தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

* இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் வேலை

        இந்திய விமானப்படையில் குறுகிய கால அடிப்படை யில் ஆண்களுக்கும், பெண்களுக் கும் தனித்தனியாக பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பறக்கும் பிரிவு: கல்வித்தகுதி: அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவீத தேர்ச்சி யுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம். இவர்கள் 12ம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். அல்லது பி.இ/பி.டெக் படிப்பில் தேர்ச்சி.
வயது: 1.1.2012ன்படி 19 வயதிலிருந்து 23க்குள். 


தொழில்நுட்பப் பிரிவு: 
கல்வித்தகுதி: அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக் கானிக்கல் பிரிவில் ஏரோநாட் டிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி. வயது: 1.1.2012 அன்று 18 லிருந்து 28க்குள். 



தரைப்பணிப்பிரிவு& அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு டிகிரி. முதுகலைப்படிப்பு அல்லது அதற்கு சமமான பட்டயப்படிப்பு.


அக்கவுன்ட்ஸ்: 60 சதவீத மதிப்பெண்களுடன் வணிகவி யல் பாடத்தில் ஏதேனும் ஒரு டிகிரி. முதுகலை வணிகவியல், சி.ஏ., ஐசிடபிள்யூஏ ஆகிய ஏதா வது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர் கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.


மெட்டோராலஜி: அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவீத மதிப் பெண்களுடன் அறிவியல், கணிதம், புள்ளியியல், புவியியல், கணினிப் பயன்பாடு, சுற்றுச் சூழல் அறிவியல், பயன்பாட்டு இயற்பியல், மெட்டோராலஜி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுகலைப் படிப்பு. அல்லது குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம் மற்றும் இயற்பியலில் பட்டப் படிப்பு அல்லது குறைந்தது 50 சதவீத தேர்ச்சியுடன் முதுகலைப் படிப்பு.


வயது: பட்டதாரிகள்& 1.1.2012ன்படி 20 வயதிலிருந்து 23க்குள். முதுகலைபட்டதாரி கள்/எல்.எல்.பி. (5வருடங்கள்)& 1.1.2012ன்படி 20 லிருந்து 25க் குள். அதாவது விண்ணப்பதாரர் 2.1.1987க்கும் 1.1.1992க்கும் இடையில் பிறந்திருக்க வேண் டும். எல்.எல்.பி (3 வருட டிகிரிக்கு பின்)& 20 வயதிலிருந்து 26க்குள். 2.1.1986க்கும், 1.1.1992க் கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். எம்.எட்./பி.எச்.டி/சி.ஏ/ ஐசிடபிள்யூஏ& 1.1.2012ன் படி 20 லிருந்து 27க்குள்.



நுழைவுத்தேர்வு, துறை சார்ந்த பிறதிறன் தேர்வுகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு நடைபெறும் நாள்: 27.3.2011. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 22.2.2011.


மேலும் விவரங்களுக்குwww.careerairforce.nic.in என்ற இணையதளத்தையோ, எம்ப்ளாய்யெமன்ட் நியூஸ் ஜன. 22&28 தேதியிட்ட இதழையோ பார்க்கவும்.


Thanks To Tamil Murasu