’அழாதே!நாம் ஏன் அழவேண்டும்?கொல்லப்பட்டது முஸ்லிம்கள் தானே?-குண்டுவெடிப்பு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீயில் கருகிய 68 உடல்களை ஒவ்வொன்றாக வெளியே எடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்து பயந்து போன நீரா என்ற பெண்ணிடம் ஹிந்துதுத்துவா பயங்கரவாதி பிரக்யாசிங் கேட்ட கேள்வியாகும்.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பைக் குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு ஏஜன்சி நேற்று முன்தினம் சமர்ப்பித்த 25 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள விபரமாகும். குண்டுவெடிப்பு நிகழ்வதுக்குறித்து முன்னரே பிரக்யாசிங்கிற்கு தெரியும். அவளுடைய சகோதரி லவ்லி மற்றும் தோழி நீராவுடன் நள்ளிரவில் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் இந்த கொடூரமான உரையாடல் நடந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அப்பொழுது பிரக்யாசிங் சூரத்தில் உள்ள வீட்டில் இருந்தார். வீட்டின் அருகே ஒரு ப்ளாட்டிற்கு தனது சகோதரி மற்றும் தோழியை அழைத்து சென்ற பிரக்யா சிங் அவ்வீட்டின் பெண்மணியிடம் தொலைக்காட்சியை ஆன் செய்ய கூறி செய்தியை பார்த்துள்ளார். அவ்வீட்டிலிருந்து வெளியேறும் முன் யாருக்கோ போன் செய்து,’நமது ஆட்கள் ஓ.கே தானே’ என விசாரித்துள்ளார்.
ரெயிலிருந்து தீயில் கருகிய சடலங்கள் வெளியே எடுக்கப்படுவதை கண்டு அழுத நீரா, பின்னர் வந்த செய்திகளை கவனித்து மரணித்தவர்களின் கூட்டத்தில் ஹிந்துக்களும் உண்டு என பிரக்யாசிங்கிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறெல்லாம் நிகழத்தான் செய்யும் என பிரக்யாசிங் நீராவுக்கு பதிலளித்துள்ளார். செய்தி கண்ட பிறகு அதனை கொண்டாட ஐஸ்க்ரீம் சாப்பிடும் ஆர்வத்தையும் அவர் மறைத்து வைக்கவில்லை.