தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

சம்ஜோதா:குண்டுவெடிப்பை நிகழ்த்த பணம் அளித்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ்குமார்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ்குமார் சுவாமி அஸிமானந்தாவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

வெடிப்பொருட்களும், அதுத்தொடர்பான உபகரணங்களும் வாங்குவதற்காக இத்தொகை வழங்கப்பட்டது என குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் முன்பதிவுச்செய்யப்படாத 4 பெட்டிகளில் குற்றவாளிகள் வெடிக்குண்டுகளை ஸ்தாபித்துள்ளனர். 13 மற்றும் 14-ஆம் நம்பர் பெட்டிகளில் வெடிக்குண்டு வெடித்துள்ளது. 15-ஆம் நம்பர் பெட்டியில் குண்டுவெடிப்பதற்கு முன்பு செயலிழக்கச்செய்யப்பட்டது.-குற்றப்பத்திரிகை கூறுகிறது.

அஸிமானந்தா, ராம்சந்திர கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே, லோகேஷ் சர்மா, சுனில் ஜோஷி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கொலை, கொலை முயற்சி, தேசத்துரோகம், குற்றகரமான சதித்திட்டம் ஆகிய பிரிவுகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெடிக்காத குண்டுகள் இருந்த சூட்கேஸின் உறை இந்தூரில் கோத்தாரி மார்க்கெட்டில் அபிநந்தன் பேக் செண்டரில் வாங்கியது கண்டறியப்பட்டதுதான் இந்த வழக்கில் துப்பு துலங்குவதற்கு காரணம் என குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

எம்.கே பேக் செண்டரில் இக்பால் ஹுஸைன் என்பவர் இந்த உறையை தைத்திருந்தார். உறையின் மீது அப்போலோ என கையால் எழுதப்பட்டிருந்தது.ஆர்.டி.எக்ஸ், டி.என்.டி, ஸல்ஃபர், பெட்ரோல் ஆகிய அதீத சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் வெடிக்குண்டை நிர்மாணிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. சம்ஜோதாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டும் என்பது அஸிமானந்தாவின் லட்சியமாகும்.ஹிந்து கோயில்களில் போராளிகள் தாக்குதல் நடத்தினார்கள் எனக்கூறி கோபமடைந்த அஸிமானந்தா தனது உணர்வை சுனில்ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர், பரத்பாய் ஆகியோருடன் பகிர்ந்துக்கொண்டார்.

’குண்டிற்கு பதில் குண்டு’ என்பது அஸிமானந்தாவின் கொள்கையாகும்.2006 வாரணாசி குண்டுவெடிப்பிற்கு பிறகு அதற்கு பழிவாங்குவதற்காக சுனில்ஜோஷியும், அஸிமானந்தாவும் தீர்மானித்துள்ளனர்.இதற்காக உத்தரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஹிந்து தலைவர்களை கண்டு அவர்களிடம் உதவி கோருவதற்காக சுனில்ஜோஷி, பரத்பாய் ஆகியோருக்கு கட்டளையிட்டு பயணச்செலவாக 25 ஆயிரம் ரூபாயை அஸிமானந்தா அளித்துள்ளான்.

2006 ஆம் ஆண்டு மே மாதம் ஜோஷி அஸிமானந்தாவை சந்தித்து தனது பயண விபரங்களை ஒப்படைத்துள்ளான்.பரத் பாய் முதலில் ஜார்கண்ட் சென்றுள்ளான்.அங்குவைத்து தேவேந்திரகுப்தா பிஸ்டல், வெடிப்பொருட்கள், சிம்கார்டு ஆகியவற்றை வழங்கியுள்ளான்.பின்னர் பரத் பாய் ஆக்ரா மற்றும் கோரக்பூருக்கு சென்றுள்ளான்.

அதன் பின்னர் நாக்பூருக்கு சென்று இந்திரேஷ்குமாரை சந்தித்துள்ளான்.அங்குவைத்து வெடிப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக இந்திரேஷ்குமார் ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளான். பின்னர் குஜராத் மாநிலம் வல்ஸாதில் பரத் பாயின் வீட்டில் வைத்து கூட்டம் நடந்தது.2006 ஜூன் மாதம் சதித்திட்டம் தீட்டிய முக்கிய கூட்டம் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் அஸிமானந்தா, பிரக்யாசிங் தாக்கூர், டாங்கே, கல்சங்க்ரா, லோகேஷ் சர்மா, அமித் சவுகான், பரத்பாய் ஆகியோர் பங்கேற்றனர்.மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோத எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த அஸிமானந்தா உத்தரவிட்டுள்ளார்.

ஹிந்துக்கள் கொலைச்செய்யப்படும் வேளையில் அரசு சம்ஜோதா எக்ஸ்பிரஸை ஓட்டுகிறது.ஆதலால், அந்த ரெயிலில்தான் குண்டுவெடிப்பை நிகழ்த்தவேண்டும் என ஜோஷி கூறியுள்ளான்.குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான பொறுப்பையும் ஜோஷி ஏற்றுக்கொண்டுள்ளான்.குண்டுவெடிப்பு நிகழ்ந்து இரண்டு தினங்களுக்குள் அஸிமானந்தா, ஜோஷி, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் குஜராத்தில் சபரிடாம் ஆசிரமத்தில் மீண்டும் கூடியுள்ளனர்.யார் வெடிக்குண்டை தயாரித்தார்? என அஸிமானந்தா கேட்டுள்ளான்.’அது ஆசிரியரின்(டாங்கே) வேலையாகும்’ – என ஜோஷி பதிலளித்துள்ளான்.

2007-ஆம் ஆண்டு சுனில்ஜோஷி மக்கா மஸ்ஜிதிலும், இதர இடங்களிலும் கூடுதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த பணம் கேட்டதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது.