தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

பாபா ராம்தேவ் ஒரு வியாபாரி: காங்கிரஸ் தாக்கு

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ள பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு வியாபாரி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய் சிங், இன்று உத்தரப் பிரதேசத்தில் மொரதாபாத் நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

பாபா ராம்தேவை கண்டு காங்கிரஸ் கட்சி பயப்படவில்லை. அவருடன் பேச்சு நடத்துவதற்கு பயம் காரணமில்லை. அவ்வாறு நாங்கள் பயந்திருந்தால், அவர் இப்போது சிறைக்குள் இருந்திருப்பார். எங்களுக்கு பயம் இல்லை என்பதால் தான், ராம்தேவ் சுதந்திரமாக வெளியே உள்ளார். அவருடன் மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ராம்தேவ் ஒரு சந்நியாசி என்பதை விட ஒரு வியாபாரியாகவே செயல்படுகிறார்.

யோகா கற்றுத் தருவதற்கு அவரது வகுப்புகளில் முன்வரிசையில் அமருவதற்கு ரூ. 50 ஆயிரமும், அதற்கு அடுத்த வரிசைகளில் அமர ரூ. 30 ஆயிரமும் வசூல் செய்கிறார். கடைசி வரிசையில் அமருவதற்கு கூட 1000 ரூபாய் கட்டணம் வாங்குகிறார்.

இது வியாபாரம் இல்லையென்றால் வேறு என்ன?

இவ்வாறு திக்விஜய் சிங் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராகவும், கறுப்புப் பணத்தை மீட்க வலியுறுத்தியும் நாளை மறுநாள் தில்லியில் பாபா ராம்தேவ் தனது உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். நாடு முழுவதும் இருந்து அவரது ஆதரவாளர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு ராம்தேவை சமாதானப்படுத்தி அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ராம்தேவை ஒரு வியாபாரி என்று வர்ணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-DINAMANI