முதுநிலையில்
* எம்.எஸ்சி.(பேஷன் மெர்கண்டைசிங் & ரீடைல் மேனேஜ்மென்ட்),
* எம்.எஸ்சி.(புட்வேர் டெக்னாலஜி),
* எம்.எஸ்சி.(கிரியேடிவ் டிசைனிங்),
* எம்.எஸ்சி.(லெதர் குட்ஸ் அண்ட் அக்ஸசரீஸ் டிசைன்),
* எம்.எஸ்சி.(விஷுவல் மெர்கண்டைசிங் அண்ட் கம்யூனிகேஷன் டிசைன்) .
இளநிலையில்
* பி.எஸ்சி.(பேஷன் மெர்கண்டைசிங் அண்ட் ரீடைல் மேனேஜ்மென்ட்),
* பி.எஸ்சி.(புட்வேர் டெக்னாலஜி),
* பி.எஸ்சி.(லெதர் குட்ஸ் அண்ட் அக்ஸசரீஸ் டிசைன்) ஆகியவை அந்த படிப்புகளாகும்.
காலனி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி நிறுவனத்துடன்(எப்.டி.டி.ஐ) இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த படிப்புகள், இத்துறையில் பணிபுரிபவர்களின் அறிவு மேம்பாடு மற்றும் பாதி திறனுள்ள மற்றும் முழு திறனுள்ள பணியாளர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகள், மாணவர்களுக்கான புதிய வழிகளை திறந்துவிடுவதுடன், இத்துறை சார்ந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பயிற்சியளிக்கப்பட்ட மனிதவளத்தை உருவாக்குவதிலும் உதவிசெய்கிறது.
மேலும் எப்.டி.டி.ஐ -உடனான ஒருங்கிணைப்பின் மூலமாக, நொய்டா, புர்சட்கன்ஜ், சென்னை, கொல்கத்தா, ரோடக் மற்றும் சிந்த்வாரா ஆகிய இடங்களிலுள்ள எப்.டி.டி.ஐ. வளாகங்களில் முழுநேர பயிற்சி அளிக்கப்படும். மே 19, இந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி. இவற்றில் பட்டம் பெறும் மாணவர்கள், இதுதொடர்பான உயர்கல்விக்கு விண்ணப்பம் செய்வதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு இக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.
Thanks To Dinamalar