தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

மவ்லூத் எனும் அநாச்சாரத்திற்கு எதிராக ஆர்ப்பரித்த TNTJ கோவை மாவட்ட மாணவரணியினர்


அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)
அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)
அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)
நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)
“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)
நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)
மேற்கண்ட ஏராளமான வசனங்கள் குர்ஆனிலும், ஹதீஸிலும் காண முடிகிறது. இருந்தும் “மடையர்கள் எழுதிய மவ்லூதை மதிகெட்ட மௌலவிகள்” இன்னமும் நிறுத்தியபாடில்லை*(நிறுத்துவதற்கு மனமில்லை). இந்த இணைவைப்புகளுக்கு எதிராகவும், ஆடல் பாடல்களுக்கு எதிராகவும், குர்ஆன் வசன பதாதைகைகளை ஏந்தி ஊர்வல கூட்டத்திலே களம் கண்டனர் ஆசாத் நகர் கிளை மாணவரணியினர்



ஆசாத் நகர் கிளையில் மௌலூது என்னும் குப்பையை கண்டிக்கும் விதமாக அறவழி போராட்டம் ஆசாத்நகர்  மஜ்ஸிதுல் முபின் பள்ளியின் முன்பு  பதாகைகளை  ஏந்தி.