தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

குஜராத் அரசு எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது-சஞ்சீவ் பட் குற்றச்சாட்டு

குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மாநில அரசு எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும்,ஆதலால் சட்ட ஆதரவு கிடைக்கும் வரை வாக்குமூலம் பதிவுச் செய்வதை தள்ளி வைக்க சஞ்சீவ் பட் நானாவதி கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வாக்குமூலம் பதிவு செய்வதை ஒத்திவைக்க இயலாது என கமிஷன் தெரிவித்துள்ளது.

அரசு வழக்கறிஞரின் விசாரணை வேறு திசையில் செல்கிறது.பாதி உண்மைகளின் அடிப்படையில் தயார் செய்த அவதூறான விபரங்கள் தொடர்பானது என சஞ்சீவ் பட் குற்றம் சாட்டுகிறார். அரசுக்கு பதிலளிக்கவும், சட்ட உதவி தேடவும் கூடுதல் அவகாசம் தேவை என பட் கோரிக்கை விடுத்தார்.அதேவேளையில், பட் பதிலளிக்க அவருக்கு தேவையான ஆவணங்களை வழங்க அரசுக்கு கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு கலவரம் நடந்த வேளையில் கட்டுப்பாட்டு அறையின் ஆவணங்களை சஞ்சீவ் பட்டிற்கு அளிக்க அரசு ஏஜன்சிகளிடம் கமிஷன் உத்தரவிட்ட பிறகும் தனக்கு கிடைக்கவில்லை என பட் கூறுகிறார்.கட்டுப்பாட்டு அறையின் ஐந்து சதவீத ஆவணங்கள் மட்டுமே அரசு கமிஷனுக்கு வழங்கியுள்ளது. இவை அரசுக்கு ஆதரவான ஆவணங்களாகும். ஆவணங்களை அழிக்க முயற்சி நடக்கிறது. அனைத்து ஆவணங்களும் கிடைத்தால் கமிஷனுக்கு உண்மை தெரியவரும் என சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.பட்டின் வாதங்களை நிரூபிக்க குறிப்பிட்ட தேதிகளில் ஆவணங்களை அளிக்கும் விதத்தில் மனுவை திருத்த கமிஷன் அதிகாரியிடம் பொறுப்பு ஒப்படைத்தது. சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் இன்றும் பதிவுச்செய்யப்படும்.