தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

நபிவழி ஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்து, குழப்பம் விளைவித்த தமுமுக, SDPI, சுன்னத் ஜமாத்தினர்..











தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட குடந்தை நகர தலைவர் குத்தாலம் சர்புதீன் அவர்களின் தந்தை 13.02.11 ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்கள். அவர்களின் நல்லடக்கம் 14.02.11 திங்கட்கிழமை அன்று குத்தாலத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் உள்ள அடக்கஸ்தலத்தில் நடை பெறுவதாக இருந்தது.

குத்தாலத்தை பொறுத்த வகையில் முகைதீன் ஆண்டவர் சுன்னத் ஜாமாஅத், ஜாமியா மஸ்ஜித் ஜமாஅத் என்று இரண்டு ஜமாத்தார்கள் இருந்தபோதும் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள கப்ருஸ்தானிலேயே முஸ்லிம்கள் அனைவரும் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

14.02.11 திங்கட்கிழமை காலை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் முனாப் அவர்களை குத்தாலம் சர்புதீன் அனுகி, தனது தந்தை ஜனாஸா அடக்கம் செய்யவும், ஜனாஸா தொழுகை வைக்க அனுமதியும் கோரியுள்ளார். அப்போது பேசிய அப்துல் முனாப் அவர்கள் நபிவழி முறைப்படி தந்தையின் ஜனாசாவிர்க்கு மகனே தொழுகை வைப்பது சிறந்தது என்றும் அத்தகைய முறைப்படி அடக்கம் செய்துகொள்ளுங்கள் என்றும் அனுமதி வழங்கியுள்ளார்.

இதை அறிந்த ஜாமியா மஸ்ஜித் தலைவர் அப்துல் ஹக் ஏகத்துவ பிரச்சாரத்தின் எதிரிகளான தமுமுக, SDPI குண்டர்களை அழைத்து நபிவழி ஜனாஸா தொழுகை நடைபெற விடாமல் தடுக்கும்படி கூறியுள்ளார்.

இவரின் தூண்டுதலின் பெயரில் சுமார் 30 கிமி பிரயாணம் செய்து நாகை வடக்கு மாவட்டம் சோழசக்கநல்லூரை சார்ந்த தமுமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஜுபைரும், தம்முக முன்னாள் மாவட்ட பொருளாளர் எலந்தங்குடி ஷேக் அலாவுதீனும் குத்தாலம் வந்து பிரச்சனையை துவக்கியுள்ளனர்.

சுமார் காலை 11 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளும்போது, ஜமாஅத் நிர்வாகத்திலிருந்து ஜனாசாவிர்க்கு சற்றும் தொடர்பில்லாத எந்த இரத்த பந்தமும், உறவும் இலலாத பள்ளிவாசல்களில் மவ்லீது பாடலை பாடி பிழைப்பு நடத்தக்கூடிய இமாம் தான் தொழுகை நடத்துவார், இல்லையென்றால் ஜனாஸா தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று மிரட்டல் விடப்பட்டது.

இவர்களின் மிரட்டலை தொடர்ந்து தஞ்சை வடக்கு, நாகை வடக்கு மாவட்ட, கிளை நிர்வாகிகளுக்கு அவசர அழைப்பு கொடுக்கப்பட்டது. SMS அனுப்பிய ஒரு மணி நேரத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கை சகோதரர்கள் குத்தாலம் நோக்கி படையெடுத்து வந்தனர்.

இறுதியாக காவல் துறையிடம் நாம் புகார் அளித்ததின் பெயரில் இருதரப்பையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காவல்துறை அழைப்பையும் புறக்கணித்தனர், இந்த ஏகத்துவ விரோத கும்பல்.

மாலை 3 மணியளவில் ஆம்புலன்சில் வைத்து ஜனாஸா பள்ளியை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. ஆனால் நாம் வருவதை அறிந்த கும்பல் பள்ளியின் பிரதான வாயிலை உட்புறமாக பூட்டிக் கொண்டு ஜனாஸாவை உள்ளே எடுத்து செல்ல அனுமதி மறுத்தனர்.

இந்த ஏகத்துவ பிரச்சாரத்தின் எதிரிகள் தங்களை வீரர்கள் போல் காட்டி கொள்ளும் பலவேசம் போடும் SDPI கோழைகள், இவர்களோடு தற்போதைய குத்தாலம் தொகுதி தி.மு. MLA .அன்பழகனின் தனி உதவியாளர் செல்லப்பாவும் இணைத்து கொண்டு நம்மை எதிர்க்க ஆரம்பித்தனர்.

சுமார் 45 நிமிடங்கள் ஜனாஸா பள்ளிவாசலின் வாசலிலேயே வைக்கப்பட்டும் காவல்துறை கேட்டுக்கொண்டும் இந்த அசத்தியவாதிகளின் உள்ளம் சற்றும் இரக்கமில்லாமல் போனது.

ஆனால் கொள்கை சகோதரர்கள் ஜனாஸாவை நடுரோட்டில் வைத்து ஆக்ரோஷமான போராட்டத்தை துவக்கினர். நம் போராட்டத்தினால் படு டென்ஷனாக காணப்பட்டது குத்தாலம் கடைவீதி.

TNTJ சகோதரர்களின் வேகம், எழுச்சி, ஆக்ரோஷம் மேலும் நிமிடத்துக்கு நிமிடம் சகோதரர்களின் கூட்டம் அதிகமாவதை உணர்ந்த சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதைபோல "ஜனாஸா தொழுகையை எங்காவது வைத்துக் கொண்டு, அடக்கம் மட்டும் இங்கே செய்து கொள்ளுங்கள்" என்று கூறினர்.

சகோதரர்கள் அணிவகுக்க குத்தாலம் சர்புதீன் அவர்கள் தன் தந்தைக்கு இஸ்லாம் காட்டிய உரிமையின் அடிப்படையில் குத்தாலம் கடைவீதியில் தொழுகை நடத்தினார். பின்னர் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கொள்கையற்ற கூட்டத்தினர், எவ்வளவு திட்டம் தீட்டிய போதும், இடையூறு செய்த போதும், இறுதியில் ஏகத்துவத்திற்கு முன்னாள் மண்டியிட்டு சரணடைந்ததை மீண்டும் ஒரு முறை உண்மையாக்கியது இச்சம்பவம்.

செய்தி:ஆடுதுறை மன்சூர்
புகைப்படங்கள்: ரியாத் பைசல், வலங்கைமான் ரியாஜ்.