தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

குவைத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம் – ஒரே நாளில் 284 நபர்கள் குறுதிக் கொடை!

 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 18-2-2011 வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
மதியம் ஒரு மணி முதல் ஏழு மணி வரை நடந்த முகாமில் பெண்கள் மற்றும் 20 முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் உட்பட 540 பேர் வருகை தந்திருந்தனர்.  நேரமின்மையால்  330 பேர் வரை தான் பதிவு செய்யவே முடிந்தது.
அந்த 330 பேரிலும் இரவு ஏழு மணிவரை 284 பேர் மட்டுமே இரத்தம் கொடுக்க முடிந்தது.
மற்றவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பியது வருத்தம் அளித்தாலும் இவ்வளவு எண்ணிக்கையில் சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டதும் குவைத் மத்திய இரத்த வங்கியில் இத்தனை பேர் ஒரே நாளில் இரத்தம் வலங்கியது நமது அமைப்பு தான் என்று சந்தோசத்தோடு அதன் ஊழியர்கள் சகோதரி நபியா சாஹர், ஆயிஷா அஹமத், அன்வர் அல் உமிசாத்   ஆகியோர் நம்மோடு பகிர்ந்துக் கொண்டதும் நம்மை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை மண்டல நிர்வாகத்தின் கீழ் மண்டல மருத்துவ அணி பொறுப்பாளர் சகோ முஹம்மது சித்திக்கின் தலைமையில் சகோதரர்கள் ஹாஜா, அப்பாஸ்,சர்புதீன்,ஜியாவுதீன்,ரியாஸ்,சாகுல் ஹமீத்,மற்றும் நம் கிளை சகோதரர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தினர். அல்லாஹு அக்பர்
குவைத் இரத்த வங்கி துவங்கியது முதல் இன்று வரை ஒரே நாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர வேறு எந்த அமைப்பும் இவ்வளவு எண்ணிக்கையில் இரத்தம் கொடுத்தது இல்லை என்ற சாதனையை இம்முகாம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலி்ல்லாஹ்
பதிவு செய்து இரத்தம் கொடுக்க முடியாமல் சென்றவர்களில் 18 சகோதரர்கள் கடந்த 20-2-2011 ஞாயிற்று கிழமை இரத்தம் வழங்கியதும் குறிப்பிடதக்கது.