

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்த இடம் அங்கு வந்துசெல்லும் மக்கள் தொழுவதற்கு நல்ல முறையில் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கேராளாவில் இயங்கி வரும் “மர்கஸூஸ் தக்காபஸூஸ் சுன்யா” என்ற எத்தீம் கானா அமைப்பு நிர்வாகிகள் உமர் அப்துல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஒரு இடம் தாருங்கள். அங்கே நாங்கள் கடை கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தை எங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என இவர்கள் கேட்க, அவர்களுக்காக அந்த கட்டிடத்தின் 3 மற்றும் 4வது தளங்களை முழுமையாக விட்டுக்கொடுத்து விட்டு டெல்லிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் உமர் அப்துல்லாஹ்.
இந்த நிலையில் கேரள அமைப்பினரால் அந்தக் கட்டிடத்திற்கு அல்-அல்ஹாஜ்.மன்சூர் என்பவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த கேரள அமைப்பினர் தொழுகை நடந்து வரும் இரண்டாவது தளத்தையும் அபகரிக்க நினைத்து மன்சூர் மூலமாக அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
எப்படியாவது இங்கே தொழுபவர்களை விரட்டியடித்து விட்டு இந்தப் பள்ளியை அபகரித்து யாருக்காவது விற்றுவிடலாம் என திட்டமிட்ட இந்த அல்ஹாஜி சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை சீனிவாசன் என்பவர் வர்ஷலட்சுமி என்ற பெயரில் வட்டிக்கடை நடத்துவதற்கு விற்று விட்டாராம். விற்றவருக்கு இடத்தை ஒப்படைப்பதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையைப் பயன்படுத்தியிருக்கிறார் இந்த அல்ஹாஜி.
காரணம் பூக்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக யாரும் தொழவர மாட்டார்கள் என நினைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப்பள்ளிக்குள் இருந்த பாய், குர்ஆன், தொழுகை விரிப்பு, தஸ்பீக் மணிகள் மற்றும் கடிகாரம் என அனைத்துப்பொருட்களையும் இரவோடு இரவாக மூட்டைக்கட்டி கீழே இருக்கும் சுரங்க அறையில் வைத்துப்பூட்டிவிட்டு பள்ளிவாசலுக்கு வேறு பூட்டு போட்டு பூட்டி சென்று விட்டார் இந்த அல்ஹாஜ். மறுநாள் மதியம் பள்ளிவாசல் பூட்டப்பட்ட செய்தி அறிந்த பொதுமக்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு விசயத்தை அறிவித்தனர்.
உடனடியாக களமிறங்கிய தலைமை பூக்கடை கிளையைத் தொடர்பு கொண்டு இந்த விசயத்தை அனுகுமாறு அறிவித்தது. அத்தோடு தென்சென்னை வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் களத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். மேற்படி நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவரோ அதை நான் சீனிவாசன் என்பவருக்கு விற்றுவிட்டேன் என கூலாகச் சொல்ல, திரண்டிருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பூட்டை உடைப்பது என முடிவு செய்து அந்தப் பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்க்கும் போது அந்த இடம் பள்ளிவாசல் இருந்ததற்கு கொஞ்சம் கூட அடையாளம் இல்லாமல் மாறிப்போய் இருந்தது
உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் தலைமை அலுவலகத்திற்கு வந்து பாய், குர்ஆன், தொழுகை விரிப்பு போன்ற பொருட்களை எடுத்துச் சென்று அங்கே வைத்து அதை மீண்டும் பள்ளிவாசலாக அமைத்தனர். அத்தோடு அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 3 சகோதரர்களை இரவு 9 மணிவரை பாதுகாப்புக்கு வைத்து விட்டு மற்றவர்கள் கலந்து சென்றனர். காவலுக்கு இருந்தவர்கள் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு கிளம்ப எத்தனித்து பள்ளியைப்பூட்டி அதன் சாவியை கீழே இருந்த கடையில் கொடுத்து விட்டுச்சென்று விட்டார்கள். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் 15 மேற்பட்ட குண்டர்களோடு அங்கே வந்த சீனிவாசன் குழு அதிரடியாக வெளியே இருந்த ஒழு செய்ய பயன்படும் கற்களை உடைத்து விட்டு மீண்டும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கே தொழுகை செய்வதற்கு இமாம் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபி வடிவத்தையும் உடைத்துப் பெயர்த்து எறிந்தது.
பின்னர் அங்கேயிருந்த பாய்கள் மற்றும் குர்ஆன் என அனைத்துப்பொருட்களையும் பழையபடி மூட்டை கட்டிப் போட்டிப்போட்டுவிட்டு அவர்களது வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் தகவல் உடனடியாக மீண்டும் நம் சகோதரர்களுக்கு தெரிய புயலென களமிறங்கிய கிளை மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் அங்கே பள்ளியை இடித்துக் கொண்டிருந்தவர்களுடன் கடுமையான வாக்குவாதம் புரிய, இதை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் அந்தப்பகுதியில் குழும ஆரம்பித்தனர்.
உடனடியாக அங்கே வந்த காவல்துறையினர் அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனக்கூறியதைத் தொடர்ந்து நம் சகோதரர்கள் அங்கே கரசேவையில் ஈடுபட்ட குண்டர்கள் மீது புகார் அளிக்க உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கை(FIR)
