தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

மதுரை காமராஜர் பல்கலை.யில் தபால் வழி பிஎட்

மதுரை காமராஜர் பல்கலை.யில் 2 வருட பிஎட் படிப்பு தபால் வழியில் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், பயன்பாட்டுக்கணிதம், இயற்பியல், புவி இயற்பியல், உயிர் இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், உயிர் வேதியியல், பயன்பாட்டு வேதியியல், தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், உயிர்நுட்பவியல், தாவர உயிரியல், விலங்கியல், நுண்ணுயிரியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினியியல், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பவியல், மனைஅறிவியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 10+2+3 அல்லது 11+1+3 என்ற அடிப்படையில் படிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2 ஆண்டுகள் முழுநேர கற்பித்தல் அனுபவம் பெற்றிருப்பதுடன், தற்போது ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும்
பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல், அரசியல் அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் பாடங்களில் பிஎட் படிப்பில் சேர இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஎட் சேர்க்கைக்கான தகவல் அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவத்தை மதுரை காமராஜர் பல்கலையின் தொலைநெறிக்கல்வி இயக்ககத்தில் 'Director, DDE, MKU, Madurai' என்ற பெயரில் ¢500க்கான கேட்பு வரைவோலை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.தபாலில் பெற ¢550க்கான கேட்பு வரைவோலை அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 'இயக்குனர், தொலைநெறிக்கல்வி இயக்ககம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை625021' என்ற முகவரிக்கு வரும் மார்ச்.7க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் உறையின் மீது பிஎட் சேர்க்கைக்கான விண்ணப்பம் என்று குறிப்பிடவும். வரைவோலையின் பின்புறம் மாணவரின் பெயர், முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும். கல்விக்கட்டணம், வகுப்புகள் துவங்கும் காலம் உள்ளிட்ட விவரங்களை www.mkudde.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்