தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவி தொகை பெற தகுதியான சிறுபான்மை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கு கல்வி உதவிதொகை (புதியவை மற்றும் புதுப்பித்தல்) நடப்பாண்டிற்கு வழங்க தகுதியான மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த மாணவ, மாணவிகள் முதலாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை பயில்பவராக இருக்க வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மார்க் பெற்று சிறுபான்மை இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வேண்டி பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள்ளும் அந்தந்த கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.


பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவியரின் பாங்க் சேமிப்பு கணக்கு எண், பாங்க்கின் பெயர், கிளை மற்றும் முகவரியை தொகுத்து தகுதியான மாணவ, மாணவிகளின் பட்டியலை நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்தும் மற்றும் சி.டியில் பதிவு செய்தும் புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை வரும் 20 தேதிக்குள்ளும், புதியதற்கான கேட்பு பட்டியலை வரும் ஜூலை மாதம் 10ம் தேதிக்குள்ளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்ப படிவங்கள் மற்றும் கேட்பு பட்டியல் படிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                  
                                                  நன்றி:தினமலர்