தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

அவ்லியாக்களின் சிறப்பு(?) !!



அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி என்பவர் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெரிய இமாம். அவ்லியாக்களை மதிப்பதில் இவர் முதல் இடத்தில் இருப்பதாக சுன்னத் வல்ஜமாஅத்தினர் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. ஃபத்வாக்கள் வழங்கும் போது இவரது கூற்றையும் மேற்கோள் காட்டுவதுண்டு. ஆன்மீகத்துக்கு அளப்பரிய சேவை செய்தவர் எனவும் இவரை சுன்னத் ஜமாஅத்தினர் புகழ்ந்து கூறுவதுண்டு. இரகசிய ஞானம்ஷரீஅத்தரீகத்ஹகீகத்,மஃரிபத் என்ற சித்தாந்தங்களுக்குப் புத்துயிரூட்டியவர் இவர். ஷைகுமுரீதுவியாபாரத்திற்கு அதிக அளவு விளம்பரம் செய்தவர்.

அவ்லியாக்கள்ஷைகுமார்கள் ஆகியோரின் வரலாறுகளைக் கூறுவதற்காகவே பல வால்யூம்களில் இவர் தபகாத் என்ற பெரும் நூல் எழுதியுள்ளார். மத்ஹபுவாதிகளாலும், (அஞ்)ஞானப் பாட்டையில் நடப்பவர்களாலும் ஒருசேர மதிக்கப்படுபவர் இவர்.

இவர் எழுதிய தபகாத் நூல்அவ்லியா பக்தர்களுக்கும் முரீதீன்களுக்கும் வேதம். இவரது இந்த அரிய பொக்கிஷம் பெரிய பெரிய அரபிக் கல்லூரிகளின் நூலகங்களை இன்றளவும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

அரபு தெரிந்தவர்கள் மட்டுமே படித்து ரசித்து வந்த இந்தப் பொக்கிஷத்தை அரபுதெரியாதவர்களும் ரசிக்க வேண்டாமாஎன்ற நல்லெண்ணத்தில் சில பகுதிகளை மட்டும் தமிழில் தருகிறோம். படித்து விட்டு அவ்லியாக்களை மதியுங்கள். நமது சொந்தக் கருத்தாக எதையும் இங்கே நாம் கூறவில்லை. அந்த நூலில் இடம் பெற்றுள்ள அரபி வாசகங்களில் நேரடித் தமிழாக்கம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. குறிப்பு என்று போடப்பட்ட விஷயங்கள் மட்டும் நமது விமர்சனம்.
அஷ்ஷைகு இப்ராஹீம்

ومنهم الشيخ إبراهيم العريان رضي الله تعالى عنه ورحمه…وكان رضي الله تعالى عنه يطلع المنبر ويخطب عرياناً، فيقول: السلطان ودمياط باب اللوق بين القصرين وجامع طيلون الحمد لله رب العالمين، فيحصل للناس بسط عظيم…وكان يخرج الريح بحضرة الأكابر، ثم يقول: هذه ضرطة فلان، ويحلف على ذلك، فيخجل ذلك الكبير منه، مات سنة نيف وثلاثين وتسعمائة

பொருள்: அந்த இறை நேசச் செல்வர்களில் ஒருவர் தான் நிர்வாணி அஷ்ஷைகு இப்ராஹீம் (ரலி) அவர்கள். அவர்கள் மிம்பரில் ஏறி நின்று நிர்வாணமாக குத்பா (சொற்பொழிவு) நிகழ்த்துவார்கள். அந்த உரையில் சுல்தான்,திம்யாத்,இரண்டு மாளிகைகளுக்கு இடையே உள்ள லூக் வாசல்தைலூன் பள்ளிவாசல் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று (அர்த்தமில்லாமல்) உளறுவார். இதைக் கேட்டு மக்கள் மகத்தான் ஞானம் பெறுவார்கள். பெரியவர்கள் முன்னிலையில் வேண்டுமென்றே காற்றைவெளிப்படுத்தும் இந்தப் பெரியார், (வேறு நபரைக் காட்டி) இது இந்த நபர் வெளிப்படுத்திய காற்று என்று சத்தியம் செய்து கூறுவார். சம்பந்தப்பட்ட அந்த மனிதரோ வெட்கமடைவார். இவர் 930 ஆம் ஆண்டில் மரனித்தார். (நூல்: தபகாத்பாகம்: 2. பக்கம்: 157)

நிர்வாணமாக ஒருவன் குத்பா ஓதி இருக்கிறான்அதை மக்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்;மேலும் வாயல் வந்த படி மிம்பரில் இருந்து உளறியுள்ளான். இத்தகைய கிறுக்கனை அந்த மக்களும் அவ்லியா என்று கொண்டாடி இருக்கின்றனர். ஷஃரானி என்பாரும் அவ்லியா பட்டியலில் சேர்த்துள்ளதைப் பார்க்கும் போது அவ்லியாக்கள் என்போரின் இலட்சனம் பளிச்செனத் தெரிகிறது.
(குறிப்பு: அவ்லியாக்களின் புகழ் பாடும் ஷேக் அப்துல்லாஹ் போன்றவர்கள் இந்த ம()கானின் வழியில் ஜும்ஆ மேடைகளில்இந்த அவ்லியாவைப் பின்பற்றி நிர்வாணமாக தனது பக்தர்களுக்குத் தரிசனம் தந்தாலும் தரலாம்.)

عن الغمري: ودخل عليه سيدي محمد بن شعيب، فرآه جالساً في الهواء، وله سبع عيون يقول. عن الشيخ أبو لعي: تدخل عليه تجده جندياً، ثم تدخل عليه، فتجده سبعاً، ثم تدخل عليه فتجده فيلاً، وكان يقبض من الأرض، ويناول الناس الذهب والفضة (ص 80، 81 جـ2 الطبقات).

இந்தப் பெரியாரிடம் எனது தலைவர் முஹம்மது இப்னு ஷுஐப் சென்ற போது அவர் அந்தரத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஏழு கண்கள் இருந்தன. இந்தப் பெரியாரைப் பற்றி அபூ அலீ என்பார் குறிப்பிடும் போதுஅவரிடம் நீ சென்றால் வெட்டுக்கிளியாகஅவரைக் காண்பாய். மறுபடியும் சென்றால் வனவிலங்காக அவரைக் காண்பாய். மீண்டும் அவரிடம் சென்றால் யானையாக அவரைக் காண்பாய். இந்தப் பெரியார் மண்ணை அள்ளி மக்களுக்கு வழங்கும் போது தங்கமாகவெள்ளியாக அவை மாறும்.

இவை சிறுவர் மலரில் இடம் பெறும் ஜோவின் சாகசம் அல்ல. பல அவதாரங்கள் பற்றிக்கூறும் புராணக் கதைகளும் அல்ல. அவ்லியாக்களை மகிமைப்படுத்தும் தபகாத் நூலில் பாகம்: 2, பக்கம் 80, 81ல் காணப்படும் விஷயங்கள் தான் இவை.

பொட்டல் புதூரில் யானை அவ்லியா இருப்பதைப் போன்று இனி வெட்டுக்கிளி அவ்லியா,காண்டாமிருக அவ்லியா என்று தர்ஹாக்கள் தோன்றினாலும் ஆச்சரியமில்லை.

كرامات علي أبو خودة: (وكان إذا رأى امرأة أو أمرد راوده عن نفسه وحسس على مقعدته سواء كان ابن أمير أو ابن وزير ولو كان بحضرة والده أو غيره ولا يلتفت إلى الناس)

அந்த இறை நேசச் செல்வர்களில் அபூகவ்தா எனும் அலீ அவர்களும் ஒருவராவார். இந்தப் பெரியார் ஒரு பெண்ணையோபருவமடையாச் சிறுவனையோ கண்டால் உடலுறவுக்கு அழைப்பார். அவர்களின் பின்பாகத்தில் தட்டிக் கொடுப்பார். மன்னனின் பிள்ளைகளானாலும்மந்திரியின் பிள்ளைகளானாலும் சரியே! பெற்றவர்கள்மற்றவர்கள் முன்னிலையிலானாலும் சரியே! மக்களை அவர் கவனிக்க மாட்டார்.  (தபகாத்பாகம்: 2,பக்கம்: 149)

சில்மிஷ வேலையைச் சாதாரண ஆள் செய்தால் அவனுக்குப் பெயர் காமுகன். பெரிய மனிதர் செய்தால் அவனுக்குப் பெயர் அவ்லியாஇறை நேசச் செல்வன்இந்த அவ்லியாபக்தர்கள்ஷைகுமார்களிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று இது போன்றுசெய்வதற்கு அனுமதிப்பார்களா?

إن شيخي أخذ على العهد في القبة تجاه وجه سيدي أحمد البدوي، وسلمني إليه بيده، فخرجت اليد الشريفة من القبروقبضت على يدي قال سيدي الشناوي: يكون خاطرك عليه، واجعله تحت نظرك، فسمعت سيدي أحمد يقول من القبر: نعم!. ولما دخلت بزوجتي، وهي بكر، مكثت خمسة أشهر لم أقرب منها، فجاء، وأخذني، وهي معي، وفرش فرشاً فوق ركن قبته، وطبخ لي حلوى، ودعا الأحياء والأموات إليه، وقال: أزل بكارتها هنا، فكان الأمر تلك الليلة
(الطبقات الكبرى ج1 ص161،162)

எனது ஷைகு அவர்கள்ஸய்யித் அஹ்மத் அல்பதவீ அவர்களின் அடக்கத் தலத்தில் ஒருஉடன்படிக்கை எடுத்தார். என்னை அஹ்மத் பதவியிடம் ஒப்படைத்தார். அப்போதுகப்ரிலிருந்து சிறப்பான கை வெளிப்பட்டது. என் கையைப் பற்றிக் கொண்டது. அப்போது என் ஷைகு ஷனாவீ அவர்கள்கப்ரை நோக்கிஉங்கள் கவனம் இவர் மீது இருக்கட்டும்! உங்கள் கண்காணிப்பில் இவரை வைத்துக் கொள்க! என்று (எனக்காக) வேண்டினார். அப்போது சமாதியிலிருந்துசரி என்று அவர் கூறியதை நான் கேட்டேன். நான் என் மனைவியிடம் சென்ற போது அவள் கன்னியாக இருந்தாள். ஐந்து மாதங்கள் அவளை நெருங்காமல் இருந்தேன். அப்போது ஸய்யித் அஹ்மத் பதவீ அவர்கள் (கப்ரிலிருந்து எழுந்து) வந்து என் மனைவியுடன் என்னைக் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று தமது அடக்கத் தலத்தின் மேல் விரிப்பை விரித்தார். எனக்காக இனிப்புப் பதார்த்தங்கள் தயார் செய்தார். அதை உண்பதற்காக உயிருடன் உள்ளவர்களையும்இறந்தவர்களையும் அழைத்தார். இங்கே இவளது கன்னித் தன்மையை நீக்கு என்று கூறினார். அன்று தான் முதலிரவானது.
(தபகாத்பதவீயின் வரலாறு பாகம் பக்கம் 161,162)

கப்ரிலிருந்து வந்து பர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதெல்லாம் சாத்தியமா?என்பது ஒரு புறமிருக்கட்டும். அனைவர் முன்னிலையிலும் முதலிரவு நடத்தச் சொல்வது தான் அவ்லியாக்களின் வேலையாஇப்படி நடந்தவர் அவ்லியாவாக இருக்க முடியுமா?என்பதே கேள்வி!

இந்த அவ்லியா பக்தர்கள்கன்னி கழியாவிட்டால் இனி கப்ரஸ்தான் பக்கம் போக வேண்டியது தான். அவனவன் ஊட்டிகொடைக்கானலில் தேனிலவு கொண்டாடுவான் என்றால் இந்தப் பரேலவிகளுக்கு கப்ருஸ்தானில் தான் தேனிலவு!

ஸய்யித் அல்அஜமீ

ومنهم سيدي يوسف العجمي الكوراني رضي الله تعالى عنه: وهو أول من أحيا طريقة الجنيد رضي الله عنه بمصر…ولقد وقع بصره يوماً على كلب، فانقادت إليه جميع الكلاب، إن وقف وقفوا، وإن مشى مشوا، فأعلموا الشيخ بذلك، فأرسل خلف الكلب، وقال: إخسأ، فرجعت عليه الكلاب تعضه حتى هرب منها. ووقع له مرة أخرى أنه خرج من خلوة الأربعين، فيقع بصره على كلب، فانقادت إليه جميع الكلاب، وصار الناس يُهرعون إليه (إلى الكلب) في قضاء حوائجهم، فلما مرض ذلك الكلب، اجتمع حوله الكلاب يبكون ويظهرون الحزن عليه، فلما مات أظهروا البكاء والعويل، وأَلْهَمَ الله تعالى بعض الناس فدفنوه، فكانت الكلاب تزور قبره حتى ماتوا(2)..
(الطبقات الكبرى ج2 ص62)

இந்தப் பெரியாரின் பார்வை ஒரு நாயின் மீது பட்டது. உடனே எல்லா நாய்களும் அந்தநாய்க்கு அடிபணிந்தன. மக்கள் எல்லாம் தங்கள் தேவைகளை நிறைவேற்ற இந்தநாயிடம் விரைந்து வரலாயினர். அந்த நாய் நோயுற்ற போது அதனைச் சுற்றி எல்லாநாய்களும் அழுதன. அது இறந்ததும் மக்கள் அழுதனர். நாய்கள் ஊளையிட்டன. சிலரதுஉள்ளத்தில் அதை அடக்கம் செய்யுமாறு இறைவன் உதிப்பை ஏற்படுத்தினான். அவ்வாறு அந்த நாயை அடக்கம் செய்தார்கள். நாய்கள் யாவும் அந்த நாயின் கப்ரை ஸியாரத் செய்யலாயின. அந்த நாய்கள் மரணிக்கும் வரை இது நடந்தது. இந்தப் பெரியாரின் பார்வை இந்த நாயின் மேல் பட்டதால் இவ்வளவு மகிமை என்றால் அவரது பார்வை மனிதன் மேல் பட்டால்…?
(தபகாத்பாகம்: 2, பக்கம்: 62)

யானைக்கும் கப்ரு கட்டியுள்ள பொட்டல்புதூர் வாசிகளே! உங்கள் செயலுக்கும் இந்த அவ்லியாவின் வாழ்வில் ஆதாரம் இருக்கிறது.

தமிழகத்தில் நாய்களை யாரும் இனி அடிக்கக் கூடாதுநாய்களுக்கும் இனி மேல் தர்ஹாக்கள் கட்ட வேண்டும் என்று சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மத்தியமாநிலஅரசுகளைக் கேட்டுக் கொள்கிறது என்று ஷேக் அப்துல்லாஹ் நடத்தும் மாநாடுகளில்தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.

كان رضي الله عنه إذا خرج مِن الخلوةيخرج وعيناه كأنَّهما قطعة جمرٍ تتوقد ، فكلُّ مَن وقع نظره عليه انقلبت عينُه ذهباً خالصاً

பொருள்: இந்தப் பெரியார் கல்வத்திலிருந்து வெளியே வந்தால் அவரது கண்கள் கொளுந்து விட்டு எரியும் தீப்பந்தம் போல் இருக்கும் யார் மீது இவரது பார்வைபடுகின்றதோ அவரது கண்கள் சொக்கத் தங்கமாக மாறி விடும். (தபகாத்பாகம்: 2, பக்கம்:61)

கண்கள் தங்கமாக மாறி விட்டால் எப்படிப் பார்க்க முடியும்என்றெல்லாம் கேள்விகேட்காதீர்கள். சுன்னத் ஜமாஅத் என்றால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு அபீ ஜம்ரா

عبد الله بن أبي حمزةقال أناأجتمع بالنبي صلى الله عليه وسلم يقظة ،فلزم بيته فلم يخرج إلاللجمعة حتى مات

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விழிப்பிலேயே நேரில் சந்திக்கிறேன் என்று இவர் சொன்னார். வீட்டிலேயே முடங்கிக் கொண்டார். அவர் மரணிக்கும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் வெளி வருவதில்லை.
(தபகாத்பாகம்: 1, பக்கம்: 15)

குறிப்பு: சாகும் வரை ஜும்ஆவைத் தவிர வேறு எதற்கும் இவர் வெளியே வர மாட்டாராம். ஐவேளை ஜமாஅத் தொழுகைக்குக் கூட வராதவன் எல்லாம் அவ்லியாவாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவிலும்நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக என்று சில சு.ஜ. ஆலிம்கள் தங்கள் சொற்பொழிவுகளில்கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விழிப்பில் ஒரு போதும் இந்தஉலகத்தில் சந்திக்க முடியாது என்று தெரிந்தும் இவர்கள் இப்படிப் பிரார்த்திக்கிறார்கள் என்றால் இந்தப் பலான அவ்லியாக்களைப் பின்பற்றித் தான்.