தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

3.5% உள் ஒதுக்கீடு மூலம் 1,774 முஸ்லிம்களுக்கு அரசு வேலை



தக்கலை: தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு அளித்துள்ள 3. 5 சதவீத உள் ஒதுக்கீட்டால் இதுவரை 1774 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் மாலிக் பெரஸ்கான் தெரிவித்தார். 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஆகியவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குமரி மாவட்டம் தக்கலையில் நடந்தது.

இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் மாலிக் பெரஸ்கான் கலந்து கலந்துகொண்டு பேசியதாவது, 

இஸ்லாமியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 5 இடங்களில் மாணவிகளுக்கு விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. 3.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை 18591 பேர் பயன் அடைந்துள்ளனர். 1774 பேருக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. 16518 பேர் தொழில்நுட்ப கல்வியும், 306 பேர் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்றார்