தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

தபால்வழி சட்ட முதுகலை படிப்புகள்

சட்டம் சார்ந்த படிப்புகளில் சேர  தற்போது மாணவ மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சட்ட ஆலோசகர், நிர்வாக அலுவலர் என பல்வேறு பதவிகளுக்கு முன்னணி நிறுவனங்களும் சட்டம் சார்ந்த படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் பட்டதாரிகள் ஆர்வத்தோடு இப்படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.

ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் நேரடியாக சட்டப்படிப்புகளை படிக்க முடிவதில்லை. இதுபோன்றவர்கள் தபால் வழியில் படிக்க, பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் வாய்ப்பளிக்கிறது. Master of Business Law (M.B.L) என்றழைக்கப்படும் 2 வருட முதுகலை படிப்பு இங்கு வழங்கப்படுகிறது.

மேலும் ஒருவருட PG Diploma HKM Human Rights Law (PGDHRL), Medical Law & Ethics (PGDMLE), Environmental Law (PGDEL), Intellectual Property Rights Law (PGDIPRL), Child Rights Law (PGDCRL), Consumer Law & Practice (PGDCLP) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.இந்த படிப்புகளில் சேர கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பை நிறைவு செய்திருத்தல் வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000ஐ 'The Registrar, NLSIU' என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்ப படிவத்தை www.nls.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் கட்டண டிடி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை இணைத்து 'The Registrar, National Law School of India University, Nagarbhavi, Bangalore560 242' என்ற முகவரிக்கு வரும் ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதர விவரங்களை 080-23213160, 23160532 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.
Thanks to Tamil murasu