2010-11ம் நிதியாண்டில் டில்லியில் மதுபான விற்பனை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் டில்லி அரசுக்கு கிடைக்கும் வருமானம் பெருமளவில் அதிகரித்துள்ளதாக டில்லி அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2010 முதல் மார் 2011 வரை உள்நாட்டு வரியின் மூலம் ரூ.2027 கோடி பெறப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலஅளவிலல் ரூ.1644 கோடி மட்டுமே பெறப்பட்டுள்ளது. அரசு கணக்கீட்டின்படி ரூ.347 கோடி பெறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ரூ.1680 கோடி வருமானம் பெறப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. டில்லியில் மதுபான விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக டில்லி வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. 2000-01ம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ரூ.560 கோடியாக இருந்துள்ளது. ஆனால் 2006-07ம் ஆண்டுகளில் இந்த வருமானம் ரூ.1147 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.