மகள் திருமணத்திற்கு 50000 மும் அறைசவரன் பவுனும் இலவசம்!!
அவள் கற்பிணியானால் ருபாய் 10000 இலவசம்!!
முதல் குழந்தைக்கு பட்டப்படிப்புவரை இலவசம்!!
பள்ளி சீருடை காலணிகள் இலவசம்!
அவன் பள்ளிக்கு செல்ல சைக்கில் இலவசம்!
+1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசம்!
பஸ்ஸில் செல்ல பஸ் பாஸ் இலவசம்!
அன்றாட உணவிற்கு அரிசி இலவசம்!
அரிசி அரைக்க கிரைண்டர் இலவசம்!
குழம்பு வைக்க மிக்சி இலவசம்!
சமையல் செய்ய ஸ்டவ் இலவசம்!
சமையல் சிலிண்டரும் இலவசம்!
சமையல் முடிந்ததும் சீரியல் பார்க்க தொலைக்காட்சி இலவசம்!
அதற்கு கேபிள் இணைப்பும் இலவசம்!
மாலையில் டீ காப்பி குடிக்க பாலிற்காக மாடு இலவசம்!
வியர்க்காமல் தூங்க மின்விசிறி இலவசம்!
20 லிட்டர் (குடிதண்ணீ தாங்க) தண்ணீர் இலவசம்!
வீடு இல்லாதவர்க்கு மணை இலவசம்!
மனையில் வீடு கட்ட ருபாய் 180000 லட்சம் இலவசம்!
விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம்!
தண்ணீர் மோட்டார் இலவசம்!
செல்போன் இலவசம்!
பண்டிகை வந்தால் வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள் இலவசம்!
அவசர விபத்து என்றால் 108 ஆம்புலன்ஸ் இலவசம்!
அறுவது வயதை கடந்தால் பேருந்து கட்டணம் இலவசம்!
நோய்கள் என்றால் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை இலவசம்!
சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தால் ஈமச்சடங்கிற்கு உதவித்தொகை இலவசம்!
இப்படி எல்லாமே இலவசம் அப்புறம் நான் எதுக்கு தேவையில்லாம உடம்ப வளைக்கனும்! உழைக்கனும்!!