தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – கவுண்டம்பாளையம் கிளை


கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-07-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000  வழங்கப்பட்டது……..

கவுண்டம்பாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கிருத்திகா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் சார்பாக கடந்த 11-07-2013 அன்று கிருத்திகா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை அஸ்மா என மாற்றிக் கொண்டாடார்.

“ரமளானின் சிறப்புகள்” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையின் சார்பாக கடந்த  06-07-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோதரி ராபியத்துல் பஷீரா அவர்கள் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

”மன்னிப்பு” – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 06-07-2013 அன்று பெண்கள் பயான் நடை பெற்றது. சஹோதரி இர்பானா அவர்கள் மன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 07-07-2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்கள்……

”எது நேர்வழி” – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 09-07-2013 அன்று பயான் நடை பெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள் ”எது நேர்வழி” என்ற தலைபில் உரையாற்றினார்கள்……

ஏழை மாணவிக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – கோவை


கோவை மாவட்டம் சார்பாக கடந்த 07-07-13 அன்று ஏழை மாணவிக்கு ரூபாய் 2000/ கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது  அல்ஹம்மது லில்லாஹ்….

பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-07-2013 அன்று பிற சமய சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….

“இரவுத் தொழுகை” – கவுண்டம்பாளையம் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-07-2013 அன்று “இரவுத் தொழுகை” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…

கவுண்டம்பாளையம் கிளை தஃவா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-07-2013 அன்று சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ஸ்டிக்கர்கள்  ஒட்டப்பட்டன…….

நோட்டிஸ்கள் விநியோகம் – N.H.ரோடு கிளை

கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 10-07-2013 அன்று  அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

ஏழை மாணவருக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி – கோவை

கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக கடந்த 09-07-13 அன்று ஏழை மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000/ வழங்கப்பட்டது.

ஹேமா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 04-07-2013 அன்று ஹேமா என்ற பெண்மணிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

”துஆக்கள் மனனம் பயிற்சி” – கவுண்டம்பாளையம் கிளை தர்பியா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் கடந்த 07-07-2013 அன்று தர்பியா நடைபெற்றது. துஆக்கள் மனனம் பயிற்சி அளிக்கப்பட்டது ,சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நோட்டிஸ் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-07-2013 அன்று “ரமலான் – அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

நோட்டிஸ் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 05-07-2013 அன்று  மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற தலைப்பில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது………..

”நோன்பு” – கவுண்டம்பாளையம் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 05-07-2013 அன்று “நோன்பு” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

2 யூனிட் அவசர இரத்த தான உதவி – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம்  ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 08-7-13 அன்று அவசர இரத்த தான பிரிவில் 2 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது.

N.H.ரோடு கிளை தஃவா

கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த  12-07-13 அன்று மெகா டிவியில் ஒளிபரப்பாகும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த பேனர்கள் அடிக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது

மார்க்க அறிவுப் போட்டி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த  07-07-13 மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்க அறிவுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஜாகிர் ஹுசைன் அவர்கள் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நோட்டிஸ் விநியோகம் – செல்வபுரம் கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் கிளை சார்பாக கடந்த 05-07-2013 அன்று மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற தலைப்பில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது……

பொள்ளாச்சி கிளை தஃவா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 09-07-2013 அன்று தவ்ஹீத் ஜாமத்தின் அரும்பணிகள் மக்கள் அறியும் விதமாக பேனர்கள் வைக்கபட்டது..

பொள்ளாச்சி கிளை தஃவா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 10-07-2013 அன்று சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது……….

”ரமளானுக்கு தயாராவோம்” – குறிச்சிபிரிவு கிளை தெருமுனைப் பிரச்சாரம்


கோவை மாவட்டம் குறிச்சிபிரிவு கிளை சார்பாக கடந்த 05-07-2013 அன்று 3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.மாலிக் அவர்கள் ”ரமளானுக்கு தயாராவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…

ஏழை சகோதரிக்கு ரூபாய் 2000 மருத்துவ உதவி – குனியமுத்தூர் கிளை

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பில் கடந்த 05-07-2013 அன்று  ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/-  வழங்கப்பட்டது…….

நோட்டிஸ் விநியோகம் – செல்வபுரம் கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் கிளை சார்பாக கடந்த 05-07-2013 அன்று ”மாறும் உலகில் மாறாத இஸ்லாம்” என்ற தலைப்பில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது….

சனி

பெற்றோர்களே எச்சரிக்கை...!!!! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா...?


பெற்றோர்களே எச்சரிக்கை...!!!!
வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா...?
16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள். வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.

இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.

ஓரக்கண்ணால் பார்த்து...
தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து...
காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை..
உங்க செல்போன் நம்பர் என்ன?
என்று கேட்டு ஒரு சிரிப்பு..
அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு...
3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம்.
இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.
இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.
காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ஓட்டம்...

காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்” பட காட்சிதான்.
அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.

வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு... என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து... வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது.

புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான்.

14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.டி.வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர்.

எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது.

இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது.

திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க அனுமதிக்காதீர்கள்.
டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள்.

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்

குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

.கேள்வி:லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

பதில்:

குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.

(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.

(அல்குர்ஆன் 76:23)

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம். (அல்குர்ஆன் 17:106)

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

(அல்குர்ஆன் 25:32)

திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன்97:1)

இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) என்ற வசனம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

.கேள்வி:லைலத்துல் கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

பதில்:

குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.

(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.

(அல்குர்ஆன் 76:23)

மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம். (அல்குர்ஆன் 17:106)

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

(அல்குர்ஆன் 25:32)

திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன்97:1)

இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) என்ற வசனம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 29-06-2013 பெண்கள் பயான் நடை பெற்றது. இதில் சகோ பைரோசா  அவர்கள் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 30-06-2013 அன்று பிற சமய சகோதரிக்கு மருத்துவ உதவியாக 3000 ரூபாய் வழங்கப்பட்டது.

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3500 மருத்துவ உதவி – குனியமுத்தூர் கிளை

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3500 வழங்கப்பட்டது.

மருத்துவமனை தஃவா – சூலேஸ்வரன்பட்டி கிளை


கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 28.06.13 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. இதில் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து இஸ்லாம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
மேலும்அவர்களுக்கு “மாமனிதர் நபிகள் நாயகம்”(ஸல்) விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

மாணவர்களிடம் தஃவா – பொள்ளாச்சி கிளை



கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த  27/06/2013 அன்று   தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.
இதில் சகோ.சல்மான் இஸ்லாம் குறித்த மாணவ மாணவிகள் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் கேள்வி கேட்ட மாணவ மாணவிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டது மேலும் தலைமைஆசிரியர் இருவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் /நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

புதன்

ஜூம்மா உரை கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை

சொற்பொழிவு
இன்ஷா அல்லாஹ் வரும்  12.07.13 அன்று கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை மஸ்ஜிதுல் முபீன் பள்ளில் அல்தாபி  அவர்கள் ஜூம்மா உரையாற்ற இருக்கிறார்கள்.


ரமலான் சிறப்பு சொற்பொழிவு

இன்ஷா அல்லாஹ் இன்று 10.07.13 முதல் 5 நாட்கள் கோவை மாவட்ட தவ்ஹீத் மா்க்கஸில் இரவு பயான் அல்தாபி தலைப்பு "யூதர்களின் வாழ்வும் வரலாறும்"
 

செவ்வாய்

பிறை அறிவிப்பு

பிறை பார்க்க வேண்டிய இன்று, தமிழகத்தில் பிறை எங்கும் தென்படாததால், நபிகள் நாயகம் காட்டி தந்த அடிப்படையில், ஷஅபான் மாதம் 30 ஆக பூர்த்தி அடைந்தது. நாளை(10.07.2013) மக்ரிப் முதல்
ரமலான்-1 ஆரம்பம்.


”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வியாழன்

நற்செயல்களை விரைவு படுத்துவோம்” – பொள்ளாச்சி கிளை பயான்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 29/06/2013 அன்று  பயான் நடை பெற்றது.
இதில் ஜாகிர் அவர்கள் ” நற்செயல்களை விரைவு படுத்துவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 28/06/2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது..

பொள்ளாச்சி கிளை தஃவா


\ கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 28/06/2013 அன்று  ”தினமும் ஓதும் துவாக்கள்” விசிடிங் கார்டு  சைஸில் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்---கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை 07.07.13



கோவை மாவட்டம் TNTJ செல்வபுரம் தெற்கு கிளை  சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 07.07.13 அன்று ரமலான் தொடர்பான சிறப்பு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் அப்பாஸ்அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.

இடம்; H பில்டிங் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்

                 அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
                          மஸ்ஜிதுத் தக்வா 
                    TNTJ  செல்வபுரம் தெற்கு கிளை

புதன்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து பேனர்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து கடந்த 03.07.13 அன்று எம்.ஜி.ஆர் நக் பகுதியில்பேனர்கள் வைக்கப்பட்டது

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை அக்டோபர் 08 அறப்போராட்ட பேனர் விளம்பரம்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 03.07.13 அன்று அக்டோபர் 8 ல் நடைபெறவிருக்கும் அறப்போராட்டத்தின் விழிப்புணர்வு குறித்து பேனர் வைக்கப்பட்டது……..

கோவை மாவட்டம் ஜூலை ஆகஸட் மாதங்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரம்

 கோவை மாவட்டம் ஜூலை ஆகஸட் மாதங்களுக்கான சஹர் மற்றும்  இஃப்தார் நேரம் கீழே தரப்பட்டுள்ளது.
July 2013
Date    Day    Fajr    Sunrise    Zuhr    Asr    Maghrib    Isha
1    Mon     4:45    6:03    12:26    3:52    6:49    8:07
2    Tue       4:46    6:03    12:26    3:52    6:49    8:07
3    Wed     4:46    6:04    12:26    3:53    6:49    8:07
4    Thu       4:46    6:04    12:27    3:53    6:49    8:07
5    Fri    4:47    6:04    12:27    3:53    6:49    8:07
6    Sat    4:47    6:05    12:27    3:53    6:49    8:07
7    Sun    4:47    6:05    12:27    3:53    6:49    8:07

கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு நாடகம்

              
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

TNTJ கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது . இதில் மேலாண்மை குழு உறுப்பினர் ஃ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் சம்மந்தம்மான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியின்
முன்பு மதரஸதுத் தீன் மாணவ,மாணவியரின் சமுதாய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியி்ல் பெண்கள் மட்டும் பங்கேற்றது ஓர் சிறப்பு அம்சம்.

கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்



TNTJ கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது . இதில் மேலாண்மை குழு உறுப்பினர் ஃ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் சம்மந்தம்மான அனைதது கேள்விகளுக்கும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மக்களுக்கு புரியும் படியும் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லா...

செவ்வாய்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957) 
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5000/- கல்வி உதவி – கோவை


கோவை மாவட்டம்  சார்பாக கடந்த 28-06-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு கல்வி உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவி – கோவை

கோவை மாவட்டம்  சார்பாக கடந்த 28-06-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.


ஏழை சகோதரிக்கு ரூபாய் 5000 கல்வி உதவி – கோவை

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 27-06-13 அன்று ஏழை சகோதரிக்கு கல்வி உதவியாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது………