தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

சவுதியில் மக்கள் புரட்சியா?

ஜனநாயக உரிமைகளைக் கேட்டுப் போராடும் அரசு எதிர்ப்பாளர்கள் வன் செயல்களில் இறங்கிவிடக்கூடாது என்று முன் எச்சரிக்கையாக சவூதி அரசு எடுத்த நடவடிக்கையால் தலைநகர் ரியாத் மற்றும் கத்தீப் போன்ற பகுதிகளில் திரும்பிய திசைகளில் எல்லாம் போலீஸ் தலைகளாகவே இருந்தன. வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்ததும் அரசு எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டு வன்முறையில் ஈடுபடுவார்கள். என்ற Facebook போலியாக கதைஎழுதி பனம் சம்பாதிக்க எண்ணியது. அதைச் சமாளிப்பதற்காக போலீஸôர் குவிக்கப்பட்டனர்.
அவர்கள் அதற்கும் முன்னதாக அரசு எதிர்ப்பாளர்கள் இருக்கும் பகுதியில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டனர். விடுதிகள் ஹோட்டல்களில் தங்கி இருப்பவர்கள் யார் என்று சரிபார்த்தனர். நகரின் வணிக மையங்கள், கடைவீதிகள், திடல்களில் உள்ளவர்களைக் கண்காணித்தனர்.
 
ஷியாக்கள் எதிர்ப்பு: சவூதியில் அரசு எதிர்ப்பாளர்கள் என்றாலே அது ஷியா பிரிவினர்தான் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு அரசு மீது அதிருப்தி இருக்கிறது. மன்னராட்சி நடக்கும் சவூதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 30 லட்சத்தில் 10 சதவீதம் பேர் ஷியாக்கள். அவர்கள் அரசின் உயர் பதவிகளிலோ ராணுவ உயர் பதவிகளிலோ நியமிக்கப்படுவதில்லை.
ஜனநாயக ரீதியான ஆட்சியாக இருந்தால் தங்களுக்கும் சம உரிமைகள் தரப்படுவதை சட்டம் உறுதி செய்யும் என்று நினைக்கின்றனர். எனவே அரசு எதிர்ப்பு கிளர்ச்சிகளில் பங்கேற்கின்றனர். சவூதியில் சன்னி பிரிவினர் அதிகம் என்றால் ஈரானில் ஷியாக்கள்தான் அதிகம். எனவே சவூதியில் உள்ள ஷியாக்களுக்கு ஈரானின் ஆதரவு இருப்பதாக ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு சந்தேகம்.
எனவே டுனீசியா, எகிப்து சம்பவங்களைப் பார்த்து சம உரிமைக்காக  நடக்கும் இந்த ஜனநாயகக் கிளர்ச்சியையும் அரசுக்கு எதிரான சதியாகவே சவூதி அரசு பார்க்கிறது. அதே சமயம் லிபியா அளவுக்கு அது அடக்குமுறையைக் கையாளவில்லை. அரசுக்கு எதிராக மக்கள் திரண்டுவருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த உடனேயே கிட்டத்தட்ட 3600 கோடி டாலர் மதிப்புக்கு மக்களுக்கு சலுகைகளை அரசு வாரி வழங்கியது. அப்படியும் கடீஃப் என்ற நகரில் வியாழக்கிழமை நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்தது. சிகாத்தில் சில கொள்ளப்பட்டதாக உறுதியற்ற செய்திகளும் வந்துள்ளன.
 
முழு ஜனநாயக உரிமைகள் வழங்கப்படாவிட்டாலும் சவூதி அரசுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதை மேற்கத்திய நாடுகளும் (அமேரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகள்) உறுதி செய்யும். சவூதியில் உள்நாட்டுக் கலவரம் நடந்தால் சர்வதேச அளவில் கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.