தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

வீட்டிற்குள் நுழையும் வில்லன்கள்: பெற்றோரே உஷார்.

வீட்டிற்கே வந்து வில்லங்கத்தை ஏற்படுத்தும் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடுகளால், "டீன் - ஏஜ்' பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனதளவிலும், உடல் அளவிலும் தங்கள் குழந்தைகள் பாதிப்படையாமல் தடுக்க, பெற்றோர் அவர்களது பக்கம் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகும்.
உலக நாடுகளுக்கு இணையாக நமது நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியும், நவீனத்துவமும் போட்டி போட்டு வளர்ந்து வருகின்றன. இந்த தொழில் நுட்ப வளர்ச்சியில், அனைத்து தரப்பினரையும் சென்றடையக்கூடியதாக மொபைல் போனும், இன்டர்நெட் வசதியும் மாறியுள்ளன.இந்த தலைமுறையில் இரண்டு வயது முதலே குழந்தைகள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரை இயக்குவதில் முன்னேறியுள்ளனர். இந்த முன்னேற்றம் ஒருபுறம் அவர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் கோவை மற்றும் சென்னையில் சமீபத்தில் பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில் போலீஸ் கமிஷனர் தலைமையில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் எதிரொலித்தது.அந்த கூட்டத்தில் மாணவர்களை பாதுகாப்பது மற்றும் அவர்களை வழிநடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கம்ப்யூட்டர் வழியாக பள்ளிக்குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பின் நிர்வாகி ஒருவர், பாலியல் கொடுமைகள் குறித்து பல விஷயங்களை எடுத்துக் கூறியதுடன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு, அதன் மூலம் ஏற்படும் பாதகங்களை பட்டியலிட்டார்.பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடமாக இருந்தாலும், அவர்கள் அந்த வளாகத்தில் இணையதளங்களில் தகவல் தேடுவதில்லை. வீட்டில் இருக்கும் போதும், சில நேரங்களில் இன்டர்நெட் மையங்களுக்கும் சென்று பல்வேறு தகவல்களை தேடுகின்றனர்.

குறிப்பாக தற்போது எட்டு வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள், "ஆர்குட், டிவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் செல்கின்றனர். அதன் மூலம் புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். இதில், அவர்களுக்குள் புதிய போட்டியே ஏற்படுகிறது. இணையதளத்திற்குள் நுழைந்து தேடும் போது, பல்வேறு ஆபாச இணைய தளங்களும் பளிச்சிடுகின்றன. ஆர்வமிகுதியால் சிலர் இவற்றை பார்க்கின்றனர். இது அவர்களை தவறான பாதையில் செல்ல தூண்டுகிறது. இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆபாச இணையதளங்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்து வெளியாகும் இணைய தளங்களை நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது.பொதுவாக தற்போது குழந்தைகள் ஆபாசபடத்தை வைத்திருத்தல், பிரசுரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு, மீறி செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளம் மூலம் பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் இந்த விஷயத்தில் அக்கறை எடுத்ததன் விளைவாக, நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருக்கும் அவருக்கு தண்டனை வாங்கித் தருவதில் போலீசார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் கூறியதாவது:இன்டர்நெட்டில் ஆபாச இணைய தளங்கள் அதிகளவில் உலவுகின்றன. இதில், குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.இதை விளம்பரப் படுத்தினாலோ, வைத்திருந்தாலோ, நெட் பிரவுசிங் செய்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, உருவாக்கினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.பள்ளி மாணவர்கள் இன்டர்நெட் பிரவுசிங்கில் இருக்கும் போது ஆபாச பட, "பாப் அப்'கள் தெரியும்படி செய்கின்றனர். இதனால், மாணவர்கள் இந்த வெப்சைட்களில் நுழைந்து பார்க்கின்றனர்; தங்கள் மனதை பாழ்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை பெரியவர்களது கண்காணிப்பு உள்ள பகுதிகளில் வைக்க வேண்டும். இவை தனியறையில் இருந்தால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. தற்போது மொபைல் போன்களிலும் இன்டர்நெட் பார்க்கும் வசதியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய போனை வாங்கிக் கொடுக்காமல் இருந்தாலே பல பிரச்னைகளை தவிர்க்க முடியும். பெற்றோரின் கண்காணிப்பும் அளவான சுதந்திரமும் பெரும்பாலான பிரச்னைக்களுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். இவ்வாறு சுதாகர் கூறினார்

நன்றி : பர்மான் அலி

செய்திகள் : தினமலர்

மதுரையில் தெப்பகுளமா அல்லது மக்கள் வெள்ளமா?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டமே மதுரையில் சங்கமித்து. தெப்பகுளமா அல்லது மக்கள் வெள்ளமா என வியக்கும் அளவுக்கு மதுரையில் மக்கள் குவிந்தனர். நீங்கள் தற்போது பார்த்துகொண்டு இருக்கும் புகைப்படங்கள் காலை ஆறு மணிக்கு மக்கள் வந்துகொண்டு இருந்தபோது எடுக்கப்பட்டது.கோவை மாவட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட மண்டபத்தில்  மக்களுக்கு கோவை மாவட்டத்தின் சார்பாக காலை உணவும் ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் 02-01-2011 அன்று நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் தலைமை வகித்தார். இதில் மௌலவி சலீம் அவர்கள் கல்வி என்ற தலைப்பிலும், மௌலவி தாவூத் கைசர் அவர்கள்” ஏகத்துவவாதிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும்,  அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 30 மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளையின் சார்பாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆசாத் நகர் கிளை

தெருமுனை
07.01.11
05.02.11
06.02.11
08முதல் 15.02.11வரை 
22.02.11
25.02.11 
26.02.11
 10.03.11
பெண்கள்பயான்
03.02.11
06.02.11 
12.02.11 

26.02.11
 21.03.11
16.04.11
30.04.11
ஆலோசனை கூட்டம்
06.02.11
15.02.11
27.02.11
நபிவழி திருமணம்
06.02.11
வாரந்திர சொற்பொழிவு
06.02.11 
19.02.11 
05.03.11
13.03.11
26.03.11
17.04.11
01.05.11
நோட்டீஸ்
11.02.11.
 கண்டன கூட்டம்
15.02.11

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 07.01.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஆசாத் நகர் கிளையில் தெருமுனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பள்ளி வீதி என்ற பகுதியில் 13.01.2011 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா “ ஜனவரி 27 ஏன்? ” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக  08-01-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காதிரா “ இறையச்சம்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 01-01-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


ஆசாத் நகர் கிளையின் சார்பாக ஜனவரி 27 சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பல்வேறு இடங்களில்,  அலகாபாத்  உயர் நீதிமன்றத்தின் அநியாய தீர்ப்பை  கண்டித்து சென்னையிலும் மதுரையிலும் நடைபெறும் ஜனவரி 27 கண்டன ஆர்பாட்டத்தை ஒட்டி சுவர் விளம்பரம் செய்யபட்டுள்ளது.