தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஜும்மா - இமாம் கையில் வாளும் கைத்தடியும்...!

மாம், ஜும்மா உரையின் போது கைத்தடி அல்லது வாளை வைத்து நிற்பது மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட புதிய நடைமுறையாகும்
(பித் அத்தாகும்!) . இந்த புதிய நடைமுறை செய்பவர்கள் தமக்கு ஆதாரமாக சில நபி மொழிகளை சான்றாக முன் வைக்கின்றனர்.எனவே அந்த சான்றுகளையும் ,அவற்றின் தரங்களையும் கண்போம்.
ஆதாரம் :1
நாங்கள் ரசூல்(ஸல்)அவர்களுடன் ஒரு ஜும்மாவில் கலந்து கொண்டோம் அப்போது தன்னுடைய கவுட்டையின்(வில்லின்)மீதோ அல்லது கம்பின் மீதோ சாய்ந்து கொண்டு அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்தார்கள்
அறிவிப்பாளர் :ககம் பின் கஸ்ன்(ரலி)
நூல் :அபுதாவூத்(924)
மேற்கண்ட ஹதீஸ் பலவீனமாகும் ஏனெனில் இந்த ஹதீஸில் “ஷீகாப் பின் கிராஷ்”என்பவர் இடம் பெறுகிறார்கள்.இவர் பலவீனமானவர் என்று இப்னு கிப்பான் கூறியுள்ளார்
நூல்:தக்தீபுத்தக்தீப் பாகம்:4 ப் பக்கம்:366
ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் ஓரளவு சரியாக இருந்தாலே அவர் நல்லவர் என்றும் நம்பகமானவர் என்றும் சான்றளிக்கும் இப்னு கிப்பான் அவர்களே இவரை பலவீனமானவர் என்று சொல்கிறார் என்றால் இவர் அறிவிக்கும் இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது.

ஆதாரம் :2
ரசூல்(ஸல்) அவர்களின் ஒரு பிரயாணத்தில் மக்களுக்கு கவுட்டையின் வுரையின் மீது சாய்ந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்:தப்ரானி (அல்முஃஜமுல் கபீர்) (12098)
இந்த ஹதீஸில் இடம் பெறும் அபூ ஷைபா என்பவர் ஹதீஸ் கலை அறிஞரால் விடப்பட்டவராவார்
நூல்:லுஅஃபாவுல் மத்ருகீன் பாகம்:2 பக்கம்:233
எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது

ஆதாரம் :3
ரசூல்(ஸல்)அவர்கள் போரின் போது உரை நிகழ்த்தினால் கவுட்டையின் (வில்லின்) மீது சாய்ந்து கொள்வார்கள் ஜும்மாவின் போது பிரசங்கம் செய்தால் கம்பின் மீது சாய்ந்து கொள்வார்கள்
அறிவிப்பவர்:ஸஃது (ரலி)
நூல்:இப்னுமாஜா(1097)
இந்த ஹதீசும் பலவீனமானதாகும் .ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில்”அப்துர் ரக்மான் பின் லஸ்து”என்பவர் இடம் பெறுகிறார்.இவர் பலவீனமானவர்.
நூல்: தக்தீப்புத்தக்தீப் , பாகம் ,பக்கம்:183
அது மட்டுமின்றி அப்துர் ரஹ்மான் யாரிடமிருந்து அறிவித்தாரோ அந்த ஸ்ஃது என்பர் யார்? என்ற நிலையே அறியப்படாமல் இருக்கிறது
நூல்:தக்தீப்புத்த்க்தீப் ,பாகம்:3, பக்கம்:479
இந்த இரன்டு முக்கிய காரணங்களால் இந்த ஹதீசும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது

ஆதாரம் :4
இப்னு ஜீரைஜ் அறிவிப்பதாவது நான் ‘அதா’விடம் ரசூல்(ஸல்)அவர்கள் உரை நிகழ்த்தினால் கம்பை பிடித்து நிற்பார்களா? என்று கேட்டேன்.அதற்க்கு அவர் ‘ஆம்’ என்றார்கள்.
நூல்:உம்மு . பாகம்:1 பக்கம்:177
நூல்:முஷ்னத் ஷாபீஈ பாகம்:1 பக்கம்:168
மேற்கண்ட செய்தி, “முர்ஸலனா(ஸகாபி விடுபட்டு அறிவிக்கப்பட்ட) ஹதீஸாகும். ”.எனவே இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாது.
மேற்கண்ட எந்த ஹதீஸிலும் “வாள்” வைத்து நின்றார்கள் என்றும் இல்லை. அத்துடன் கம்பின் மீதும் வில்லின் மீதும் சாய்ந்து உரை நிகழ்த்தினார்கள் என்று வந்த எந்த ஹதீஸீம் ஆதாரப்பூர்வமானதில்லை.
எனவே எதையும் ஊன்றிப்பிடிக்காமல் நின்று உரையாற்றுவதே நபி வழியாகும்.