திரிபோலியில் நேட்டோ படைகளின் ஏவுகணைத் தாக்குதலில் லிபியத் தலைவர் மம்மர் கடா:பி உயிர் தப்பினார். எனினும் அவரது இளைய மகனும், 3 பேரக் குழந்தைகளும் உயிரிழந்ததாக அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்த கடாஃபி அழைப்பு விடுத்த சில மணிநேரங்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
லிபிய படைகள் மீண்டும் வலிமை பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாஃபியின் இளைய மகனான சைஃப் அல்-அராபின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் சொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அறிக்கை வெளியிடப்படும் என புரூஸ்ஸெல்ஸில் கூட்டணிப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 வயதான சைஃப் அல்-அராப், கடாஃபியின் இளைய மகனாவார். சமீபகாலமாக இவர் ஜெர்மனியில் இருந்தார். தாக்குதல் நடைபெற்றபோது கடாஃபியும், அவரது மனைவியும் அராபின் வீட்டில்தான் இருந்தனர். கடாஃபி நல்ல உடல்நிலையில் உள்ளார். காயம் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. அவரது மனைவியும் நல்ல உடல்நிலையில் உள்ளதாக லிபிய செய்தித்தொடர்பாளர் மெளஸா இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த பல மாதங்களாக ஐநாவின் அனுமதியுடன் லிபியா மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று முதன்முறையாக கடாஃபியின் குடும்பத்தினரை நேரடியாகக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று பேசிய கடாஃபி, அமைதிக்கான கதவு திறந்தே உள்ளது. நீங்கள் தாக்குதலைத் தொடங்கியவர்கள். உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள். எங்களுடன் வந்து பேசுங்கள். என பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு கடாஃபி அழைப்பு விடுத்திருந்தார்.