தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

சர்வதேச ஐ.டி. கல்லூரியில் உயர் படிப்புகள் !!

ISquareit/I2IT Logo
தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கு எப்போதுமே மாணவர்கள் மத்தியில் மவுசு உண்டு. அதிக சம்பளம் முக்கிய காரணம்.  கூடுதலாக முதுநிலைஆராய்ச்சி படிப்புகளை படிப்பவர்கள் எளிதில் வேலைவாய்ப்பை தட்டிச்சென்று விடுகிறார்கள்.
 
புனேயில் செயல்பட்டு வரும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் எம்டெக்எம்எஸ்பிஎச்டி உள்ளிட்ட முதுநிலை,ஆராய்ச்சி படிப்புகள் அளிக்கப்படுகின்றன. எம்டெக் அட்வான்ஸ்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி என்றபடிப்பில் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ்நெட்வொர்க்கிங் அண்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ்எம்பெட்டட் சிஸ்டம்ஸ் டிசைன்,மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் விஎல்எஸ்ஐ டிசைன்,நானோ பயோடெக்னாலஜிஇன்டெலிஜன்ட் டிரான்ஸ்போர்டேஷன் சிஸ்டம்ஸ்சாட்டிலைட் கம்யூனிகேஷன் அண்ட் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ்ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் அண்ட் &மனுபாக்சரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன

இதேபோல் எம்டெக் பிரிவில் மொபைல் கம்யூனிகேஷன் அண்ட் கம்ப்யூட்டிங் படிப்பும் நடத்தப்படுகிறது. எம்எஸ் பயோடெக்னாலஜி என்றழைக்கப்படும் படிப்பில் அப்ளைடு பயோடெக்னாலஜிபயோஇன்பர்மேட்டிக்ஸ்ஸ்டெம் செல் பயாலஜிமாலிக்யூலர் மெடிசின் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும் எம்எஸ் நானோசயின்ஸ் அன்ட் நானோடெக்னாலஜிஎம்எஸ் சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் ஆகிய படிப்புகளும் நடத்தப்படுகின்றன. வரும் ஜூலை 11ம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளன.

ஆராய்ச்சி படிப்பை பொருத்தவரை (Ph.D Integrated) முழுநேரம்,பகுதிநேரமாக சயின்ஸ்டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. www.isquareit.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர் சேர்க்கை தகுதி,விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பக்கட்டணம்அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். வரும் மார்ச் 14&ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்