அமைச்சரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்த சச்சார் கமிட்டி செயலாளர் உறுப்பினராகயிருந்த பிரபல பொருளாதார வல்லுநர் அபூ ஸாலிஹ் ஷெரீஃப் சல்மான் குர்ஷிதிற்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஏராளமான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என அபூ ஸாலிஹ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சச்சார் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி முஸ்லிம்கள் சமூகத்தில் பின் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி உள்பட மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சிபுரிந்த அரசுகளாகும் என அபூ ஸாலிஹ் குற்றம் சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டில் கூட பாரபட்சத்தை காண்பித்த இந்த அரசுகள் முஸ்லிம்களை ஒதுக்கி தள்ளினர். பல்வேறு துறைகளில் 60 வருடங்களாக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமைக்கு என்ன செய்தார்கள் என்பதை அரசுகள் விளக்க வேண்டும்.
அரசின் உண்மை முகம் இழிவுக்கு ஆளாகுமானால் பாரபட்சம் என்ற வார்த்தையை வேண்டுமானால் நீக்கலாம் என அபூஸாலிஹ் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதை தெளிவுப்படுத்துவது தான் தனது புதிய ஆய்வு என அபூ ஸாலிஹ் கூறுகிறார். அரசு கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் அரசு தொழில் நிறுவனங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐ.மு அரசு என்ன செய்தது? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
சச்சார் கமிட்டி அறிக்கையை பழித்தூற்றும் சல்மான் குர்ஷித் ஏன் அதனை ஏற்றுக்கொண்டார்? என அபூஸாலிஹ் கேள்வி எழுப்புகிறார். இச்சர்ச்சையை குறித்து பதிலளித்த சல்மான் குர்ஷி, ‘முஸ்லிம்களை மட்டும் சிறுபான்மையினராக பார்ப்பதும், மற்றவர்களை காணாதிருப்பதையும் எதிர்ப்பவன் நான். முஸ்லிம்களுக்கு விமர்சிக்க முடியாத ஒன்று குர்ஆன் மட்டுமே. அதனால் தான் நான் இவ்வாறு கூறினேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
சல்மான் குர்ஷித்தின் கருத்துக்களைக் குறித்து பதிலளித்த நீதிபதி ராஜேந்திர சச்சார் ஜூடிஸியல் தொடர்பான விஷயம் என்பதால் இதுக்குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சல்மார் குர்ஷித்தின் அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்கு பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.