தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகள்

மக்கள் தொகை கணக்கெடுக்க வருபவர்கள் கீழ்க்காணும் கேள்விகளை கேட்க இருப்பதால் அதற்கு நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
1.குடும்ப தலைவரின் பெயர், 2.குடும்ப தலைவருக்கு உறவு முறை, 3.இனம், 4, பிறந்த தேதி, வயது, 5.தற்போதைய திருமண நிலை. 6.திருமணத்தின்போது வயது, 7.மதம், 8, ஷெட்யூல்டு வகுப்பு, ஷெட்யூல்டு பழங்குடி, 9.மாற்றுதிறனாளியா? 10. தாய்மொழி, 11. அறிந்த பிற மொழிகள், 12.எழுத்தறிவு நிலை, 13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை. 14. அதிகபட்ச கல்வி நிலை. 15.கடந்த ஆண்டில் எப்போதாவது வேலை செய்தாரா? 16.பொருளாதார நடவடிக்கையின் வகை, 17. குடும்ப தலைவரின் தொழில். 18.தொழில், வியாபாரம்(அ) சேவையின் தன்மை. 19.வேலை செய்பவரின் வகை. 20.பொருளீட்டா நடவடிக்கை, 21. வேலை தேடுகின்றாரா(அ)வேலை செய்ய தயாரா?. 22. பணி செய்யும் இடத்திற்கு பயணம், 23. பிறந்த இடம், 24. கடைசியாக வசித்த இடம், 25.இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள், 26. இந்த கிராமம்/நகரத்தில் இடப்பெயர்ச்சிக்கு பின் வசித்து வரும் காலம், 27.உயிருடன் வாழும் குழந்தைகள், 28.உயிருடன் பிறந்த குழந்தைகள், 29.கடந்த ஓராண்டில் (உயிருடன்) பிறந்த குழந்தைகள்