தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

யோகாவின் பெயரால் செக்ஸையும் நிர்வாணத்தையும் பரப்பும் ஐரோப்பிய கும்பல் சென்னையில் – அதிர்ச்சி விபரங்கள்

ஐரோப்பாவில் யோகாவுடன் செக்ஸ் மற்றும் நிர்வாணத்தையும் கலந்து பிரச்சாரம் செய்யும் கும்பல் தற்போது சென்னையில் தடம் பதித்துள்ளது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளே இன்னும் விலகாத நிலையில் இது போன்ற கூட்டங்களின் பாதிப்புகள் கவலையோடு உற்று நோக்கப்பட வேண்டியவை.


இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சொக்கலிங்கம் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 100க்கும் மேற்பட்ட வாலிப பருவத்தில் உள்ள ஆண், பெண்களை யோகா மற்றும் ஆன்மிக காதலில் பயிற்றுவிக்கும் Movement for Spiritual Integration in Absolute (MISA) மிசா எனும் இவ்வமைப்பு இந்தியா முழுவதும் தன் கிளைகளை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மிசா அமைப்பு டென்மார்கில் நாதா எனும் பெயரிலும் அமெரிக்காவில் தாரா எனும் பெயரிலும் இந்தியாவில் சத்யா எனும் பெயரிலும் பதிவு செய்துள்ளது. இதன் ஆசிரியர்கள் டென்மார்க், ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதோடு இதன் தலைமை பயிற்றுவிப்பாளர்களான மிஹாய் ஸ்டோய்ன் மற்றும் அடினா ஸ்டோய்ன் ஆபாச படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தலைவரான ரோமானியாவை சேர்ந்த கிராகிரயன் பிவோலாரு ஆபாச படங்களில் நடித்ததற்காக பல முறை சிறைக்கு சென்றவர் என்பதோடு ஸ்வீடனில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளவர்.

மிசா அமைப்பினர் நடித்துள்ள ஆபாச வீடியோக்கள் பற்றி கேட்கப்பட்ட போது அதன் தற்காலிக தலைவரான் மிஹாய் மிசா தன் சித்தாந்தத்தை பரப்பும் ஆரம்ப கட்ட பரிசோதனை முயற்சியே என்று பதிலளித்தார். எங்களின் ஆன்மிக தேடலின் உச்சகட்டம் சிவனையும் சக்தியையும் ஒன்று சேர்ப்பதே. அப்போது தான் மனிதன் உச்சபட்ச ஆன்மிக நிலையை அடைய முடியும் என்று கூறிய மிஹாய் இந்தியாவில் அதற்கான தேவை நிறைய இருப்பதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் ஏராளமானவர்கள் தம் அமைப்பில் இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். உள்ளூர் போலி சாமியார்கள் ஏற்படுத்திய சீரழிவுகளிலிருந்தே தமிழகம் விடுபடாத நிலையில் இவற்றை முளையிலேயே கிள்ளி எறிவது தமிழக கலாசாரத்துக்கு நல்லது.
inneram