தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

குல்பர்கா கூட்டு படுகொலையை தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத மோடி-சஞ்சீவ் பட்

 மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கடந்த திங்கட்கிழமை அன்று நானாவதி கமிஷனிடம் தாம் 2002 பிப்ரவரி 28 ஆம் அரங்கேறிய குல்பர்கா கூட்டுப் படுகொலையை பற்றி மோடியிடம் முன்னதாகவே தெரிவித்ததாகவும் ஆனால் நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவையும் மோடி பிறப்பிக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார். சஞ்சீவ் பட்டிடம் 2002 குஜராத் கலவரத்தை குறித்து விசாரிக்க நானாவதி கமிஷன் அழைத்திருந்தது. சஞ்சீவ் பட் கமிஷனிடம் சபர்மதி ரயில் எரிபிர்க்கு பிறகு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் அடுத்த நாள் நடை பெற்ற கூட்டத்திலும் தாம் கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.மேலும் சஞ்சீவ் பட் கூறியதாவது முதல் அமைச்சர் மோடியிடம் தாக்குதல் நடக்க இருப்பது குறித்தும் குல்பர்கா சொசைட்டி உறுப்பினர்களுக்கு இருக்கும் ஆபத்து குறித்தும் தாம் தகவல் அளித்ததாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என தாம் தெரிவித்ததாகவும் கூறினார். ஆனால் மோடி அத்தகவலின் பேரில் எந்த நடவிடிக்கையும் எடுக்க உத்தரவிட வில்லை எனவும் தெரிவித்தார்.2002 பிப்ரவரி 28 ஆம் அரங்கேறிய குல்பர்கா கூட்டுப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களில் முன்னால் காங்கிரஸ் எம்.பி. எஹ்சான் ஜாப்ரியும் ஒருவர். எஹ்சான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி குல்பர்கா கூட்டுப் படுகொலையை பற்றி நீதிமன்றத்தில் கூறும் போது தன்னுடைய கணவரை கலவரகாரர்கள் இழுத்து சென்று எரிப்பதற்கு முன்னர் அவருடைய கைகளை வெட்டினர் என தெரிவித்துள்ளார்.மேலும் பட் தெரிவித்ததாவது பிப்ரவரி 28 ஆம் தேதி நடக்க இருந்த பந்தை ஆதிரிக்கும் வகையில் கோத்ரா ரயில் எரிப்பில் எரிந்து போன உடல்களை அஹ்மதாபத்திற்கு கொண்டு வர எந்த மூத்த காவல்துறை அதிகாரிகளும் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். ஏனெனில் தேவையான அளவு காவல்படை இல்லாத காரணத்தால் கலவரம் மூண்டால் தடுக்க முடியாது என அவர்கள் பயந்ததாகவும் தெரிவித்தார். பட்டிடம் விசாரணையை வருகின்ற மே 23 ஆம் தேதிக்கு நானாவதி கமிஷன் ஒத்தி வைத்துள்ளது