தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

மமக நெல்லை மாவட்ட செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ல் இணைந்தார்


             மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் புளியங்குடி செய்யது அலி அக்கட்சியிலிருந்து விலகி தவ்ஹீத் ஜமாஅத்தில் சேர்ந்தார்.
மமக மாவட்ட செயலாளர் செய்யது அலி 28.01.2011 அன்று நெல்லை பத்திரிக்கயைôளர்களைச் சந்தித்து கூறியதாவது : கடந்த 1995ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கிளை முதல் நகரம், ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என்று பல்வேறு பொறுப்புகளில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, பிரதிபலனை எதிர்பாராமல் இரவு பகல் வேறுபாடின்றி, தலைநகர் சென்னை முதல் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை த.மு.மு.க. இயக்கம் வளர அயராது பாடுபட்டு ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும் காவல்துறையாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு ஜமாஅத்தார்களால் ஊர்நீக்கம், சொந்த குடும்பத்தார்களால் விரட்டி அடிப்பு, பிரச்சார களங்களில் மோதல், உயிர் பலி என்று பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் வளர்க்கப்பட்ட இயக்கம் த.மு.மு.க.
ஆனால் இந்த இயக்கம் இன்று இரண்டு தனிப்பட்ட நபர்களின் (ஜவாஹிருல்லாஹ். ஹைதர்அலி) சொத்தாக மாறிவிட்டது. இவர்களின் ஜனநாயக விரோத, எதோச்சதிகாரத்தை கண்டித்து கருத்துரைக்கும் நிர்வாகிகளின் மீது பொய் புகார்களைக் கூறி எவ்வித விசாரணையும் இன்றி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் போக்கு இன்று வாடிக்ககையாகிவிட்டது.
கழகம் ஆரம்பிக்கும் போது ஊர்மக்கள் பணத்தை ஏமாற்றி விட்டு பாதுகாப்புத் தேடி த.மு.மு.கவில் சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்த த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி இன்று கட்டப் பஞ்சாயத்து வக்பு வாரிய பொறுப்புகளின் மூலமாக பல கோடிக்கு அதிபதியாகி விட்டார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலும் பேசாமலும் எதிரில் சந்தித்தாலும் பரஸ்பர ஸலாம் கூட சொல்லிக் கொள்ளாமல் சண்டையிட்டுக் கொண்டு தனித்தனி கோஷ்டிகளை உருவாக்கி இன்றைக்கு எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் எம்எல்ஏ கனவுகளோடு இணைந்துள்ளார்கள். இவ்விருவர்களின் பதவி சுகத்திற்காக கழகத்தின் அமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலாவை) மாற்றம் செய்து, திருத்தம் மேற்கொண்டு திரும்பவும் தாங்களே தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளில் வலம் வரத் துடிக்கும் ஈனச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
முஸ்லிம் சமுதாயப் பெரியவர்களால் சமுதாய நலனுக்காக வழங்கப்பட்ட வக்பு சொத்துக்ளை ஆக்ரமித்துள்ளவர்களிடம் வாரியத் தலைவராக இருக்கும் போது பணம் பெற்றுக் கொண்டு வக்பு சொத்துகளில் பெருமளவில் மோசடியில் ஈடுபட்டதுடன் தர்கா இனாம்தார்களையும் முத்தவல்லிகளையும் மிரட்டி பணம் பறித்த ஹைதர் அலியும் ஜவாஹிருல்லாவும் சேர்ந்து கொண்டு புளியங்குடி தவ்ஹீத் ஜமாஅத் அறக்கட்டளைக்குப் பாத்தியப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் சொத்தை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்து கொடு என அறக்கட்டளை நிறுவனரான புளியங்குடி செய்யது அலியாகிய என்னை மிரட்டி வருகிறார்கள்.
மேற்படி அறக்கட்டளைக்குச் சொந்தமான இடமானது. கடந்த 2004ஆம் ஆண்டு புளியங்குடியைச் சேர்ந்த தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொண்ட நபர்களின் முயற்சியால் வாங்கப்பட்ட சொத்தாகும். இந்த சொத்திற்கும் த.மு.மு.கவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் எங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாலும் கேடு கெட்ட இந்தச் செயலை கண்டித்து நாங்கள் வகித்து வரும் ம.ம.க. மாவட்டச் செயலாளர் புளியங்குடி செய்யது அலியாகிய நானும், பொருளாளராகிய சகோ. எம். சுல்தான் மைதீனும் மமகவின் அடிப்படை உறுப்பினர் மற்றுமுள்ள அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதுடன் சமுதாய சகோதர மக்கள் இந்த மோசடித் தலைமையில் இருந்து விலகி தூய இஸ்லாமியப் பாதையில் செல்லக் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைகிறோம்.
மற்றும் எங்களுடன் வாசு ஒன்றிய தலைவர் செய்யது அலி பாதுஷா, புளியங்குடி நகர நிர்வாகிகள் எஸ்.அப்துல் <ம்ஹண்ப்ற்ர்:எஸ்.அப்துல்> ஜப்பார் ஏ.முஹம்மது அலி பிலால், எஸ்.அஷ்ரப் <ம்ஹண்ப்ற்ர்:எஸ்.அஷ்ரப்> பிலால், முஹம்மது மீறான், சேக் மைதீன், ஜாஹிர் உசேன் ஆகியோர் த.மு.மு.கவிலிருந்து விலகி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்துள்ளனர்.

குறிச்சிகுளம் சுலைமான்