தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

இஸ்லாதில் அனுமதிக்கப்பட்ட புகழ்

அல்லாஹ்வை மறந்து தன்னை மட்டுமே முன்னிலைபடுத்தாத வகையில் உண்மையை உரைக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் புகழ்ந்து கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும் நடந்துள்ளது.

உண்மை கூற வேண்டிய சந்தர்ப்பத்தில்...
நாங்கள்நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைனிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது சில பேர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அதிகமாக (போர் பொருட்களை) கேட்டுகொண்டேயிருந்தனர். இறுதியாக (நபி) அவர்களை ஸமுரா என்ற முள் மரத்தில் தள்ளி கொண்டு சென்றனர். இதனால் நபி(ஸல்) அவர்களின் மேலாடை அந்த மரத்தில் சிக்கி கொண்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நின்று விட்டு சிக்கி கொண்ட மேலாடையை எடுக்க விடுங்கள். மிகப் பெரிய இந்த முள் மரம் அளவுக்கு எனக்கு அருட்கொடை இருந்தால் அதனை நான் உங்களுக்கு பங்கு வைத்து கொடுத்திருப்பேன். அப்போது என்னை கஞ்சனாகவும் பொய்யனாகவும் கோழையாகவும் பார்க்க மாட்டீர்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஸுபைர் இப்னு முத்யீம் (ரலி) நூல் : புகாரி 2821

மக்கள் தம்மை தவறாக நினைக்கும் நேரத்தில் தன்னடக்கத்துடன் படைத்த வனையும் நினைவு கூர்ந்து படைத்தவனின் கட்டளையான கஞ்சனாக, பொய்ய னாக, கோழையாக இருக்ககூடாது என்பதைதான் முற்றிலும் பின்பற்று வேன் என்று கூறியுள்ளார்கள். இதில் தன்னைப் பற்றி புகழ் இருந்தாலும் அவசி யம் ஏற்படும்போது படைத்தவனையும் நினைவு கூர்ந்து சொல்லப்படு வதால் இது போன்ற புகழ் வார்த்தைகள் மார்க்கத்தில் தடை இல்லை என்பதை விளங்கலாம்.

சபையில் இல்லாதவரை புகழுதல்
மக்களுக்கு அறிவுரை கூறும்போது நம்முடன் இல்லாத மனிதரின் சிறப்புகளை கூறி புகழ்வது கூடும்.

ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்)அவர்கள் (தம்தோழர்களிடம்), இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்''என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந் தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்ம்கல் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின் றீர்கள்?''என்று கேட்டார்கள். தோழர்கள், இவர் பெண் கேட்டால் இவருக்கு மண முடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவி தாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்'' எனக் கூறினார்கள். 
நூல் : புகாரி 5091

ஏழையாக இருப்பதால் நம்மை யாரும் மதிப்பதில்லை என்று பரவலாக நாம் கருதுகிறோம். ஒருவர் ஏழையாக இருப்பதால் அவர் அல்லாஹ்விடத்தில் மதிப்பற் றவர் என்றும் வசதி படைத்தவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் இறைவனி டத்தில் மதிப்புள்ளவர் என்றும் எண்ணிக் கொள்ள தேவையில்லை. நல்லவராக இருக்கும் ஏராளமானோர் ஏழையாக இருப்பவர் என்றும் நபிகளார் விளக்கி அந்த ஏழையை புகழ்ந்துள்ளார்கள்.

 நல்லவர்களின் மதிப்பை உணராதபோது புகழுதல்
 மார்க்கத்திற்காக தியாகம் செய்தவர்களை மக்கள் மதிக்க தவறும்போது அவரின் சிறப்பை அவர் முன்னிலையில் புகழலாம். தியாகம் செய்தவர் செய்த சிறிய தவறை மன்னிப்பதற்காக அவர் முன்னர் செய்த தியாகத்தை புகழ்ந்து சொல்லுதல்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் தன் மூட்டுகால் தெரியமளவுக்கு தன் கீழாடையின் ஓரப் பகுதியை தூக்கி கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களு டைய தோழர் ஏதோ பிரச்சினையை கொண்டுவருகிறார் என்று சொன்னார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் ஸலாம் சொல்லிவிட்டு எனக்கும் கத்தா புடைய மகன் உமர் (ரலி) அவர்களுக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. இதில் நான் அவரிடத்தில் அவசரபட்டுவிட்டேன். பிறகு வருத்தப்ட்டு உமரி டத்தில் மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய வீட்டு வாசலை என் முகத்திற்கு நேராக மூடிவிட்டார். அதனால் நான் உங்களிடத்தில் வந்திருக்கிறேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று மூன்று தடவை கூறினார்கள். இதற்கிடையில் உமர் வருத்தப்பட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுடைய வீட்டிற்கு சென்று அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்க அவர்களுடைய வீட்டிலுள்ளவர்கள் இல்லை யென்று சொன்னவுடன் நபி (ஸல்) அவர்களிடத்தில் வருகிறார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம் கோபத்தால் சிவக்கிறது. அபூபக்ர் (ரலி) அவர்கள் மிகுந்த கவலைப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்கு நேராக முட்டியிட்டு அமர்ந்து நான் மிகுந்த அநீதி இழைத்து விட்டேன் என்று இரண்டு தடவை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை உங்களிடத்தில் அனுப்பினான் (என்று நான் சொன்னபோது) என்னை நீங்கள் பொய்யன் என்றீர்கள். ஆனால் அபூ பக்ரோ நான் உண்மையாளன் என்று சொல்லி அவருடைய உயிராலும் பொருளாளும் எனக்கு உதவி செய்தார். என்று கூறிவிட்டு என் தோழரை எனக்காக விட்டு கொடுக்க மாட்டீர்களா? என்று இரண்டு தடவை கூறினார்கள். அதற்கு பிறகு அபூபக்ர்(ரலி)அவர்களை யாரும் வருத்தமளிக்கும்படி செய்யவில்லை.அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி)நூல் : புகாரி 4460, 3661

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தவறு செய்ததால் அவர்கள் தம் தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டபோது கோபத்தில் வீட்டுக் கதவை தாள்ளிட்டு மன்னிக்க மறுத்துவிட்டார்கள். இந்த வழக்கு நபிகளாரிடம் வந்த போது நபிகளார் ஓரிறைக் கொள்கைக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்து உடலாலும் பொருளாலும் தியாகம் செய்தவர் என்று அபூபக்ர் (ரலி) அவர்களை புகழ்ந்து உமர் (ரலி) அவர்கள் உட்பட அனைத்து தோழர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களின் மதிப்பை உணர்த்தியுள்ளார்கள். இதுபோன்ற சந்தர்ப் பத்தில் ஒருவரை புகழ்ந்து சொல்வது குற்றமாகாது.

விசாரிக்கும் போது ஒருவரை புகழ்தல்
 ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று விசாரிக்கும்போது உண்மையை உரைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவரைப் புகழ்ந்து சொல்லுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களையும் ஸஃப்வான் இப்னு முஅத்தல் என்ற ஸஹாபியையும் இனைத்து அவதூறு சொல்லப்பட்டது .அது அவதூறு என்று அல்லாஹ் குர்ஆனில் பின்னர் தெளிவுபடுத்தினான். திருக்குர்ஆன் இறக்கப்படுவதற்கு முன்னர் தன்னுடைய மனைவியை பற்றி மற்றவர்களிடம் விசாரித்துவிட்டு இவ்வாறு சொன்னார்கள்.

என் மனைவியிடத்தில் நல்லதை தவிர வேறு எதனையும் நான் அறிய வில்லை. ஒருவரை (இணைத்து) கூறுகிறார்கள். அவரிடத்தில் நல்லதைத்தான் அறிந்திருக்கிறேன். என்னுடைய வீட்டிற்குள் அவர் நுழையும்போது அவர் என்னோடு மட்டும் தான் நுழைவார். என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),நூல் : புகாரி 2661

இதைப்போன்று உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக விசாரித்தபோது அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்'' என்று கூறியுள்ளார்கள். நூல் : புகாரி 2661
 இறந்தவர்களைப் பற்றி புகழ்தல்
மார்க்கத்திற்காக தியாகம் செய்து இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றவர் களை பற்றி வரம்புக்கு உட்பட்டு புகழ்வது குற்றமாகது.

எனக்கு திருமணம் முடிந்த மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். நீ இருப்பதைப் போன்று என் விரிப்பில் அமர்ந்தார்கள். அப்போது சிறுமிகள் பத்ர் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களின் நற்செயல்களை பற்றி தஃப் அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுமி எங்களி டத்தில் உள்ள நபி நாளை நடப்பதை அறிவார்கள். என்று பாடினாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ இவ்வாறு பாடதே முன்னர் பாடியதை பாடு என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி) நூல் : புகாரி 4001

                         எஃப். அர்ஷத் அலிபனைக்குளம்
                                
தீன்குலப்பெண்மனி