ஊட்டச்சத்து குறைவான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம். முதல் இடத்தில் வங்காளதேசம் உள்ளது. இந்தியாவில் 47 சதவீத குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைவினால் அவதியுறுகின்றனர். உலகில் பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 15-வது இடம். பட்டினியையும், ஊட்டச்சத்துக் குறைவையும் போக்குவதில் மாமிசத்தின் பங்கு மறுக்கமுடியாதது ஆகும். வெறும் வெஜிட்டேரியன்(சைவ) உணவுகளால் மட்டும் எந்த நாடும் வாழ முடியாது. அவ்வாறு எந்த நாடும் உலகில் இல்லை என்பதுதான் உண்மை. மாமிச உணவும் கூட உணவுப் பட்டியலில் இடம் பெற்றால்தான் பட்டினியை ஓரளவாவது கட்டுப்படுத்த இயலும்.
வியாழன்
செவ்வாய்
சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய ஹசாரே!

என்னதான் லோக்பாலில் திருத்தம் செய்தாலும் அதில் கொஞ்சம்கூட திருப்தி அடையாமல் ஏதாவது ஒரு குடைச்சலை கொடுத்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதன் மூலம் பிஜேபியை இருத்தி தமது எஜமான விசுவாசத்தை நிரூபிக்க துடியாய் துடிக்கிறார் அண்ணா ஹசாரே!
நீண்ட செயல்திட்டத்தை நிறைவேற்றுவதர்க்காக பின் பக்கமிருந்து ஹசாரவை இயக்கிக்கொண்டிருக்கும் சங்க்பரிவார கூட்டம் இதற்காக பல கோடிகளை கொட்டிக் கொடுத்துக்காத்திருக்கிறது யாரென்று அறியப்படாத அண்ணா ஹசாரவை இன்றைக்கு காந்தியவாதி என சங்க பரிவார பத்திரிகைகள் லாவணி பாடுகின்றன ஆனால் இவைகள் என்னதான் துதி பாடினாலும் மக்களை யாராலும் முட்டாளாக்கிவிட முடியவில்லை.
காரணம் அண்ணா ஹசாரே முதன் முதலில் போராட்டத்தை துவக்கியபோது அதில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்தான் தன்னுடைய யோகா மையத்தின் ஆட்க்கள் ஆயிரக்கனக்கனோரை களம் இறக்கினார் அதனை ஒரு பெரிய மக்கள் எழுச்சியைப்போல இந்த ஊடகங்கள் பெரிதுபடித்திக் காட்டின அண்ணா ஹசாரவின் உண்ணாவிரத நாடகத்தை அனைத்து செய்தி ஊடகங்களும் சிலாகித்து எழுதின காந்தி மூண்டும் பிறந்துவிட்டார் என்றெல்லாம் இவர் குறித்து செய்திகள் வெளியாகின.
நாட்கள் செல்லச்செல்ல அண்ணா ஹசாரவின் கவிச் சாயம் கலையத் துவங்கியது மக்கள் அண்ணா ஹசாரவின் அவல முகத்தை புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள் இதெல்லாம் முழுக்க முழுக்க சங்க பரிவார கூட்டங்களின் சதிவலை என்பதை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள்.
மக்களிடம் தங்களின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க்க வெக்கப்பட்டு தூண்டில் முள்ளில் அண்ணா ஹசாரவை கட்டி மக்களிடம் காட்டி வாக்கு மீன்களை கவர நினைத்த சங்க்பரிவாரங்களின் அத்தனை முயற்ச்சிகளும் மண்ணைக் கவ்வியது என்றுதான் சொல்ல வேண்டும் காரணம் அண்ணா ஹசாரவின் ஊழலால் எதிர்ப்பு இருக்கும் கெஜ்ரிவால் கிரண்பேடி ஆகியோர் மீது ஊழல் புகார் பறந்தன ஹசாரவுடன் இருக்கும் கூட்டம் ஊழலில் ஊறிய கூட்டம் என்பதை மக்கள் அனைவருமே நன்கு உணர்ந்து கொண்டார்கள் விளைவு அண்ணா ஹசாரே ஒவ்வொரு மாநிலமாக வலம்வந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் செயல்பாட்டுக் கூட்டத்திற்கு மக்களிடம் போதிய ஆதரவில்லாமல் போனதுதான்.
கடந்தவாரம் சென்னைக்கும் வந்தார் அண்ணா ஹசாரே ஊரெல்லாம் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு பிருமாண்ட வாரவேர்ப்புக்கு ஏற்ப்பாடு செய்யப்படிருந்தது ஆனால் நடந்ததோ வேறு அவர்கள் எதிர்பார்த்த மக்கள் கூட்டத்தில் மூன்றில் ஒருபங்குகூட மக்கள் அங்கு வந்து சேரவில்லை முகம் இறுகிய நிலையில் சத்தம் இல்லாமல் சென்னையை விட்டு இடம் பெயர்ந்துவிட்டனர் ஹசாரே கூட்டத்தினர்.
இது நடந்த அன்றைக்கே மற்றும் ஒரு சுவராசியமான தகவலும் வெளியாகியது அதாவது அண்ணா ஹசாரவின் பிரச்சார துவக்க நேரத்தில் ஹரியான மாநிலம் ஹிசார் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது அந்த தொகுதியில் காங்கிரஸ் ஏர்க்கனவே மூன்றாம் இடத்தைத்தான் பெற்றிருந்தது அந்த தேர்தல் களத்தில் காங்கிரசுக்கு எதிராக கெஜ்ரிவால் கிரண்பேடி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர் முன்புபோலவே காங்கிரஸ் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
ஹசாரே கும்பல் பிரச்சாரம் செய்யாவிட்டால் காங்கிரஸ் மூன்றாம் இடத்தைத்தான் பிடிக்கும் என்பதை அனைவரும் ஊகித்ததுதான் ஆனால் இந்த கும்பல் தங்களால்தான் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு வந்தது என பம்மாத்து காட்டியது .
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாச்சிதேர்தல் முடிவுகள் அண்ணா ஹசாரேவின் பிரச்சாரத்தை மண்ணைக் காவ்வவைக்கும் விதமாக் அமைத்திருந்தன அதுவும் அண்ணா ஹசாரேவின் சொந்த மாவட்டமான அஹ்மத் நகரில் அதிகபட்ச்ச இடங்களை காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசும் மாபெரும் வெற்றியை பெற்றன.
எதிர்க்கட்சி கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா அங்கே மிக குறைந்த இடங்களை பெற்றன இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரஸ் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தன அண்ணா ஹசாரேவின் சொந்த மண்ணிலேயே தங்களின் கள்ளப்பிரச்சாரம் எடுபடாமல் போய்விட்டதைக் கண்டு சங்பரிவாரக் கும்பல் வெலவெலத்து போயிருக்கின்றன.
ஆனாலும் தங்களின் முயற்ச்சியில் சற்றும் மனம் தளராமல் அண்ணா ஹசாரேவை காந்தியவாதி காந்தியவாதி என படம் காட்டி மக்களில் கொஞ்சம் பேரையாவது தங்களின் ஒட்டு வங்கியில் இனைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையில் இன்னமும் சங்கபரிவாரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன உள்ளாசிதேர்தலில் கிடைத்த வெற்றியை பெரிதாக கருதி அண்ணா ஹசாரேவின் செல்வாக்கு சரிதுவிட்டதாக காங்கிரசும் நினைத்து எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்தால் சங்பரிவார கூட்டங்கள் தங்களின் எல்லையை அடைந்து விடுவார்கள் என்பது நிதர்சனம்.
உணர்வு
ஞாயிறு
ஆட்கள் தேவை
Labels:
ஆசாத் நகர்,
ஆட்கள் தேவை,
கோவை,
தவ்ஹீத்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
நெகிழ வைத்த நெல்லைப் பொதுக்குழு
இன்று இறைவன் அருளால் எங்கள் ஊருக்கு தவ்ஹீதுப் பிரச்சாரம் நடத்த தேதி கிடைக்காதா?’ என்ற எதிர்பார்ப்பு அலைகள்! ஏக்க அலைகள்!
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஓர் இருபதாண்டு கால இடைவெளியில் இத்துணை வளர்ச்சி! அதன் ஒரு கட்ட வளர்ச்சிப் பரிமாணம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டங்கள்.
மூவாயிரத்துக்கு நெருக்கமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்டமைப்பு கூடுவதற்குத் தோதான ஒரு கட்டட அமைப்பு, மண்டபம் மாநிலத்தில் கிடைக்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் என்றால் பிற இயக்கங்களில் இருப்பது போன்று பொது அறிவிப்பாக உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கும் வழக்கம் நம்மிடம் இல்லை. நமது ஜமாஅத்தில் மாநில, மாவட்ட, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் மட்டுமே மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கே மண்டபம் கிடைக்கவில்லை. இதில் சிறப்பு அழைப்பு விருந்தினர்களைச் சேர்த்தால் மைதானத்தில் தான் பொதுக்குழு நடத்த வேண்டும்.
Labels:
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
பொதுக்குழு,
coimbatore,
covai,
kovai,
tntj
வியாழன்
பொதுத் தேர்வுக்கான பயிற்சி!

12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப் பட்டு விட்டன (மார்ச் 8). இன்றைய சமுக சூழல் ஒரு மாணவனின் அறிவாற்றலை அவன் பெறும் மதிப்பெண்களை கொண்டு தீர்மானிக்கிறது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் ஒரு மாணவனின் ஒட்டு மொத்த வாழ்க்கை சூழலையும் இல்லை என்றால் குறைந்தபட்சம் பல ஆண்டுகளுக்காவது தீர்மானிக்க கூடியதாக உள்ளது. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் அந்த மாணவன் தன் கல்விக்காக வருங்காலங்களில் செலவிட போகும் பணத்தை அவன் தந்தையோ தாயோ படப்போகும் சிரமத்தைத் தீர்மானிக்கிறது.
இச்சூழ்நிலையில் மாணவர்கள் கல்வியின் ஆற்றலை உணர வேண்டும். மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக மதிப்பெண்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். என்ன படித்தாலும் மதிப்பெண் வரவில்லை எனும்; குரலை பல இடங்களில் கேட்டிருப்போம். படிப்பது ஒரு முறை என்றால் அதைப் பரிட்சையில் வெளிப்படுத்துவது மற்றொரு முறை.
தேர்வில் எப்படி எழுதினால் அதிக மதிப்பெண்களைப் பெறலாம் என்பதற்கான குறிப்புகளும் சில நுனுக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டிலேயே பயிற்சி செய்து பார்ப்பதன் மூலம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற இயலும்.
படித்ததை எல்லாம் வெளிப்படுத்துவதற்கல்ல தேர்வு. தேவையானவற்றை தெளிவாக உணர்த்துவது தான் நல்ல விடைகள்.
அதிகமாக எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் எனும் தவறான மனப்பான்மை மாணவர்களிடம் காணப்படுகிறது. அதிக பக்கங்கள் அதிக மதிப்பெண்களை பெற்று தராது.
வினாத்தாளை வாங்கியவுடன் சிலர் பதில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். முழுவதுமாக எழுதி முடித்தவுடன் வினாவை மறுபடியும் வாசித்தால் அவர்கள் எழுதிய பதிலுக்கும் வினாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியும். வினாவின் தொடக்கத்தை மட்டும் படித்து விட்டு எழுதியதால் இது போன்ற பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே வினாத்தாளை முழுவதுமாக வாசிக்க வேண்டும்.
பத்து நிமிடங்கள் எந்த வினாவிற்கும் பதில் எழுதாமல் நன்கு தெரிந்த வினாக்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்
எல்லாத் கேள்விகளுக்கும் விடை தெரியும் என்றால் அவற்றில் நன்கு தெரிந்த பதிலை முதலில் எழுதுவது நல்லது. திருத்துபவர் மனதில் முதலில் ஏற்படுத்தும் தாக்கம் சிறந்த தாக்கமாக அமையும். எனவே நன்கு தெரிந்த விடைகளை முதலில் எழுதுவது நல்லது.
நன்றாக தெரிந்த வினாவிற்கு தேவைக்கு அதிகமாக எழுதி தேர்வின் பாதி நேரத்தை வீணடித்து விடக்கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்க வேண்டும்.(எ.கா. 3 மணி நேரம் பரீட்சை என்றால் 10 நிமிடம் கேள்வித்தாளை முழுவதுமாக ஒரு பார்வை பார்க்க: 5 நிமிடம் தெரிந்த விடைகளை தேர்ந்தெடுத்து விரிசைப்படுத்த: அடுத்து ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட மதிப்பெண்ணை மனதில் கொண்டு தகுந்த நேரம் ஒதுக்கி எழுத வேண்டும்.)
பொதுத் தேர்வுக்கு முன் பள்ளிகளில் நடக்கும் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கூறிய முறையை பயிற்சி செய்து கொள்ளவும். அழகிய முறையில் எவ்வாறு தேர்வு எழுதுவது என்பதையும் காண்போம்.
தேர்வில் அழகாக மற்றும் தெளிவாக எழுதுவதன் மூலமாக திருத்துபவரின் சிரமம் குறைகிறது. அவர் சிரமம் குறைந்தால் நம் மதிப்பெண் அதிகரிக்கும்.
தேர்வுத்தாளை திருத்துபவர் எல்லா பலவீனங்களும் கொண்ட மனிதன் என்பதால் அழகாக இல்லை என்றாலும் குறைந்த பட்சம் தெளிவாக எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. எழுத்தைக் கொண்டே ஒருவருடைய மனப்பான்மையை ஒரு வகையில் யூகிக்க முடிகிறது என்று கூறுகிறார்கள். அதிக அடித்தல் திருத்தலுடன் எழுதுவது ஒருவருடைய நிலையற்ற மனப்பான்மையை எளிதில் காட்டி விடும்.
அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதுவற்கு பெரும் சாதனை செய்ய வேண்டியதில்லை. பொதுத்தேர்வு தொடங்க இன்னும் நாட்கள் உள்ள இந்த தருணத்தில் வெறும் படிக்க மட்டும் செய்யாமல் படித்ததை சிரமம் பார்க்காமல் எழுதிப் பார்த்து விடுவது நாம் பரிட்சையில் செய்யும் பல தவறுகளை நமக்கு அடையாளம் காட்டி விடும். பயிற்சித் தேர்விலும் பொதுத் தேர்விலும் கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக சிறந்த முடிவுகளைப் பெற முடியும்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் வரிக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு எழுதவும்.
ஒரு பகுதியில் உள்ள முக்கியமானக் கருத்துக்களை அடிக் கோடிட்டு காட்டவும்.
வண்ண எழுதுகோல்கள் உபயோகிப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. ஏனெனில் முட்டாள்தனமான வண்ணங்களை அடிக்கோடிட உபயோகிப்பது திருத்துபவரின் எரிச்சலை கூட்டும். நம் மதிப்பெண்ணைக் குறைக்கும். எனவே சற்று கூடுதல் கருமையான பென்சில்களை உபயோகிப்பது நல்லது.
அறிவியல் பாடங்களில் வரையும் படங்களை அழகாக வரைவதுடன் அனைத்துப் பாகங்களையும் கட்டாயம் குறித்துக் காட்டுங்கள். முடிந்தால் நகல் எடுத்தது போல் வரைவது நல்லது. (இதற்காக அதிக நேரத்தை விணாக்க வேண்டாம்).
முதல் கேள்வியில் அழகாக எழுதத் தொடங்கி செல்ல செல்ல கோழிக் கிறுக்கலாக மாறி விட கூடாது. ஒவ்வொரு கேள்விக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்கி எழுதுவதன் மூலமாக தேர்வில் கடைசி நிமிடத்தில் நடைபெறும் இது போன்ற தவறுகளைத் திருத்தி கொள்ளலாம். கடைசி நிமிடம் வரை படிப்பதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
எவ்வாறு கேள்வித்தாளை வாங்கியவுடன் எழுத ஆரம்பிக்க கூடாதோ அதைப் போலவே கடைசி வினாடி வரை எழுதவும் கூடாது. குறைந்தது 5 நிமிடங்களுக்கு முன்னதாக எழுதி முடித்துவிட்டு கீழ்க்கண்டவற்றை சரி பார்க்கவும்.
ஒவ்வொரு பதிலுக்குமான கேள்வியின் எண்ணை சரியாக எழுதி உள்ளீர்களா என சரி பார்க்கவும். இது மிக மிக முக்கியம்.
ஒவ்வொரு பதிலிலும் முக்கியமான புள்ளிகள் அடிக்கோடிடபபட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
சூத்திரங்கள் பெட்டிக்குள் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரி பர்க்கவும்.
மிக முக்கியமான ஒன்றை கவனத்தில் கொள்ளவும். எக்காரணம் கொண்டும் 786, நாகூர் ஆண்டவர் துனை, பிஸ்மில்லாஹ் முருகன் துனை போன்ற வாசகங்களை விடைதாளில் எழுத வேண்டாம். இது முதல் பார்வையிலேயே உங்கள் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தலாம். திருத்துபவர் மாற்று நம்பிக்கையாளராகவோ அல்லது இறை நம்பிக்கை அற்றவராகவோ இருக்கும் பட்சத்தில் இவை எதிர் மறை விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே பக்தியை எழுத்தில் காட்டாமல் மனதில் நினைத்து எழுத தொடங்கி விடுவது நல்லது. (786, நாகூர் ஆண்டவர் துனை என்பதெல்லாம் இஸ்லாத்திற்கெதிரானது)
எல்லாவற்றிக்கும் மேலாக கடின உழைப்பும் அதிகமாக பயிற்சி செய்து தேர்வுகளை எழுதுவதும் உங்களின் மதிப்பெண்ணைக் கூட்ட உதவும்.
நன்றி: உணர்வு வார இதழ்
Labels:
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
பொதுத் தேர்வு,
coimbatore,
covai,
kovai,
tntj
புதன்
ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -2000/ மருத்துவ உதவி
Labels:
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
மருத்துவ உதவி,
coimbatore,
covai,
kovai,
tntj
ர் கிளை சார்பாக ஏழை சகோதரருக்கு ரூபாய் -2000 மருத்துவ உதவி
Labels:
ஆசாத் நகர்,
தவ்ஹீத்,
மருத்துவ உதவி,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
ஞாயிறு
மாதவிடாயில் உடலுறவுக்குப் பரிகாரம்?
மாதவிடாய் நேரத்தில் மனைவியுடன் கூடினால் அதற்குரிய பரிகாரம் என்ன? அப்துல்லாஹ்
பதில்
மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
இத்தடையை மீறியவர்கள் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும். இதுவே அந்தப் பாவத்துக்குரிய பரிகாரமாகும்.
230حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ حَدَّثَنِي الْحَكَمُ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ قَالَ أَبُو دَاوُد هَكَذَا الرِّوَايَةُ الصَّحِيحَةُ قَالَ دِينَارٌ أَوْ نِصْفُ دِينَارٍ رواه أبو داود
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
சனி
ஸஃபர் மாதமும்! நாமும்!!
மறைவான ஞானங்களை தெளிவாகத் தெரிந்திருக்கும் மகத்தான ஆற்றலாளனாகிய அல்லாஹ் தன் அரும்மறையில் கூறுகின்றான்...
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.(அல்குர்ஆன் 6:59)
Labels:
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
ஸஃபர் மாதம்,
coimbatore,
covai,
kovai,
tntj
வெள்ளி
ரேஷன் கார்டு : கால அவகாசம் நீட்டிப்பு!
வியாழன்
சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
போராட்டங்களால் பெற்ற இரண்டாவது வெற்றி
தமிழகத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற நமது போராங்களால் 3.5 சதவிகித இட ஒதுக்கீடு நமக்கு கிடைத்தது. அது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெற்ற முதல் வெற்றி!
முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு தரவேணடும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகின்றது. வருகின்ற பிப்ரவரி 14ம் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவடடங்கள் தோறும் மாபெரும் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு தற்போது வீரியத்துடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 4.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது தான் எனினும் நம்முடைய போராட்டங்களின பயனாக விளைகின்ற பலனை முதலில் அறுவடை செய்வோம். பிற்காலங்களில் அது அதிகரித்திடவும் தேவையான பணிகளை செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.
சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.aa
Thanks : DINAMALAR
ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -1000/ மருத்துவ உதவி
Labels:
ஆசாத் நகர் கிளை,
கோவை,
தவ்ஹீத் கிராமம்,
மருத்துவ உதவி,
coimbatore,
covai.,
kovai,
tntj
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் 500/ உதவி
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு
Labels:
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
வாராந்திர சொற்பொழிவு,
coimbatore,
covai.,
kovai,
tntj
ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் ஆலோசனை கூட்டம் 18.12.11 அன்று அஸர் தொமுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் தவ்ஹீத் வளர்ச்சி பணிகள் பற்றிய ஆலோசனையும், தவ்ஹீத் எனும் ஓர்இறை கொள்கையை பெண்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன. விரைவில் தெருமுழுனை கூட்டங்கள் அதிகம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Labels:
ஆசாத் நகர்,
ஆலோசனை கூட்டம்,
கோவை,
தவ்ஹீத்,
coimbatore,
covai,
kovai
ஞாயிறு
இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?
இணைவைத்து விட்டால் பரிகாரம் என்ன?
கலிமா சொன்ன ஒரு முஸ்லிம் இணைவைத்துவிட்டால் அதற்கு பரிகாரம் செய்து மீண்டும் இஸ்லாத்தில் நுழைய முடியுமா?
ரிஸ்வான் நுஃமான்
பதில்
இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் இணைவைத்து விட்டால் அவர் இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியேறி விடுகின்றார். இவர் மீண்டும் இஸ்லாத்தில் இணையவேண்டுமானால் முதலில் இவர் செய்து கொண்டிருந்த இணைவைப்புக் காரியத்திலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும். இந்த பாவத்துக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு லாயிலாஹ இல்லல்லாஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு தகுதியானவர் இல்லை) என்று கூற வேண்டும்.
Labels:
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
பரிகாரம்,
coimbatore,
covai,
kovai,
tntj
சனி
கோவை மாட்டம் ஆசாத் நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி.
Labels:
கோவை,
தவ்ஹீத்,
வாராந்திர சொற்பொழிவு,
coimbatore,
covai.,
kovai,
tntj. covai.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வரதட்சணை இல்லாத நபி வழி திருமணம்.
Labels:
ஆசாத் நகர்,
தவ்ஹீத்,
நபி வழி திருமணம்,
coimbatore,
covai,
kovai,
tntj
ஆசாத்நகர் கிளையில் ரூ.5000 வாழ்வாதார உதவி
புதன்
செவ்வாய்
இளைஞர்களே! சுய இன்பமும் விபச்சாரமே!
இன்றைய நவீன உலகில் பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடி பல வழிகளிலும் மனிதன் முயன்று கொண்டிருக்கிறான் ஆனால் அவனால் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியாமல் அவதிப் படுகிறான்.
ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்று உண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.
இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.
ஆனால் இந்த நவீன யுகத்தில் கூட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்றால் ஒன்று உண்டென்றால் அது இஸ்லாமிய மார்க்கம் தான் என்பதை பலர் அறியாமலேயே இருக்கின்றார்கள்.
இன்றைய நாட்களில் உள்ள சிக்கள்களில் முதன்மையானதாக இருப்பது உடல் ஆசையைத் தீர்த்துக் கொள்ளத் துடிக்கும் செக்ஸ் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பலரும் பலதரப்பட்ட விளக்கங்களைச் சொன்னாலும் அந்த விளக்கங்களால் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை என்பதே உண்மை.அதிலும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஒரு பாவகரமான செயல்தான் சுய இன்பம் என்பதும்.
பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:
பாராட்டுப் பத்திரங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :
அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :
கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
திங்கள்
நெல்லையில் நடந்த TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு
கடந்த 11-12-2011 அன்று நெல்லை பார்வதி மஹாலில் TNTJ மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழு தலைவர் சகோ.ஷம்சுல் லுஹா அவர்களின் ’தவ்ஹீத் குடும்பம்’ என்ற தலைப்பில் அடங்கிய உரையுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு சிறப்பாக துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் !
முதல் கட்டமாக ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன்பு தணிக்கை குழு தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் வாசித்து காண்பித்து விளக்கினார்கள். பைலா திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இப்பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஆர்வத்துடன் கையில் பைலா புத்தகம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!.
Labels:
தவ்ஹீத்,
பொதுக்குழு,
coimbatore,
covai.,
kovai,
tntj. covai. திடல் தொழுகை
வியாழன்
மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் – ஆசாத் நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 07.12.2011 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ஷிஹாப் உல் ஹக் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது?” நிகழ்ச்சியை நடத்துவது குறித்து பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
“ஆசுரா நோன்பு ஏன்?” ஆசாத் நகர் கிளை தெருமுனை
Labels:
“ஆசுரா நோன்பு ஏன்,
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
தெருமுனை,
covai.,
kovai,
tntj
புதன்
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 04.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் உலகில் நடக்கும் பித்அத்துகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Labels:
ஆசாத் நகர் கிளை,
வாராந்திர சொற்பொழிவு,
coimbatore,
covai.,
kovai,
tntj
திங்கள்
தவ்ஹீத் ஜமாஅத்தால் உறவுகள் முறிவு
இஸ்லாத்திற்கு முரணான திருமணங்கள் மற்றும் அனாச்சாரமான, நிகழ்ச்சிகளுக்கு சொந்த உறவினர்கள் வந்து அழைத்தாலும் தவ்ஹீத் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தவிர்க்கிறார்கள். மாற்றுக் கொள்கையுடையவர்கள் இந்த தவ்ஹீத் ஜமாஅத் வந்ததில் இருந்து உறவுகள் முறிகின்றன என்று சொல்வது சரியா ?
- கிள்ளை யூசுப்,
? உறவுகள் முறியும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அசத்தியத்தை எதிர்த்து யார் களம் இறங்குகிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த நிலையைச் சந்தித்தே உள்ளனர். தீமைகளைக் கண்டு யாருக்குக் கோபம் வருகிறதோ
Labels:
ஆசாத் நகர் கிளை,
உறவு,
coimbatore,
covai,
kovai,
tntj. covai. திடல் தொழுகை
பெண்கள் பூ வைக்கலாமா?
முஹம்மத் ஃபத்தாஹ் தஞ்சை
பதில்
பூ என்பது நறுமணப்பொருளாகவும் அலங்காரமாகவும் உள்ளது. பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் இஷாத் தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசிக்கொண்டு வரக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பூ வைத்துக் கொண்டு இரவில் பள்ளிக்கு வரக்கூடாது.
பள்ளி அல்லாத மற்ற இடங்களுக்கு பூ வைத்துக்கொண்டு செல்லலாம். பூ அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவது கூடாது.
ஞாயிறு
கோவையில் இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மதுக்கரை கிளையின் சார்பாக 04.12.2011 அன்று இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் பிறமத சகோதரர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். பிறமத சமுதாய மக்கள் இஸ்லாத்தை
வியாழன்
தரகுத் தொழில் கூடுமா?
நூர்தீன்
பதில்
பொதுவாக தரகு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை விற்க நினைத்தால் யார் வாங்கும் எண்ணத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய முடியாது. இதற்காகவே சிலர் முயற்சித்து தகவல்களைத் திரட்டி தருவதை தமது முழு நேரத் தொழிலாக செய்து வருகின்றனர். தரகர்கள் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் தடைபட்டு விடும்.
ஆசூரா நோன்பு
முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆம் பிறையில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 1592
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























