தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

* கணிதத்தில் ஆராய்ச்சி படிப்பு

     கல்லூரி மாணவர்களின் கணித ஆராய்ச்சித்திறனை ஊக்கு விக்கும் வகையில் தேசிய கணித ஆராய்ச்சி ஆணையம் பல்வேறு படிப்புகளை நடத்தி வருகிறது. Mathematics Training and Talent Search Programme என்றழைக்கப்படும் படிப்பிற்கு தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்படிப்பு   Level0, Level1, Level2  ஆகிய 3 பிரிவு களாக நடத்தப்படுகிறது.

Level0 என்ற படிப்பிற்கு கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலையில் படிப்பவர்களும், Level1  என்ற படிப்பிற்கு கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிப்பவர்களும், Level2  என்ற படிப்பிற்கு கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்கள் அல்லது முதலாம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.



கல்வித்தகுதி, கணிதத்திறன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மாணவர்கள் விண்ணப்பத்துடன் தங்களது கணித பேராசிரியரின் சிபாரிசு கடிதத்தை இணைத்து அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் Level0 வில்Linear  Algebra, Analysis - Number Theory HKM ½‹, Level1 ñŸÁ‹ Level2™ Algebra, Analysis - Topology HK பிரிவிலும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள வேண்டும்.தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பயணக்கட்டணம், இலவச உணவு, தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும். 

ஆராய்ச்சி படிப்பின் கால அளவு 23.5.2011 முதல் 18.6.2011 வரை. 'Department  of Mathematics, Istitute of Chemical Technology, Mumbaiஎன்ற இடத்தில் பயிற்சி நடைபெறும். www.mtts.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 'The Programme Director, MTTS, Department of Mathematics - Statistics, University of Hyderabad, P.O. Central University, Hydera bad500046' என்ற முகவரிக்கு வரும் பிப்.26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதர விவரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.