூறப்பட்ட இஸ்லாத்தில் உள்ள பிரிவுகள் சாதியா முன்னொரு காலத்தில் தங்கள் செய்த தொழிலை அவர்களின் பட்டமாக ஆக்கிக்கொண்டார்கள் ராவுத்தரும் லெப்பையும் திருமணசம்பந்தம் செய்யாமல் இருகிறார்களா அல்லது தக்கினியும் லெப்பையும் சம்பந்தம் செய்யாமல் இருகிறார்களா சிலபேர் சம்பந்தம் செய்யாமல் இருப்பார்கள் அதற்கு காரணம் சாதி என்பதாலா இல்லை திருமணம் என்பது சந்தோசமாக வாழ்வதற்கு இருவேறு பழக்கம் உள்ளவர்கள் இருவேறு மொழியை கொண்டவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களின் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக அமையாது சந்தோசம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா அதனால் தான் தவிர்த்துக் கொள்கிறார்களே அல்லாமல் சாதி என்ற எண்ணத்திலா என்பதைக்கூட விளங்காமல் சாதி என்றால் முஸ்லிம் என்று சொல்லுங்கள் என்று ஒரு அறிக்கை வேறு 

உண்மையில் இவர்கள் பிரித்து வைத்துள்ளர்களே மத்ஹப் பெயரால் தரீக்கா பெயரால் அவன் பள்ளிக்கு இவன் போகக்கூடாது இவன் பள்ளிக்கு அவன் போகக்கூடாது அவன் வணக்க முறை இப்படி இவன் வணக்க முறை அப்படி இதுதானே ராவுத்தர் லெப்பை என்பதைவிட மோசமாக இருக்கு அதை இவர்கள் முதலில் மாற்றட்டும் பிறகு பேசட்டும் அறிக்கை விடட்டும் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடம் இல்லை முஸ்லிம்களில் தாழ்த்தப்பட்டவர்களான மேற்கண்ட ராவுத்தர் லெப்பை தக்னி போன்ற பிரிவுகளின் கீழ்தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது முஸ்லிம்களை குழப்பி அதை தடுக்க முயற்சிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சமுதாய துரோகிகளை முஸ்லிம்கள் அடையாளம் கண்டு விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக நாம் வாழவேண்டும் மற்ற அணைத்து சமுதாயத்திற்கும் முன்மாதிரியாக திகழவேண்டும்.சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சிமன்றம் சென்றால்தான் நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதெல்லாம் ஏமாற்று வித்தை உண்மையில் அங்கே சென்றால் நமது மானம் மரியாதையை இலக்கத்தான் நேரிடும் என்பதும் வெளியில் இருந்து போராடித்தான் தவ்ஹீத் ஜமாஅத் இடஒதுக்கீடு பெற்று தந்தது என்பதையும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் உணர்ந்துகொண்டு இந்த முஸ்லிம்களின் கட்சி என்று சொல்லிக்கொண்டு எந்த வித சமூக தீமைகளையும் தடுக்காமல் வட்டிக்கு எதிராக வரதட்சணைக்கு எதிராக பித்அத் ஷிர்கிர்க்கு எதிராக குரல் கொடுக்காமல் தங்களை மட்டுமே வளப்படுத்திக்கொள்ளும் இவர்களின் மாய வலையில் சிக்கிவிடாமல் இவை ஒழிக்க யார் உண்மையாகவே பாடுபடுகிறார்கள் எனபதை சிந்தித்து பார்த்து அவர்களுடன் கை கோர்த்து நமது வருங்கால சமுதாயத்தை வளமான சமுதாயமாக ஆக்குவும் அறிவார்ந்த மக்களாக வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்!

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும்கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.அல்குர்ஆன் 58:11

நீங்கள்மனிதகுலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்குர்ஆன் 3:110 
ஆக்கம்:முஹம்மது உபைஸ்

ஞாயிறு


கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு.17.06.12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 17.06..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது. இதில் யஹ்யா அவர்கள்  "உணவின் ஒழுக்கங்கள்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றனர்

கேள்வி பதில் நிகழ்ச்சி – ஆசாத்நகர் கிளை.15.06.12

கோவை மாவட்டம்  ஆசாத்நகர்  கிளையில் கடந்த 15.06.2012 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ச்கோதரர் நாசர் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார். ...

6 யூனீட் அவசர இரத்த தான உதவி – ஆசாத் நகர். 15.06.12



கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 15-6-2012 அன்று 6 ஆறு யூனீட் அவசர இரத்த தான உதவியாக  கொள்கைச் சகோதரர்களால் செய்யப்பட்டது....

ஆசாத்நகர் கிளையின் சார்பாக மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்ஆசாத்நகர்  கிளையின் சார்பாக 16.06.2012 அன்று பிறமத சகோதரருக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

ஆசாத்நகர்கிளையின் சார்பாக ஏழை சகோதருக்கு ரூ.3000/- கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்கிளையின் சார்பாக கடந்த 16-06-2012 அன்று பக்ரூதீன் என்ற சகோதருக்கு  படிப்பு செலவிற்கு ரூ.3000/- கல்வி உதவியாக அவருடைய தந்தையிடம் வழங்கப்பட்டது.