தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

முஸ்லிமல்லாதவர் மரணித்த செய்தி கேட்டால் இன்னாலில்லாஹி கூறலாமா?

நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்பது இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் என்ற சொல்லின் நேரடிப் பொருளாகும்.
இதை எப்போது சொல்ல வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான். 
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!  தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.  அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும்,அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்
திருக்குர்ஆன் 2:155, 156, 157 
ஒரு முஸ்லிமுக்கு இவ்வுலகில் துன்பம் ஏற்படும் போது இடிந்து போய் முடங்கி விடாமல் மேற்கண்டவாறு கூறி பொறுமையை மேற்கொள்ள வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது...
அது போல் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி கொடுங்கோலனாக இருக்கிறார். அல்லது மக்களை தவறான கொள்கையைக் கூறி வழி கெடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் மரணித்து விட்டால் இது முஸ்லிம்களுக்கு துன்பமான காரியம் அல்ல. மாறாக துன்பத்தில் இருந்து கிடைக்கும் விடுதலை ஆகும். இத்தகையவர்கள் இறந்து விட்ட செய்தியை நாம் கேள்விப்படும் போது நாம் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டியதில்லை. ஏனெனில் இதில் நமக்கு எந்தத் துன்பமும் ஏற்படவில்லை.
onlinepj.com/