தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

கடையநல்லூரில் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் முற்றுகை. நள்ளிரவில் பரபரப்பு

கடையநல்லூர் மதினா நகரைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர் சுங்காமுத்து மைதின் அவர்களின் தாயார் பாத்திமா பீவி(89) 11.02.2011 (வெள்ளிக்கிழமை) அன்று மரணமடைந்தார். அவரது உடலை நபிவழிப்படி தொழுகை நடத்தி அடக்கம் செய்வதற்கு மைதினுக்கு மதினா நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகிகள் அனுமதித்திருந்தனர். இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா, நகர தலைவர் கோரி, பொருளாளர் பாவா, துணைத் தலைவர் எஸ். எஸ்.யூ. சேகனா ஆகியோர் தொழுகையில் கலந்து கொண்டனர்.
இறந்தவரின் மகன் சுங்காமுத்து மைதின் அவர்கள் நபிவழிப்படி தொழுகை நடத்தி முடித்தார். அதன் பின்னர் அங்கிருந்த சிலர் பாத்திஹா ஓதவேண்டும் என்று கூறினர். அதற்குள் சுங்காமுத்து மைதின் பாத்திஹா ஓதவேண்டாம் மய்யித்தை தூக்குங்கள் என்ற போது மறைந்திருந்த சமூக விரோதிகள் மோதிவளைவு இஸ்மாயீல் (60), ராஜா முஹம்மது (22), யாஸர்கான் (21) ஆகியோர் திட்டமிட்டு எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்களைத் தாக்கினர். அதைத் தொடர்ந்து நம் ஜமாஅத்தைச் சேர்ந்த எஸ். எஸ்.யூ. சேகனா, பேட்டையை சேர்ந்த அபூபக்கர் சித்திக் ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதைக் கேள்விப்பட்ட நகரச் செயலாளர் முஹம்மது காசிம் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களை மருத்துவமனையில் சேர்த்து விட்டு புகார் செய்ய காவல் நிலையம் சென்றார். இச்செய்தி நகர் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதால் 100க்கும் மேற்பட்ட தவ்ஹீத் சகோதரர்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதன் பின்னர் புளியங்குடி சரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஜனாப் ஜமீம் அவர்கள் காவல் நிலையம் வந்து இருதரப்பினரிடமும் புகார்களைப் பெற்றதும் உளவுத்துறையின் தவறான தகவலின் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தார்களுக்குச் சாதகமாக வழக்கை திசை திருப்ப முயற்சித்தார். உடனடியாக அரசு நலத்திட்ட நெல்லை மாவட்ட செயலாளர் சுலைமான் அவர்கள் மாவட்டத் தலைவர் யூசுப் அலியை தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறினார். மாவட்ட தலைவர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை எடுத்துக் கூறினார். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் 427, 506(1) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்த பின்புதான் நள்ளிரவு 12 மணியளவில் நம் சகோதரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது சம்பந்தமாக நடுநிலையாளர்கள் கூறியதாவது : மதினா நகர் ஹனபி ஜமாஅத்தினர்கள் நபிவழிப்படி தொழுகை நடத்துவதற்கு அனுமதி கொடுத்து விட்டு அவர்களும் அந்த தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் பாத்திஹா ஓது என்று சொல்லி கலவரத்தை தூண்டியது தவறு என்றும் அதைத் தொடர்ந்து மதினா நகர் பள்ளிவாசல் தலைவர் முஹைதீன் பிச்சை தொழுகை நடத்திய சுங்காமுத்து மைதின் மீதும் தொழுகையில் கலந்து கொண்டு தாக்குதலுக்குள்ளான ஸைபுல்லாஹ், சேகனா ஆகியோர் மீதும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளாத முஹம்மது காசிம் (சின்சா) மீது 294(பி), 323 ஆகிய பிரிவின் கீழ் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தது கேலிக்கூத்தாக உள்ளது என்றனர்
குறிச்சி சுலைமான், கடையநல்லூர்