தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு "தத்கல்' திட்டம் அறிவிப்பு!

சென்னை:"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறியவர்கள், "தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., தனித்தேர்வர்கள், "தத்கல்' திட்டத்தில், மார்ச் 14 முதல், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். சிறப்புக் கட்டணம், 500 ரூபாய், தேர்வுக் கட்டணம், 125 ரூபாய் சேர்த்து, 625 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில் மாணவர்கள் நேரில் ஒப்படைக்க வேண்டும். மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வர்களுக்கும், மேற்கண்ட தேதிகளில், துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இம்மாணவர்கள், சிறப்புக் கட்டணம், 500 ரூபாய், தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்திற்கு, 100 ரூபாய் மற்றும் இதர கட்டணங்களாக, 35 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில், மாணவர்கள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Source: dinamalar