தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தாயிக்கள் தேர்வு – தாயிக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு


         இறைவனின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்வதையும், அழைப்பாளர்கள் பற்றாக்குறை அதிகரிப்பதையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே அழைப்பாளர்களுக்கான ஒரு மாத பயிற்சி முகாம் சென்னை தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் நடந்து வரும் நிலையில்,  தமிழகம் முழுவதும் உள்ள அழைப்பாளர்களின் மார்க்க அறிவைச்சோதிப்பதற்காக மேலும் அவர்களது மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும்  கடந்த 27/03/2011 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருவாரூர் மற்றும் நெல்லை என 5 மண்டலங்களில் தேர்வு நடைற்றது.
இந்தியா முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் இருக்கும் அழைப்பாளர்கள் மிக ஆர்வமாகக் கலந்து கொண்டார்கள்.
எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு என இரண்டு கட்டமாகத் தேர்வுகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணி முதல் 12.30 வரை எழுத்துத் தேர்வுகள் நடந்தன.
ஆன்லைன்பிஜே தளத்தில் இடம்பெற்றிருந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கேள்விகளும், அத்தோடு தவ்ஹீத் கொள்கை தமிழகத்தில் சந்தித்த இடர்பாடுகள் குறித்த கேள்விகளும் இடம்பெற்று இருந்தன.
மொத்தம் 200 மதிப்பெண்களை உடைய சரியானதைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா தவறா மற்றும் இரு வரிகளில் விடைதருக என்ற அமைப்பில் கேள்விகள் இடம்பெற்று இருந்தன.
மதியம் லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளைக்குப் பிறகு வாய்மொழித்தேர்வுகள் நடைபெற்றன. வாய்மொழித் தேர்வில் சூராக்கள் மனனம் மற்றும் துவாக்கள் கேட்கப்பட்டன.
அத்தோடு தாயிக்களின் குர்ஆன் ஓதும் திறனை சோதிக்கும் பொருட்டும் சோதனைகள் நடந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. மாலை 4.30 வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் மாலை 5.30 வரை தேர்வுகள் நீடித்தன. இந்தத் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் நன்கு சிந்தித்து பதிலளிக்கும் வகையிலும், மார்க்க அறிவுக்கு மேலும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இருந்ததாக தேர்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு இதுபோன்ற தேர்வுகளை தொடர்ந்து நடத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்கள்.