தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

மிருகங்களை ஹலால் முறையில் அறுக்க தடை – முஸ்லீம்கள், யூதர்கள் எதிர்ப்பு

முஸ்லீம்கள் மிருகங்களை உயிரோடு இருக்கும் போது அறுத்து சாப்பிடுவர். இப்படி அறுக்கப்படும் முறையை ஹலால் முறை என்றும் அப்படி அறுக்கப்படும் மிருகங்களையே உண்பர். இச்சூழலில் நெதர்லாந்தில் உயிரோடு ஹலால் முறையில் மிருகங்களை அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


டென்மார்க் பாராளுமன்றத்தில் நேற்று சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி எனும் அமைப்பு மிருகங்களை உயிரோடு அறுக்க தடை செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தது. முஸ்லீம்கள் மிருகங்களை அறுக்கும் ஹலால் முறையும் யூதர்கள் அறுக்கும் கோஷர் முறையும் மிருகங்களை உயிரோடு உள்ள நிலையில் அறுப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் கீழ் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இம்மசோதா மேல் சபையில் நிறைவேறினால் இது சட்டமாக்கப்பட்டு விடும். ஆனால் டென்மார்க் நாட்டின் கிறிஸ்துவர்கள் மிருகங்கள் இறந்த பிறகு அறுப்பதுண்டு. இச்சட்டத்துக்கு நெதர்லாந்தின் 10 இலட்சம் முஸ்லீம்களும் 40,000 யூதர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சிறு மிருகங்கள் உரிமைகள் கட்சி தலைவர் மேரிஅன்னே தீம் “எங்கே மனித அல்லது மிருக சித்ரவதை ஆரம்பிக்கிறதோ அங்கே மத சுதந்திரத்தின் எல்லை முடிந்து விடுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
inneram