தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இல்லை: ஜெயப்பிரகாஷ் காந்தி

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்காது. எனவே மாணவர்கள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கே முன்னுரிமை தரலாம் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரவுள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியது:

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும், முதல் நிலை பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்த முறை கட்-ஆஃப் மதிப்பெண் கடும் போட்டியாக இருக்கும்.

கட்-ஆஃப் 197.5 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., தியாகராஜா, சிஐடி உள்ளிட்ட முதல்நிலையில் உள்ள 6 கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த கல்லூரிகளில் இசிஇ, கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என எந்தப் பிரிவை தேர்வு செய்தாலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

கட்-ஆஃப் 185-லிருந்து 197-வரை உள்ளவர்களுக்கு சிறந்த சுயநிதி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவர்கள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி. தேர்வு செய்யலாம்.

தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் முதல் 5 லட்சம் பணியாளர்களை தேர்வு செய்கின்றன. நடப்பு ஆண்டில் அவர்கள் 2.5 லட்சம் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் பின்னடைவு ஏற்பட்டபோதும், இப்போது மீண்டும் அந்தத் துறை முன்னேறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தத் துறையின் வளர்ச்சியில் எந்தவித பாதிப்பும் இருக்காது என புள்ளிவிவரங்களும் தெரிவிக்கின்றன.

ஆனால், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் முதல் 30 ஆயிரம் பேரை மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

எனவே, மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்,

இதற்கு அடுத்ததாக, மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை இப்போது அபார வளர்ச்சி பெற்று வருவதால் இரண்டாவதாக மாணவர்கள் இஇஇ-க்கு முன்னுரிமை அளிக்கலாம்.

திட்டக் கமிஷனின் அறிவுரையின்படி மின் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. மத்திய அரசு அடுத்த நான்கு ஆண்டுகளில் 14 சதவீத நிதியை மின்துறை வளர்ச்சிக்காக பயன்படுத்த உள்ளது. எனவே இத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

இதுபோல் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் நாடுகள் ஈடுபட உள்ளன. அதாவது கடலில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு வசதிகள். உதாரணமாக விசாகப்பட்டினத்தில் கடலுக்கு அடியில் திரவ பெட்ரோலியம் வாயுவை (எல்.பி.ஜி.) சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வருகிறது.

கடலில் மிதக்கும் சர்வதேச விமான நிலையத்தை கட்ட துபை திட்டமிட்டு வருகிறது. இதுபோல் ஜப்பான் போன்ற நாடுகளில் பி.இ. சிவில் முடித்து பூகம்ப பொறியியல் முடித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே மூன்றாவதாக மாணவர்கள் சிவில் பிரிவை தேர்வு செய்யலாம்.

நான்காவது மெக்கானிக்கல், கடைசியாக இசிஇ-க்கும் முன்னுரிமை அளிக்கலாம்.

உயிரி தொழில்நுட்ப படிப்பு முழுவதும் ஆராய்ச்சி தொடர்புடையது. மேலும் வேலைவாய்ப்பும் மிகவும் குறைவு. எனவே, பி.இ. பயோ-டெக்னாலஜி படிப்பை சிந்தித்து தேர்வு செய்யவேண்டும்.

இதுபோல் ஏரோநாட்டிகல் படிப்புக்கு வேலைவாய்ப்பு மிகமிகக் குறைவு என்றார்.