தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

சட்டசபை தேர்தலில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்க பரிசீலனை!

சட்டசபை தேர்தலில் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்க தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் மே மாதம் நடக்கிறது. தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக, வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கும் இத்தேர்தலில் ஓட்டுரிமை அளிக்க, இந்திய தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், இங்குள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் எப்படி சேர்ப்பது, அதற்கான தகுதிகள் என்னென்ன, அவர்கள் எங்கு ஓட்டளிப்பது என்பது குறித்து விரிவாக அறிக்கை அனுப்பப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தேர்தலை நடத்துவதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் மண்டல அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான கட்டுப்பாட்டு அறை, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் விரைவில் திறக்கப்படவுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை அரசியல் கட்சிகள்,பொதுமக்கள் அங்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நன்றி: தினமலர்