தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் வெற்றி!

ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப கால கட்டத்தில் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைபாட்டில் தான்தவ்ஹீதுவாதிகள் இருந்தனர்.
1989ஆம் ஆண்டு அல்ஜன்னத் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்த பி.ஜே. அப்போது எழுதியதைப் பாருங்கள்.

யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்சம் லாவண்யம் ஒழிந்து விடப் போகிறதாதமிழ்ச் சமுதாயம் வறுமைக் கோட்டைத்தாண்டி விடப் போகிறதாஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்பட்டு விடப் போகிறதாகுற்றங்கள் குறையப் போகின்றனவா?ஏறிவரும் விலைவாசி இறங்கப் போகின்றதாஇதில் எதுவுமே நடக்கப் போவதில்லை. அவர்கள் வாங்கிய லஞ்சத்தை,வாரிச் சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம்மட்டுமே. பதவி பித்துப் பிடித்துப் போய் அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிற்பதைத் தவிரவேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்ன தான் செய்வது?இதோ அல்லாஹ் சொல்கிறான்.

அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ்அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.அல்குர்ஆன் 4:85

நன்மையிலும்இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும்வரம்பு மீறலிலும்ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
அல்குர்ஆன் 5:2
வட்டியும் மதுவும் சூதும் லஞ்சமும் ஒழுக்கக் கேடுகளும் குற்றங்களும் எவராலும் ஒழியப் போவதில்லை. இறைவன் தீயகாரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்னவந்து விடப் போகிறதுஅல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப் போவதில்லை.அல்ஜன்னத்ஜனவரி 1989
ஆனால் பாபரி மஸ்ஜித் இடிப்பு நம்முடைய அந்தப் பார்வையை முற்றிலும் மாற்றியது. நம்முடைய வாக்குரிமையைதேர்தலில் பயன்படுத்தாமல் விடுவது பி.ஜே.பி. போன்ற முஸ்லிம் விரோதக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்துவதற்குப் பாதைவகுத்து விடும் என்று உணர்ந்ததால் அந்த நிலைபாட்டைக் கைவிட நேர்ந்தது. நாம் எதிர்த்து வாக்களித்த பின்னரும் பி.ஜே.பி.ஆட்சிக்கு வந்தால் அது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் தான் நம்முடைய வாக்குரிமையைப் பயன்படுத்தும் முடிவுக்கு வந்தோம்.
சமுதாயத்திற்காகப் போராடும் வாசல் ஜாக்கில் அடைக்கப்பட்டதால் தமுமுக என்ற இயக்கத்தைத் தவ்ஹீதுவாதிகள்கண்டனர்.
அந்த அமைப்பைக் கண்ட பிறகு முதன் முதலில் சந்தித்த தேர்தல் 1998 நாடாளுமன்றத் தேர்தல்!
கோவையில் குண்டுவெடிப்பு நடந்துமுஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது.
அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகபிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்தது. திமுக ஆட்சியில்1997ல் நடைபெற்ற கலவரத்தில் காவல்துறையினரால் முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். எனவேஇரண்டு கட்சியையும் ஆதரிக்க முடியாத நிலையில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுத்தோம்.
ஆனால் பிப்ரவரி 14,1998ல் கோவை குண்டு வெடிப்பு நடந்ததால் புறக்கணிப்பு என்ற முடிவை மாற்றி வலிமையானவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.
அந்தத் தேர்தல் நடைபெற்று 13 மாதங்களில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிபிஜேபி ஆட்சியைக்கவிழ்த்தார்.அடுத்து 1999ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல்.அப்போது திமுகபிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தது. இக்கால கட்டத்தில் கருணாநிதி தமுமுகவை நசுக்கி அழிப்பதற்குத்துடித்துக் கொண்டிருந்தார்.
ஜூலை 4 அன்று சென்னையில் நடைபெறவிருந்த வாழ்வுரிமை மாநாட்டையும் தடை செய்து விடுவார் என்ற ஒருநெருக்கடி இருந்தது. அதனால் அம்மாநாட்டிற்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தோம். அதில் கலந்து கொண்ட அவர்,பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். இந்தக் சூழலில் 1999 நாடாளுமன்றத் தேர்தல்வந்தது. அந்தத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தோம்.

2001 சட்டமன்ற தேர்தல்
முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்து அதைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதாகவும்ஜெயலலிதா சொன்னதன் அடிப்படையில் அதிமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம். ஆனால் தேர்தல் அறிக்கையில்தலித் முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு தருவோம் கூறிஇஸ்லாத்துக்குள் தலித்கள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். மேலும்முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு இடங்களை மட்டுமே ஒதுக்கினார்.
இதனால் வெகுண்டெழுந்து ஜெயலலிதாவுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியதுடன்ஜெயலலிதாவின் இந்த ஆணவப்போக்கிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை எதிர்த்து அந்தத் தேர்தலில் களமிறங்கினோம்.
அதிமுக போட்டியிடும் இடங்களில் அதிமுகவை எதிர்ப்பதுமற்ற இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களைக்கவனித்து வாக்களிப்பது என்ற நிலைபாட்டை எடுத்தோம்.
2004 தேர்தலில் இடஒதுகீடு
2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தமுமுகவின் செயற்குழு தஞ்சையில் கூடியது. இந்த செயற்குழுதவ்ஹீதுவாதிகளை ஓரங்கட்டுவதற்கு ஒத்திகை பார்க்கப்பட்ட செயற்குழு என்று குறிப்பிடலாம்.
ஒவ்வொரு கருத்தும்ஆலோசனையும் முன்வைக்கப்பட்ட போதெல்லாம், "தலைவர் அதுபற்றி முடிவெடுப்பார்என்றுஜவாஹிருல்லாஹ்வின் தன்னாதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த சமயத்தில் 2004ல் விருதுநகரில் திமுக நடத்திய மாநாட்டில் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாகத்தீர்மானம் நிறைவேற்றியது.
எனவே இந்த இட ஒதுக்கீடு வாக்குறுதிக்காக திமுகவுக்கு ஆதரவளிக்கலாம் என்று தமுமுகவின் தேர்தல் நிலைபாடு பற்றிஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஆலோசனை வழங்கியது.
இந்தச் செயற்குழுவில் திமுகவை ஆதரித்து தீவிரமாகப் பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
உடனே குறுக்கிட்ட பி.ஜே.,"தேர்தலில் ஆதரவு என்றால் அது எந்த நிலையில் இருக்க வேண்டும்இஸ்லாத்தின்வரம்புகளை மீறாமலும் இயக்கத்தின் மரியாதைக்குப் பங்கம் ஏற்படாமலும் இன்னது செய்யலாம்இன்னது செய்யக்கூடாது என்று இப்போதே தெளிவாக வரையறுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் நம் சகோதரர்கள் வரம்பு மீறிவிடக்கூடும்'' என்று வற்புறுத்தினார்.
அப்போதைக்கு இதை மறுக்க முடியாமல் இதற்கான திட்டங்களை வகுக்க ஒரு குழு அமைக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. ஆனால் வகுக்கப்பட்ட எந்த விதிமுறையும் பேணப்படவில்லை.
"வாடி பொட்டப்பிள்ளை'' என்ற பாடலுக்குஆபாச நடனம் ஆடிய நங்கைகள் முன்னே செல்ல தமுமுக பொதுச் செயலாளர் ஓட்டுக் கேட்டுச் சென்ற அவலம் அப்போதுதான் நடந்தது.
அந்தத் தேர்தலில் தான் முதன்முதலில் இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் திமுகவிற்கு ஆதரவளித்தோம். இதன் பின்னர்இஸ்லாமிய சமுதாயத்தின் ஆதரவு இட ஒதுக்கீடு அடிப்படையில் தான் என்ற வியூகம் தமிழகத்தில் வகுக்கப்பட்டது. அதற்குமுன்பெல்லாம் தேர்தல் ஆதரவு என்பது அந்தந்த கட்சிக்குக் கிடைக்கும் சீட்டுகள் அடிப்படையில் தான் இருந்தது. இதைத்தான் தவ்ஹீதுவாதிகள் மாற்றியமைத்தனர்.
இதற்கிடையே ஏகத்துவக் கொள்கையால் தமுமுக வளர்ச்சி பாதிக்கின்றது என்று கூறி தவ்ஹீதுவாதிகளின் முதுகில்தமுமுக குத்தியதால் தவ்ஹீதுவாதிகள் ஆன்மீகம்அரசியல் இரண்டையும் இணைத்துச் செயல்படுகின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைக் கண்டனர்.
2006 தேர்தலில் இடஒதுகீடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானதும் கண்ட முதல் தேர்தல் 2006 சட்டமன்றத் தேர்தல்! இந்த சட்டமன்றத் தேர்தலைக்கருத்தில் கொண்டு கும்பகோணத்தில் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்து மாபெரும் உரிமை மீட்புப் பேரணியைநடத்தியது. எதிர்பார்த்தது போலவே அது உரிய பலனை அளித்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்துஅழைப்பு வந்தது.
ஜெயலலிதாவைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சிந்தனை கொண்டவர். முஸ்லிம்களுக்குஇட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று வெளிப்படையாகவே பேசியவர். இருப்பினும் கும்பகோணம் பேரணியில் கூடியகூட்டம் அவருடைய எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால்அவர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துஅது குறித்து ஆய்வு செய்வதற்காகஓர் ஆணையத்தையும் அமைத்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகள் அதிமுகவுக்குவிழுந்தாலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்தது.

எதிர்வீனையில்இடஒதுகீடு 
எதிர்பார்த்தது போன்று அதிமுக ஆட்சிக்கு வரவில்லையே என்று தவ்ஹீதுவாதிகள் கனத்த மனதுடன் இருந்தனர்.கவலையுடன் இருந்தனர். ஆனால் அல்லாஹ் அதில் நன்மையை வைத்திருந்தான்.

ஒரு சில கட்டங்களில் நேரடியாகக் கிடைக்காதது எதிர் விளைவில் கிடைத்து விடும். ஜெயலலிதா என்ன கொடுப்பதுநான்கொடுக்கிறேன் என்று கருணாநிதி வழங்கியது தான் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு!
எனவே இதன் மூலம் அல்லாஹ் ஒரு மாபெரும் வெற்றியை அளித்தான். இது தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல்நிலைபாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.
2006 நாடாளுமன்றத்தேர்தலில் இடஒதுகீடு
திமுக ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீட்டை உடனே தந்து விடவில்லை. அதற்காகப் பல கட்டப் போராட்டங்களை,ஆர்ப்பாட்டங்களைஅறப்போர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. அந்தப் போராட்டங்களில்திமுக அரசுமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை நன்றிக்கடனாக திமுகவிற்கு அளிப்போம் என்று பிரகடனம் செய்தோம்.

திமுக 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை அளித்ததும்நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னதாகவே கருணாநிதியைச்சந்தித்து வாக்களித்தபடி திமுகவை ஆதரிப்பதாக உறுதியளித்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்! அல்லாஹ்வின்கிருபையால் அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியும் கண்டது.
விதியை மறுக்கும் வீணர்கள்
2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவளித்து அந்தக் கட்சி தோற்று விட்டதால்தவ்ஹீத்ஜமாஅத் ஆதரித்தால் அந்தக் கட்சி தோற்று விடும் என்ற சென்டிமென்டை நமது எதிரிகள் வேண்டுமென்றே பரப்பினார்கள்.விதியை மறுத்து விதண்டாவாதம் பேசினார்கள்.
சென்ற சட்டமன்றத் தேர்தலில் நமது இலக்கு இட ஒதுக்கீடு! அந்த இட ஒதுக்கீட்டை எதிர் விளைவின் மூலம் வல்லஅல்லாஹ் கிடைக்கச் செய்தான். அது தான் நமது தேர்தல் வெற்றி! இது விதியை மறுக்கும் வீணர்களுக்குப் புரியப்போவதில்லை.
இவர்கள் பார்வையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தால் அந்தக் கட்சி தோற்று விடும் என்ற குஃப்ரான வாதத்திற்கு 2009நாடாளுமன்றத் தேர்தல் செருப்படியாக அமைந்தது.

2011 சட்டமன்றத் தேர்தலும் இட ஒதுக்கீடும்
இந்த சட்டமன்றத் தேர்தலை முக்கிய நிரலாகக் கொண்டு தான் 30.01.2011 அன்று சேலத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலபொதுக்குழு கூடியது. 
மாநில நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடியது இந்தப் பொதுக்குழு! நிர்வாகிகள் தேர்வுக்குஇன்னும் கால அவகாசம் இருந்த போதும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு முன்னரே கூடியது.
இப்பொதுக்குழு கூடுவதற்கு முன்னரே தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையிடம் தொடர்பு கொண்ட திமுகஅதிமுகதலைவர்களிடம்,பொதுக்குழு கூடுவதற்கு முன்னால் ஆளுங்கட்சி இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும். 
எதிர்க்கட்சிதேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். உங்களில் யார் இதைச் செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் தவ்ஹீத்ஜமாஅத் ஆதரவுஎன்று தெரிவித்திருந்தோம். இதனால் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போது இரு கட்சிகளும் மாறிமாறி தலைமையைத் தொடர்பு கொண்டன. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விடாதீர்கள் என்று நம்மைத் தாக்காற்றிக்கொண்டிருந்தன.
இந்நிலையில் இந்தப் பொதுக்குழு முடிவதற்கு முன்னால் இஸ்லாமிய இலக்கியக் கழகம் என்ற லெட்டர் பேடுஇயக்கத்தைச் சேர்ந்த ஹிதாயத்துல்லாஹ் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய முதல்வர்கருணாநிதிமுஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்துவதற்கு அமைச்சர்கள் கூட்டத்தில்கலந்து முடிவெடுப்பேன் என்று அறிவித்தார்.

தேர்தலுக்கு முன்பே வெற்றி
அல்லாஹ்வின் கிருபையால் இது தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு முடிவதற்குள்ளாக,தேர்தலுக்கு முன்பே கிடைத்தமாபெரும் வெற்றியாகும்.
முஸ்லிம்களுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு என்ற கருத்தாக்கம் தமிழகத்தில் பதிவானது தான் அந்த மாபெரும்வெற்றியாகும். அதுவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர வேறு எந்த சமுதாய அமைப்புகளோஅரசியல்கட்சிகளோலெட்டர் பேடுகளோ இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தநிர்ப்பந்தத்திற்குப் பின்னர் தமிழக முதல்வர் இவ்வாறு அறிவித்தார். அதற்குப் பிறகு தான் மற்ற இயக்கங்கள் வேறுவழியின்றி இந்தக் கோரிக்கையைக் கையில் எடுத்தன.
திமுக தலைவரின் மேடை அறிவிப்பு வெளியானதைத் தவிர அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் நமது தலைமைக்குவரவில்லை. அதுபோன்று அதிமுகவிடமிருந்தும் சரியான பதில் வரவில்லை.
அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரமே அப்போது முடிவுக்கு வரவில்லை. அதனால் தேர்தல் களம் பற்றி ஒருதெளிவான கண்ணோட்டம் ஏற்படாததால் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு பற்றிய முடிவை பின்னர் ஒருசெயற்குழு கூடி முடிவெடுக்கட்டும் என்று அந்த சேலம் பொதுக்குழு அதிகாரம் வழங்கியது.

சென்னையில் செயற்குழு
இதற்கிடையே இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நமது தலைமையிடம் வந்து பேசிய வண்ணமிருந்தனர்.
அதிமுக ஓரளவிற்கு நமது கோரிக்கையை ஒப்புக் கொள்ளும் தருவாயில் இருந்தது. அப்போது தான் 06.03.2011 அன்றுசென்னையில் செயற்குழு கூடியது. தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு முடிவதற்குள் தங்களது முடிவைத் தெரிவிப்பதாகஅதிமுக கூறியது. ஆனால் செயற்குழு முடிவதற்குள் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் இந்தச் செயற்குழு முடியும் வரை ஆளுங்கட்சியான திமுக இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக எந்தஆணையும் பிறப்பிக்காததால் அதற்கு ஆதரவு இல்லை என்றும்இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாகத் தேர்தல்அறிக்கையில் அதிமுக குறிப்பிட்டால் அதற்கு முழு ஆதரவு என்றும்இந்த வாக்குறுதியை நமது தலைமைக்குக் கடிதமாகத்தந்தால் தார்மீக ஆதரவு மட்டும் வழங்குவது என்றும் இந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் அந்தசெயற்குழு முடிவடைந்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கை
ஆனால் செயற்குழு தீர்மானத்திற்குப் பின் நாம் எதிர்பாராத ஒரு வித்தியாசமான சூழல் உருவானது.
ஆணை பிறப்பிக்க வேண்டிய ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதாகக்குறிப்பிட்டது.
தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டிய எதிர்க்கட்சிஅதைச் செய்யாமல் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதாகக்குறிப்பிட்டது.
இதனால் சென்னை எழும்பூரில் 26.03.2011 அன்று மீண்டும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழுவைக் கூட்ட நேரிட்டது.
அந்தப் பொதுக்குழுவில்வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மவுனம் வகிப்பது,அல்லது ஆதரவு தெரிவிப்பது என்ற இரு நிலைபாட்டை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதுஆதரவுதெரிவிப்பதற்குத் தான் அதிகமான வாக்குகள் கிடைத்தன.
இதற்கிடையே இந்தப் பொதுக்குழு நடந்து கொண்டிருக்கும் போதுதிருச்சியில் மரியம் பிச்சையை ஆதரித்துப் பிரச்சாரம்செய்த ஜெயலலிதா முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தித் தரப்படும் என்று தெரிவித்தார். இந்தஅறிவிப்பின் பின்னணியிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் இருந்தது.
அதிமுக தலைமையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நிர்வாகிகள்,"திமுகவின்தேர்தல் அறிக்கையை எல்லாவற்றிலும் காப்பியடித்து வெளியிட்ட நீங்கள் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை மட்டும்திட்டமிட்டு மறைத்து விட்டீர்கள்மறுத்து விட்டீர்கள்'' என்று திட்டிய பிறகு தான் ஜெயலலிதா தனது திருச்சி பிரச்சாரத்தில்மவுனம் கலைத்தார்.
இந்த அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இரட்டை வெற்றி!
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்துவோம் என்று அப்போதைய ஆளுங்கட்சித் தலைவரை,முதல்வரைப் பேச வைத்தது மட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையிலும் சொல்ல வைத்துமுரசொலியிலும் எழுத வைத்ததுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான்.
அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும்தற்போதைய முதல்வருமான ஜெயலலிதாவையும் அது பற்றிப் பேச வைத்து 5சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஓர் அஸ்திவாரத்தை அமைத்திருக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!
நாம் ஆதரித்த திமுக தேர்தல் களத்தில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் அது 5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஒருதளத்தை அமைத்துக் கொடுத்ததில் வெற்றியடைந்திருக்கின்றது.
இது தான் இறையருளால் இந்தத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்ட வெற்றியாகும். தற்போது 5 சதவிகித இடஒதுக்கீடு என்ற கருத்தாக்கத்தை அனைத்துக் கட்சிகளிடமும் ஏற்படுத்தி விட்டோம். இனி களமிறங்கி அந்த இலக்கைஅடைவதற்காகப் போராடுவோம்இன்ஷா அல்லாஹ்!
ஏகத்துவம் இதழ்